TNT 1.6

"O Mind! Let Us Go Worship at Tirukkōvalūr, Come."

மனமே! திருக்கோவலூர் தொழலாம், வா

2057 அலம்புரிந்தநெடுந்தடக்கைஅமரர்வேந்தன்

அஞ்சிறைப்புள்தனிப்பாகன், அவுணர்க்கு என்றும் *

சலம்புரிந்தங்கருளில்லாத்தன்மையாளன்

தானுகந்தஊரெல்லாம்தன்தாள்பாடி *

நிலம்பரந்துவரும்கலுழிப்பெண்ணையீர்த்த

நெடுவேய்கள்படுமுத்தமுந்தவுந்தி *

புலம்பரந்தபொன்விளைக்கும்பொய்கைவேலிப்

பூங்கோவலூர்த்தொழுதும்போதுநெஞ்சே!

Text size