TVT 53

கட்டுவிச்சி கூறல்

2530 வாராயினமுலையாளிவள் வானோர்தலைமகனாம் *
சீராயினதெய்வநன்னோயிது * தெய்வத்தண்ணந்துழாய்த்
தாராயினும்தழையாயினும்தண்கொம்பதாயினும் கீழ்
வேராயினும் * நின்றமண்ணாயினும்கொண்டுவீசுமினே.
2530 vār āyiṉa mulaiyāl̤ ival̤ * vāṉor talaimakaṉ ām *
cīr āyiṉa tĕyva nal noy itu ** tĕyvat taṇ am tuzhāyt
tār āyiṉum tazhai āyiṉum taṇ kŏmpu atu āyiṉum * kīzh
ver āyiṉum * niṉṟa maṇ āyiṉum kŏṇṭu vīcumiṉe53

Ragam

Thalam

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2530. The fortuneteller says, “She fell in love with the god of the gods in the sky and is sick with love for him. Bring a thulasi garland or a leaf from it or a beautiful branch of the plant or its root and fan her with it. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இவள் இப்பராங்குச நாயகியின்; வார் ஆயின கச்சணிந்த; முலையாள் மார்பகங்களையுடைய; இது இந்த நோயானது; வானோர் நித்யசூரிகள்; தலைமகன் ஆம் தலைவனின்; சீர் ஆயின கல்யாணகுணங்களில் ஈடுபட்ட; தெய்வ தெய்வத்தினால்; நல் நோய் வந்த நல்ல நோய் ஆகையால்; தெய்வ அத்தேவதையின்; தண் அம் துழாய் குளிர்ந்த அழகிய துளசியின்; தார் ஆயினும் மாலையையாவது; தழை ஆயினும் இதழ்களாவது; தண் குளிர்ந்த; கொம்பு அது ஆயினும் கிளையாவது; கீழ் வேர் ஆயினும் கீழே இருக்கும் வேராவது; நின்ற அது நின்ற; மண் ஆயினும் மண்ணையாவது இவள் மீது; கொண்டு வீசுமினே கொண்டுவந்து வீசுங்கள்
ival̤ this nāyaki; vār āyina apt bodice with which to tie; mulayāl̤ having bosom; idhu this disease; vānŏr for nithyasūris; thalaimaganām being the lord; sīr āyina having auspicious qualities; dheyvam caused due to the deity; nal distinguished; nŏy resulted as disease; dheyvam being related to that deity, ṣrīman nārāyaṇan; thaṇ being cool; am being beautiful; thuzhāy divine thul̤asi’s; thār āyinum whether it is a bunch of flowers; thazhaiyāyinum whether it is the petals; thaṇ cool; kombadhāyinum whether it is the stem; kīzh seen below it; vĕr āyinum whether it is the root; ninṛa from which that divine thul̤asi plant sprouted; maṇṇāyium whether it is the soil; koṇdu bringing that; vīsumin blow it such that the wind from that [object] falls on her