PT 2.10.1

He Who Slept on the Banyan Leaf is in Tirukkōvalūr

ஆலிலைத் துயின்றான் திருக்கோவலூரில் உள்ளான்

1138 மஞ்சாடுவரையேழும்கடல்களேழும்

வானகமும்மண்ணகமும்மற்றும்எல்லாம் *

எஞ்சாமல்வயிற்றடக்கிஆலின்மேல்ஓரிளந்தளிரில்

கண்வளர்ந்தஈசன்தன்னை *

துஞ்சாநீர்வளம்சுரக்கும்பெண்ணைத்தென்பால்

தூயநான்மறையாளர்சோமுச்செய்ய *

செஞ்சாலிவிளைவயலுள்திகழ்ந்துதோன்றும்

திருக்கோவலூரதனுள் கண்டேன்நானே. (2)

Text size