TVT 54

வண்டு விடுதூது

2531 வீசும்சிறகால்பறத்திர் * விண்ணாடுநுங்கட்கெளிது
பேசும்படியன்னபேசியும்போவது * நெய்தொடுவுண்டு
ஏசும்படியன்னசெய்யும்எம்மீசர்விண்ணோர்பிரானார்
மாசில்மலரடிக்கீழ் * எம்மைச்சேர்விக்கும்வண்டுகளே!
2531 vīcum ciṟakāl paṟattīr * viṇ nāṭu nuṅkaṭku ĕl̤itu *
pecum paṭi aṉṉa peciyum povatu ** nĕy tŏṭu uṇṭu
ecumpaṭi aṉṉa cĕyyum ĕm īcar viṇṇor pirāṉār *
mācu il malar aṭikkīzh * ĕmmaic cervikkum vaṇṭukal̤e54

Ragam

Thalam

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2531. Sending bees as messengers, she says, “O bees, it is easy for you to fly to the sky where he is. Before you go to see him, make sure you remember clearly the message that I give you. Go to his faultless lotus feet and tell him. The cowherd women scolded him because he stole their butter and ate it, but I won’t say anything like that. Help me reach his faultless feet. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
விண்ணோர் பிரானார் நித்யசூரிகளின் ஸ்வாமி; நெய் தொடு உண்டு நெய்யை களவு செய்து உண்டு; ஏசும் படி அன்ன பரிகாசம்; செய்யும் செய்யும்படியாக நடந்துகொண்டு; எம் ஈசர் நம் ஈசனான பெருமானின்; மாசில் மலர் குற்றமற்ற புஷ்பம் போன்ற; அடிக் கீழ் திருவடிகளின் கீழ்; எம்மைச் சேர்விக்கும் எம்மைச் சேர்விக்கும்; வண்டுகளே வண்டுகளே!; வீசும் சிறகால் வேகமாக வீசுகிற சிறகுகளாலே; பறத்திர் பறந்து செல்லவல்லீர்; விண் நாடு பரமபதம் செல்வது; நுங்கட்கு எளிது உங்களுக்கு எளிது; பேசும் படி அங்கு சென்று பேசும்படி சொன்ன; அன்ன அந்த வார்த்தைகளை; பேசியும் எனக்கு ஒரு முறை பேசி; போவது காட்டுங்கள்
viṇṇŏr for nithyasūris; pirānār being their lord; ney ghee; thodu stealing; uṇdu eating it; ĕsumbadi such that (enemies) ridicule; anna activities like that; seyyum one who carries out; em īsar being our swāmy, his; māsu il without any fault; malar like a soft flower; adikkīzh under [his] divine feet; emmai us; sĕrvikkum having the ability to take us [there]; vaṇdugal̤ĕ ŏh beetles!; vīsum spread out; siṛagāl with wings; paṛaththīr you are flying; nungatku for you; viṇṇādu paramapadham which is in paramākāṣam; el̤idhu will be easy (and natural); pĕsumbadi whatever is to be spoken (there); anna those words; pĕsiyum pŏvadhu should speak (in our presence)