PT 2.10.9

I Saw the One Who is Like the Grace-Bestowing Kalpaka Tree

அருள்புரியும் கற்பகமரம் போன்றவனைக் கண்டேன்

1146 தூவடிவின்பார்மகள்பூமங்கையோடு

சுடராழிசங்குஇருபால்பொலிந்துதோன்ற *

காவடிவின்கற்பகமேபோலநின்று

கலந்தவர்கட்குஅருள்புரியும்கருத்தினானை *

சேவடிகைதிருவாய்கண்சிவந்தவாடை

செம்பொன்செய் திருவுருவமானான்தன்னை *

தீவடிவின்சிவனயனேபோல்வார்மன்னு

திருக்கோவலூரதனுள்கண்டேன்நானே.

Text size