Chapter 3

Āzhvār's fear is appeased on realizing that those loyal to the Lord are everywhere - (அங்கும் இங்கும்)

எம்பெருமானுக்கு எங்கும் அன்புடையார் உளர் என்பதை அருளால் உணர்ந்து ஆழ்வார் அச்சம் தீர்தல்
Contemplating upon the beauty and elegance of Bhagavān’s physical attributes, Āzhvār, riddled with worry, says, “In this place where hostile people live, emperumAn parades around displaying His exquisite beauty! What if something untoward happens to Him?” Bhagavān responds saying, “Don’t fret Āzhveer. Mukthar, Nithyar and Mumukshu(s) are here to show their loyalty to me.” These divine hymns expound on how Āzhvār’s worry was soothed.
ஆழ்வார், பகவானின் எழில்மிகு சுகுமாரமான வடிவழகை நினைத்து “எம்பெருமான், அனுகூலர்களாக இல்லாதவர்கள் வாழும் இந்நிலத்தில் தன் வடிவழகைக் காட்டிக் கொண்டு உலாவுகிறானே! இவனுக்கு என்ன தீங்கு நேருமோ?” என்று அஞ்சினார். பகவான் “ஆழ்வீர், நீர் அஞ்ச வேண்டாம். என்மீது பரிவு காட்ட முக்தர், நித்யர், முமுக்ஷக்கள் அனைவரும் இருக்கின்றனர்” என்று கூறினான். அதனால் ஆழ்வார் அச்சம் தீர்ந்தமை ஈண்டுக் கூறப்பட்டுள்ளது.
Verses: 3585 to 3595
Grammar: Kalinilaiththuṟai / கலிநிலைத்துறை
Pan: நட்டபாடை
Timing: 1.13-2.24 PM
Recital benefits: will not be born in this wide world
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

TVM 8.3.1

3585 அங்குமிங்கும் வானவர்தானவர் யாவரும் *
எங்குமிணையையென்று உன்னையறியகிலாதுஅலற்றி *
அங்கஞ்சேரும் பூமகள்மண்மகளாய்மகள் *
சங்குசக்கரக்கையவனென்பர் சரணமே. (2)
3585 ## அங்கும் இங்கும் * வானவர் தானவர் * யாவரும்
எங்கும் இணையை என்று * உன்னை அறியகிலாது அலற்றி **
அங்கம் சேரும் * பூமகள் மண்மகள் ஆய்மகள் *
சங்கு சக்கரக் கையவன் என்பர் * சரணமே (1)
3585 ## aṅkum iṅkum * vāṉavar tāṉavar * yāvarum
ĕṅkum iṇaiyai ĕṉṟu * uṉṉai aṟiyakilātu alaṟṟi **
aṅkam cerum * pūmakal̤ maṇmakal̤ āymakal̤ *
caṅku cakkarak kaiyavaṉ ĕṉpar * caraṇame (1)

Ragam

Varāḷi / வராளி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

The celestial beings, the gods, and all other entities, whether here, there, or everywhere, can scarcely comprehend You fully. They perceive You primarily as their savior in times of need, the one who wields the conch and discus and is adorned by the triple divine consorts.

Explanatory Notes

The highest love to God is love rendered for God’s sake, love culminating in benediction or glorification of God. Love, so disinterestedly rendered, is love of purity and virginity and, under its influence, what is uppermost in the mind of the devotee is the Lord’s remarkable tenderness (Saukumārya) and bewitching beauty and he grows apprehensive of the Lord’s safety and + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
அங்கும் பரமபதத்திலும்; இங்கும் இந்த பூ உலகத்திலும்; எங்கும் எல்லா இடத்திலும்; வானவர் தானவர் தேவர்கள் அசுரர்கள்; யாவரும் முதலான யாவரும்; இனையை என்று உள்ளபடி அறியப்பெறாது; அலற்றி உன்னை எதையோ சொல்லிக் கூப்பிட்டு; பூமகள் திருமகள்; மண்மகள் பூமாதேவி; ஆய்மகள் நீளாதேவி ஆகியோர்; அங்கம் உன் திருமேனியில்; சேரும் சேர்ந்திருக்கிறார்கள் என்றும்; சங்கு சக்கர சங்கு சக்கரத்தை; கையவன் கையிலுடையவன் என்றும்; என்பர் நீ காப்பாற்றுபவன் என்பரே தவிர; சரணமே உன் அழகுக்குப் பல்லாண்டு பாடமாட்டார்கள்
engum in all regions (such as pāthāl̤a etc); vānavar (favourable) dhĕvas (celestial beings); thānavar (unfavourable) asuras (demoniac beings); yāvarum humans and all (in the same manner); unnai you (who are with the enjoyable consorts); inaiyai such enjoyable person; enṛu as; aṛiyagilādhu without knowing; alaṝi calling out (highlighting his omnipotence etc which are useful for his protection); pūmagal̤ lakshmi who is an embodiment of the fragrance of flower; maṇmagal̤ bhūmi dhĕvi (who is an embodiment of enjoyment due to being fragrant); āymagal̤ nīl̤ā dhĕvi (who has high family heritage); angam his divine form; sĕrum remaining inseparable and enjoying; sangu chakkaram (enjoyable) āzhvārs; kaiyavan emperumān who holds them in their hands; saraṇam one who is the means for fulfilling our desires (due to having complete purushakāram (recommendation) [in pirāttis]); enbar will say.; saraṇamāgiya refuge; nāl having four divisions

TVM 8.3.2

3586 சரணமாகிய நான்மறைநூல்களும்சாராதே *
மரணம்தோற்றம் வான்பிணிமூப்பென்றிவைமாய்த்தோம் *
கரணப்பல்படை பற்றறவோடும்கனலாழி *
அரணத்திண்படையேந்திய ஈசற்காளாயே.
3586 சரணம் ஆகிய * நான்மறை நூல்களும் சாராதே *
மரணம் தோற்றம் * வான்பிணி மூப்பு என்று இவை மாய்த்தோம் **
கரணப் பல் படை * பற்று அற ஓடும் கனல் ஆழி *
அரணத் திண் படை ஏந்திய * ஈசற்கு ஆளாயே (2)
3586 caraṇam ākiya * nāṉmaṟai nūlkal̤um cārāte *
maraṇam toṟṟam * vāṉpiṇi mūppu ĕṉṟu ivai māyttom **
karaṇap pal paṭai * paṟṟu aṟa oṭum kaṉal āzhi *
araṇat tiṇ paṭai entiya * īcaṟku āl̤āye (2)

Ragam

Varāḷi / வராளி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

Even those who forsake the path laid out by the Vedas, aspiring only for liberation from the cycle of birth and death, along with afflictions and aging, fail to engage in the service of the Lord who wields the grand galaxy of protective weapons.

Explanatory Notes

In the preceding song, the Saint condemned those who hanker after the transient riches, instead of getting soley absorbed in God-love. And now, he speaks disparagingly of the ‘Kevalas’, those whose final goal is limited to mere emancipation from the terrific cycle of birth and death and remain-ling thereafter in disembodied state, lost for ever in that stupid self-enjoyment, + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
சரணம் ஆகிய புகலிடமாய்; நான்மறை நான்கு வேதங்களாகிற; நூல்களும் சாஸ்த்திரங்களை; சாராதே பற்றாமல்; கரண உபகரணங்களையுடைய; பல் படை பலவகைப்பட்ட சத்ரு சேனைகள்; பற்று அற ஓடும் மிச்சமில்லாமல் ஓடும்படி; கனல் ஆழி அழிக்கும் சக்கரத்தை உடைய; அரண அடியார்களுக்கு அரணாய்; திண் படை ஸ்திரமான ஆயுதத்தை; ஏந்திய ஈசற்கு ஏந்திய எம்பெருமானுக்கு; ஆளாயே ஆட்பட்டதாகவும்; மரணம் தோற்றம் மரணம் பிறப்பு; வான்பிணி பெரிய வியாதி; மூப்பு என்று முதுமை கிழத்தனம் என்னும்; இவை மாய்த்தோம் இவைகளை ஒழித்தோம்
maṛai vĕdhas; nūlgal̤um ṣāsthras; sārādhĕ instead of depending upon (in the superficial meanings as said in ṣrī bhagavath gīthā 2.42 -vĕdha vādha rathā: pārtha nānyadhasthīthi vādhina:-); karaṇam harmful tools; pal many types; padai enemy armies; paṝu faith; aṛa to lose; ŏdum to flee; kanal fiery; āzhi thiruvāzhi āzhwān (ṣudharṣana chakra); araṇam protection; thiṇ firm; padai weapon; ĕndhiya one who is holding; īsaṛku for sarvĕṣvara; āl̤āy being the servitor; maraṇam death; thŏṝam birth; vān great; piṇi disease; mūppu old age; enṛu as said; ivai the six types of changes; māyththŏm we have got rid of them.; gyālaththu in this world (where people like rāvaṇa, dhuryŏdhana et al live); āl̤um servitors (who care)

TVM 8.3.3

3587 ஆளுமாளார் ஆழியும்சங்கும்சுமப்பார்தாம் *
வாளும்வில்லுங்கொண்டு பின்செல்வார்மற்றில்லை *
தாளும்தோளும் கைகளையாரத்தொழக்காணேன் *
நாளும்நாளும்நாடுவன் அடியேன்ஞாலத்தே.
3587 ஆளும் ஆளார் ஆழியும் * சங்கும் சுமப்பார் தாம் *
வாளும் வில்லும் கொண்டு * பின் செல்வார் மற்று இல்லை **
தாளும் தோளும் * கைகளை ஆரத் தொழக் காணேன் *
நாளும் நாளும் நாடுவன் * அடியேன் ஞாலத்தே (3)
3587 āl̤um āl̤ār āzhiyum * caṅkum cumappār tām *
vāl̤um villum kŏṇṭu * piṉ cĕlvār maṟṟu illai **
tāl̤um tol̤um * kaikal̤ai ārat tŏzhak kāṇeṉ *
nāl̤um nāl̤um nāṭuvaṉ * aṭiyeṉ ñālatte (3)

Ragam

Varāḷi / வராளி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

Alas! There is no one to attend to my Lord; He bears the conch and discus Himself, with no one to carry His bow and sword in reverence. No one admires His lovely feet and strong shoulders, worshipping Him wholeheartedly. I fear for His safety in this wicked world, longing to follow Him myself.

Explanatory Notes

(i) In the last two songs, the Āzhvār deplored his own loneliness, there being none to join him in whole-hearted and self-less service of the Lord. And now, he feels for the Lord’s loneliness, there being no camp-follower to carry His weapons and attend on Him, with utter devotion, swayed by His exquisite charm.

(ii) The Āzhvār feels agitated, seeing that the Supreme + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
ஆளும் கைங்கர்யத்திற்காக; ஆளார் ஒருவரையும் வைத்துக் கொள்ளவில்லை; ஆழியும் சங்கும் சக்கரத்தையும் சங்கையும்; சுமப்பார் சுமப்பவர்; தாம் தாமேயாயிருக்கிறாரே; வாளும் நாந்தக வாளையும்; வில்லும் சார்ங்கம் என்னும் வில்லையும்; கொண்டு எடுத்துக் கொண்டு; பின் செல்வார் பின் செல்ல; மற்று இல்லை ஒருவருமில்லையே; தாளும் திருவடிகளிலும்; தோளும் தோள்களிலும் ஈடுபட்டு; கைகளை ஆர கையார; தொழ தொழுபவர்களாக யாரையும்; காணேன் காணவில்லை; ஞாலத்தே இந்த உலகத்தில்; நாளும் நாளும் நாள்தோறும்; அடியேன் அடியேன் பின் சென்று; நாடுவன் அடிமை செய்ய விரும்புகிறேன்
āl̤ār not recognising (to have);; thām he (who is so tender to even be stared at); āzhiyum thiruvāzhi (divine chakra); sangum thiruchchangu (divine conch); sumappār carrying (as if holding a mountain); vāl̤um nandhaka (sword); villum ṣrī ṣārngam (bow); koṇdu carrying; pin selvār to follow; maṝu anyone else; illai not there;; thāl̤um divine feet (walking as said in -maththa māthanga gāminam-); thŏl̤um divine shoulders (which give shade as said in -bāhuchchāyām avashtabdha:-); kaigal̤ai with my hands; āra fully; thozha to worship and serve; kāṇĕn ī am not seeing (with my eyes);; adiyĕn ī (who have servitude as my nature) am; nāl̤um nāl̤um everyday; nāduvan searching; ŏr being unparalleled; muṝā very tender

TVM 8.3.4

3588 ஞாலம்போனகம்பற்றி ஓர்முற்றாவுருவாகி *
ஆலம்பேரிலை அன்னவசஞ்செய்யும்அம்மானே! *
காலம்பேர்வது ஓர்காரிருள்ஊழியொத்துளதால் * உன்
கோலங்காரேழில் காணலுற்றுஆழுங்கொடியேற்கே.
3588 ஞாலம் போனகம் பற்றி * ஓர் முற்றா உரு ஆகி *
ஆலம் பேர் இலை * அன்னவசம் செய்யும் அம்மானே **
காலம் பேர்வது ஓர் * கார் இருள் ஊழி ஒத்து உளதால் * உன்
கோலம் கார் எழில் * காணலுற்று ஆழும் கொடியேற்கே (4)
3588 ñālam poṉakam paṟṟi * or muṟṟā uru āki *
ālam per ilai * aṉṉavacam cĕyyum ammāṉe **
kālam pervatu or * kār irul̤ ūzhi ŏttu ul̤atāl * uṉ
kolam kār ĕzhil * kāṇaluṟṟu āzhum kŏṭiyeṟke (4)

Ragam

Varāḷi / வராளி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

Oh, Sire, as a tender baby, You rested on a fig leaf, carrying the entire universe within Your stomach. I long to feast my eyes on Your exquisite form, resembling a rain-cloud. When I am deprived of this sight, even a split-second feels like an eternity, akin to a never-ending night.

Explanatory Notes

The Lord allays the fears of the Āzhvār by pointing out to him, His role as the Protector of the whole Universe and reminding him of how He sustained all the worlds with their numerous contents, right inside His stomach, during the deluge. Instead of allaying the Āzhvār’s fears, this episode only stirred up his thoughts in yet another direction, like unto a doting mother. + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
ஓர் முற்றா ஒப்பற்ற ஒரு பச்சிளம் குழந்தையாய்; ஞாலம் உலகம்; போனகம் பற்றி அனைத்தையும் உண்ட; உரு ஆகி வடிவழகையுடைய; ஆலம் பேர் இலை ஆலம் தளிரில்; அன்னவசம்செய்யும் கண்வளர்ந்த; அம்மானே! எம்பெருமானே!; கார் எழில் காளமேகம் போன்ற அழகிய; உன் கோலம் உன் வடிவழகை; காணலுற்று காணவேண்டும் என்று ஆசைப்பட்டு; ஆழும் அதிலே ஆழங்காற்பட்டிருக்கின்ற; கொடியேற்கே கொடிய பாபத்தை உடைய எனக்கு; காலம் பேர்வது தற்போது ஒரு நொடி கழிவது; ஓர் கார் இருள் கருத்திருக்கும் இருள்; ஊழி ஒத்து ஊழிகாலத்தை ஒத்ததாய்; உளதால் நீள்கிறதே! அந்தோ!
uruvāgi having a form; gyālam the great universe; pŏnagam as food; paṝi consumed; āl pipal; pĕr to be said; ilai on a leaf; anna vasam seyyum mercifully resting in sideways; ammānĕ ŏh lord!; kār dark cloud-s; ezhil having the beauty; un your; kŏlam physical beauty; kāṇaluṝu forcing to see; āzhum becoming immersed (due to fear); kodiyĕṛku for me who has cruel sin; pĕrvadhu between one moment and the next; kālam time duration; ŏr unparalleled; kār irul̤ having deep darkness; ūzhi oththu like a kalpa (a night of brahmā); ul̤adhu is.; kodi flags; ār abundantly present

TVM 8.3.5

3589 கொடியார்மாடக் கோளூரகத்தும்புளிங்குடியும் *
மடியாதின்னே நீதுயில்மேவிமகிழ்ந்ததுதான் *
அடியாரல்லல்தவிர்த்தஅசைவோ? அன்றேல்இப்
படிதான் * நீண்டுதாவிய அசைவோ? பணியாயே. (2)
3589 கொடியார் மாடக் * கோளூர் அகத்தும் புளியங்குடியும் *
மடியாது இன்னே * நீ துயில் மேவி மகிழ்ந்தது தான் **
அடியார் அல்லல் தவிர்த்த * அசைவோ? அன்றேல் * இப்
படி தான் நீண்டு தாவிய * அசைவோ? பணியாயே (5)
3589 kŏṭiyār māṭak * kol̤ūr akattum pul̤iyaṅkuṭiyum *
maṭiyātu iṉṉe * nī tuyil mevi makizhntatu tāṉ **
aṭiyār allal tavirtta * acaivo? aṉṟel * ip
paṭi tāṉ nīṇṭu tāviya * acaivo? paṇiyāye (5)

Ragam

Varāḷi / வராளி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

My Lord, how is it that You lovingly repose without turning, neither to this side nor that, in Kōḷūr and Puḷiṅkuṭi, where banners play on smart castles? Is it due to the fatigue caused during Your avatars, when You performed many feats to alleviate Your devotees' sufferings? Or is it the result of the long strides You took to span the immense world? Please disclose it to me.

Explanatory Notes

(i) Seeing the Āzhvār’s disquietitude over His lying alone on a tender leaf during the deluge, the Lord hastens to reveal unto him a different setting altogether, pertaining to His Iconic Form where He is attended upon by the votaries in their full complement. Mention of just two pilgrim centres, in this song, should be taken as covering the numerous other pilgrim centres + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
கொடியார் கொடிகள் நிறைந்த; மாட மாடங்களையுடைய; கோளுர் அகத்தும் திருக்கோளூரிலும்; புளிங்குடியும் திருப்புளிங்குடியிலும்; மடியாது உடலை அங்கும் இங்கும் அசைக்காமல்; இன்னே இன்று காணும் விதமாக; நீ மேவி மகிழ்ந்தது நீ விரும்பி மகிழ்ந்து; துயில் தான் சயனித்துக் கண்வளர்வதானது; அடியார் அவதாரங்கள் செய்து; அல்லல் அடியார்களின் துன்பங்களை; தவிர்த்த அசைவோ? போக்கின சிரமத்தினாலோ?; அன்றேல் இப்படி அல்லது இப் பூமியை; நீண்டு தாவிய தான் நீண்டு தாவி அளந்த; அசைவோ? ஆயாஸமோ?; பணியாயே என்று கூறி அருள வேண்டும்
mādam having mansions; kŏl̤ūr thirukkŏl̤ūr; agaththu inside; pul̤ingudiyum in thiruppul̤ingudi; madiyādhu to not leave; innĕ in this (composed) manner; thuyil mĕvi due to mercifully resting; you; magizhndhadhudhān being pleased in this manner; adiyār devotees; allal sorrow; thavirththa eliminated; asaivŏ due to the fatigue?; anṛĕl otherwise; i this; padithān earth; nīṇdu growing that day; thāviya measured and accepted; asaivŏ fatigue?; anṛĕl if it is not due to that; i this; padidhān earth; nīṇdu growing one day; thāviya measured; asaivŏ fatigue?; paṇiyāy mercifully tell.; paṇiyā not to bow to (anyone-s foot for any reason); amarar nithyasūris- (who are not ruled by anyone [other than emperumān])

TVM 8.3.6

3590 பணியாவமரர் பணிவும்பண்பும்தாமேயாம் *
அணியாராழியும் சங்கமும்ஏந்துமவர்காண்மின் *
தணியாவெந்நோய் உலகில்தவிர்ப்பான் * திருநீல
மணியார்மேனியோடு என்மனம்சூழவருவாரே.
3590 பணியா அமரர் * பணிவும் பண்பும் தாமே ஆம் *
அணி ஆர் ஆழியும் * சங்கமும் ஏந்தும் அவர் காண்மின் **
தணியா வெம் நோய் * உலகில் தவிர்ப்பான் * திருநீல
மணி ஆர் மேனியோடு * என் மனம் சூழ வருவாரே (6)
3590 paṇiyā amarar * paṇivum paṇpum tāme ām *
aṇi ār āzhiyum * caṅkamum entum avar kāṇmiṉ **
taṇiyā vĕm noy * ulakil tavirppāṉ * tirunīla
maṇi ār meṉiyoṭu * ĕṉ maṉam cūzha varuvāre (6)

Ragam

Varāḷi / வராளி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

The Supreme Lord, revered and worshipped by Nithyasuris in SriVaikuntam, who acknowledge no other master but Him, has descended into this world, brandishing the conch and discus resembling beautiful gems, revealing His exquisite form of sapphire hue, the remedy for all afflictions. My mind is perplexed, pondering whether any harm shall befall Him.

Explanatory Notes

(i) The Lord’s exquisite charm is such as to excite the fear, (needless, of course, in that holy Land of the Celestials in spiritual world) in regard to His safety. As elucidated, time and again, such an attitude stems from the inordinate love borne by them for the Lord whose rare charm and effulgence, just like all good things loved and longed for, excite, rightly or + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
பணியா எவரையும் பணிய வேண்டாத; அமரர் நித்யஸூரிகளுடைய; பணிவும் பண்பும் பணிவுக்கும் ஞானத்துக்கும்; தாமே ஆம் பொருளாக இருப்பவன்; அணியார் ஆபரண ரூபமாக உடைய; ஆழியும் சக்கரத்தையும்; சங்கமும் ஏந்தும் சங்கையும் ஏந்திக் கொண்டு; அவர் காண்மின் அவன் இருக்கச்செய்தே; தணியா தீராத; வெம் நோய் நம் கொடிய பிறவி நோயை; உலகில் தவிர்ப்பான் தவிர்ப்பதற்காக; திரு நீல மணி ஆர் அழகிய நீலம் மணி; மேனியோடு மேனி வடிவழகோடு; என் மனம் சூழ என்மனம் பிரமிக்கும்படியாக; வருவாரே இவ்வுலகில் வந்து உலாவுவார்
paṇivum (natural, fitting their nature) humility; paṇbum their qualities (such as gyāna (knowledge), prĕma (love) etc); thāmĕyām being the target himself; aṇi in the form of ornaments; ār having enjoyability; āzhiyum divine chakra; sangum divine conch; ĕndhum holding (to be enjoyable for such nithyasūris); avar kāṇmin see him; ulagil in this world; thaṇiyā occurring without reduction; vem causing great heat; nŏy diseases (in the form of avidhyā (ignorance), karma (virtues and vices), vāsanā (impressions), ruchi (taste) and prakruthi sambandham (bondage)); thavirppān to eliminate; thiru opulence (of perfect beauty, tenderness etc to be enjoyed by such nithyasūris); ār having; neela maṇi like a blue gem; mĕniyŏdu with divine form; en my; manam mind; sūzha to be bewildered; varuvār descends in this samsāram.; varuvār those who come (from there); selvār those who go (from here)

TVM 8.3.7

3591 வருவார்செல்வார் வண்பரிசாரத்திருந்த * என்
திருவாழ்மார்வற்கு என்திறம்சொல்லார்செய்வதென்? *
உருவார்சக்கரம் சங்குசுமந்துஇங்கும்மோடு *
ஒருபாடுழல்வான் ஓரடியானுமுளனென்றே. (2)
3591 வருவார் செல்வார் * வண்பரிசாரத்து இருந்த * என்
திருவாழ் மார்வற்கு * என் திறம் சொல்லார் செய்வது என் **
உரு ஆர் சக்கரம் * சங்கு சுமந்து இங்கு உம்மோடு *
ஒருபாடு உழல்வான் * ஓர் அடியானும் உளன் என்றே? (7)
3591 varuvār cĕlvār * vaṇparicārattu irunta * ĕṉ
tiruvāzh mārvaṟku * ĕṉ tiṟam cŏllār cĕyvatu ĕṉ **
uru ār cakkaram * caṅku cumantu iṅku ummoṭu *
ŏrupāṭu uzhalvāṉ * or aṭiyāṉum ul̤aṉ ĕṉṟe? (7)

Ragam

Varāḷi / வராளி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

Alas! those who pass in and out of Vaṇparicāram, where my Lord resides bearing Tiru (Lakṣmī) on His winsome chest, do not tell Him. Here is a vassal ready to get close to Him and roam behind, carrying His lovely discus and conch, keeping one end close.

Explanatory Notes

The Āzhvār, seated inside of the hollow of the sacred tamarind tree in Tirunakari, pines for the service of the Lord in nearby Tiruvaṇparicāram. He fancies that the passersby are all moving to and from Tiruvaṇparicāram, only to tell the Lord over there about him and his ardour to serve Him, looking upon Him as his all (Vāsudevassarvamiti), and bring him back the message + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
வருவார் வருபவர்களும்; செல்வார் செல்பவர்களுமான மனிதர்கள்; வண்பரிசாரத்து திருவண்பரிசாரத்தில்; என் என்னை அடிமை கொள்வதற்காக; இருந்த இருக்கும்; திருவாழ் மார்வற்கு திருமகளை மார்பிலுடைய; உரு ஆர் வடிவழகால் பொருத்தமான; சக்கரம் சக்கரமும்; சங்கு சுமந்து சங்கும் சுமந்து; இங்கு உம்மோடு இங்கு உம்மோடு; ஒருபாடு ஒரு பக்கத்திலிருந்து கொண்டு; உழல்வான் திரிவான்; ஓர் அடியானும் ஓர் அடியானும்; உளன் என்றே இருக்கிறான் என்று; என் திறம் என்னைப் பற்றி ஒரு வார்த்தை; சொல்லார் கூறுபவர் யாரும் இல்லையே; செய்வது என் இதற்கு நான் செய்யக் கூடியது என்ன?
vaṇ having distinguished wealth; parisāraththu in thirupparisāram; en to accept my service; irundha mercifully present; thiruvāzhmārvaṛku for ṣrīmān (the lord of ṣrī mahālakshmi); uru by physical beauty; ār matching; chakkaram thiruvāzhi (divine chakra); sangum thiruchchangu (divine conch); sumandhu carrying; ingu in this material realm; ummŏdu with you; orupādu remaining in close proximity to you; uzhalvān travel along; ŏr (unparalleled) one; adiyānum servitor; ul̤an is available; enṛu as; en my; thiṛam matters; sollār not informing.; seyvadhu can be done; en (becoming upset) how?; ĕzh kunṛu the seven anchoring mountains; ĕzh pār seven islands

TVM 8.3.8

3592 என்றே? என்னை உன்னேரார்கோலத்திருந்தடிக்கீழ் *
நின்றேயாட்செய்ய நீகொண்டருளநினைப்பதுதான் *
குன்றேழ்பாரேழ் சூழ்கடல்ஞாலம்முழுவேழும் *
நின்றேதாவிய நீள்கழலாழித்திருமாலே!
3592 என்றே என்னை * உன் ஏர் ஆர் கோலத் திருந்து அடிக்கீழ் *
நின்றே ஆட்செய்ய * நீ கொண்டருள நினைப்பதுதான்? **
குன்று ஏழ் பார் ஏழ் * சூழ் கடல் ஞாலம் முழு ஏழும் *
நின்றே தாவிய * நீள் கழல் ஆழித் திருமாலே (8)
3592 ĕṉṟe ĕṉṉai * uṉ er ār kolat tiruntu aṭikkīzh *
niṉṟe āṭcĕyya * nī kŏṇṭarul̤a niṉaippatutāṉ? **
kuṉṟu ezh pār ezh * cūzh kaṭal ñālam muzhu ezhum *
niṉṟe tāviya * nīl̤ kazhal āzhit tirumāle (8)

Ragam

Varāḷi / வராளி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

Oh, Tirumāl, when will you consider me worthy enough to lift me to your exceedingly beautiful feet, where I can serve you faithfully and unwaveringly forever? Just by standing on your tall feet, you encompassed the seven worlds, seven islands, seven mountains, and the surrounding oceans.

Explanatory Notes

Seeing that there is none to plead with the Lord on his behalf, the Āzhvār himself now enquires of the Lord what exactly His intentions are in the matter of taking service from him. The Āzhvār sees in front of him the Lord, full of love, ready to concede his wish and yet, the Āzhvār can brook no further delay. He impresses upon the Lord his rapturous love unto His ornamental + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
குன்று ஏழ் ஏழு மலைகளையும்; பார் ஏழ் சூழ் ஏழு தீவுகளையும் சூழ்ந்த; கடல் ஏழு கடல்களையும்; ஞாலம் ஏழும் ஏழு உலகங்களையும்; முழு நின்றே முழுக்க நின்ற நிலையிலேயே நின்று; தாவிய தாவி அளந்த; நீள் கழல் நெடிய திருவடிகளை உடைய; ஆழித் திருமாலே! சக்கரத்தைக் கையிலுடையவனே!; என்றே என்னை அடியேனை; உன் ஏர் ஆர் உன் அழகு மிஞ்சிய; கோலத்திருந்து ஆபரணங்களுமுடைய; அடிக்கீழ் திருவடிகளின் கீழ்; நின்றே ஆட் செய்ய நின்று உனக்கு அடிமை செய்ய; நீ கொண்டருள தாங்கள் அங்கீகரிக்க; நினைப்பது தான்? நினைத்திருப்பது தான் என்றோ?
sūzh surrounded; kadal the respective ocean; ĕzh gyālamum seven worlds starting from bhūmi [i.e. bhū:, bhuva:, suva:, maha:, jana, thapa, sathya lŏkams]; muzhu fully; ninṛĕ in his standing posture; thāviya measured; nīl̤ lengthy; kazhal one who is having divine feet; āzhi having thiruvāzhi (divine chakra, which highlights his lordship); thirumālĕ ŏh ṣriya:pathi (lord of ṣrī mahālakshmi)!; ennai me (who is a caring servitor for you); un your (tender, enjoyable); ĕr beautiful; ār abundant; kŏlam having decorated with ornaments; thirundhu naturally beautiful; adikkīzh under the divine feet; ninṛĕ remaining (without ever separating); ātcheyya to serve (by performing mangal̤āṣāsanam matching your ṣriya:pathithva (being the lord of ṣrī mahālakshmi), saukumārya (tenderness) etc); you; koṇdarul̤i acknowledging (in your divine heart); ninaippadhudhān mercifully think (to make these occur); enṛu when?; thiru for periya pirāttiyār (ṣrī mahālakshmi); māl ŏh lord who is distinguished to be loved!

TVM 8.3.9

3593 திருமால்! நான்முகன் செஞ்சடையானென்றிவர்கள் * எம்
பெருமான்தன்மையை யாரறிகிற்பார்? பேசியென்? *
ஒருமாமுதல்வா! ஊழிப்பிரான்! என்னையாளுடை *
கருமாமேனியன்! என்பன் என்காதல்கலக்கவே.
3593 திருமால் நான்முகன் * செஞ்சடையான் என்று இவர்கள் * எம்
பெருமான் தன்மையை * யார் அறிகிற்பார்? பேசி என்? **
ஒரு மா முதல்வா * ஊழிப் பிரான் என்னை ஆளுடை *
கரு மா மேனியன் என்பன் * என் காதல் கலக்கவே (9)
3593 tirumāl nāṉmukaṉ * cĕñcaṭaiyāṉ ĕṉṟu ivarkal̤ * ĕm
pĕrumāṉ taṉmaiyai * yār aṟikiṟpār? peci ĕṉ? **
ŏru mā mutalvā * ūzhip pirāṉ ĕṉṉai āl̤uṭai *
karu mā meṉiyaṉ ĕṉpaṉ * ĕṉ kātal kalakkave (9)

Ragam

Varāḷi / வராளி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

Tirumāl, can either Nānmukaṉ or the one with matted locks red comprehend Your tenderness? It's indeed futile to discuss this. With a mind confounded by deep love, I keep saying, You are the unique Primate, my Lord, controlling time and all else, enthralled by Your exquisite bluish-tinted Form.

Explanatory Notes

On the Āzhvār being told by the Lord that there is hardly any room for the fears entertained by him regarding His safety, when the four-headed Brahmā and a host of other Devas were there to attend on Him, the Āzhvār rebuts this position. He points out that they are not the persons to appreciate Him, in terms of His remarkable tenderness and bewitching Form, being mere + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
திருமால்! திருமாலே!; நான்முகன் பிரமன் என்றும்; செஞ்சடையான் என்று ருத்திரன் என்றும்; இவர்கள் சொல்லப் படுகிறவர்களில் யார்தான்; எம் பெருமான் எம்பெருமானான உன்னுடைய; தன்மையை யார் ஸ்வபாவத்தை; அறிகிற்பார்? அறியவல்லார் யார்? என்று; பேசி என்? இதைப் பேசி என்ன பயன்?; ஒரு மா முதல்வா! ஒப்பற்ற காரணபூதனே!; ஊழிப் பிரான்! காலம் ஆகியவற்றை நியமிப்பவனே!; என்னை ஆளுடை என்னையடிமை கொண்ட; என் காதல் என்னுடைய காதல்; கலக்கவே நெஞ்சைக் கலக்க; கரு மா மேனியன்! கரியகோலத் திருவுருவனே!; என்பன் என்று இவ்வளவே அன்றோ நான் சொல்ல வல்லேன்
nānmugan brahmā (who is engaged in multifaceted creation); sem sadaiyān rudhra (who is engaged in penance); enṛu well known in this manner; ivaragal̤ these personalities; emperumān you who are my lord and greater than all; thanmaiyai distinguished aspects such as beauty, tenderness etc; aṛigiṛpār those who are capable of knowing; ār who?; en my; kādhal love; kalakka bewilder (my heart); oru distinguished; mā mudhalvā ŏh supreme cause!; ūzhi as per the time; pirān oh benefactor!; ennai me; āl̤udai engaged in service; karu dark; mā mĕniyan ŏh one with distinguished form!; enban ī keep saying;; pĕsi en ḥow can ī explain?; kalakkam bewilderment (which is natural in this samsāram (material realm)); illā not having

TVM 8.3.10

3594 கலக்கமில்லாநல்தவமுனிவர் கரைகண்டோர் *
துளக்கமில்லா வானவரெல்லாம்தொழுவார்கள் *
மலக்கமெய்த மாகடல்தன்னைக்கடைந்தானை *
உலக்கநாம்புகழ்கிற்பது என்செய்வது? உரையீரே.
3594 கலக்கம் இல்லா * நல் தவ முனிவர் கரை கண்டோர் *
துளக்கம் இல்லா * வானவர் எல்லாம் தொழுவார்கள் **
மலக்கம் எய்த * மா கடல் தன்னைக் கடைந்தானை *
உலக்க நாம் புகழ்கிற்பது * என் செய்வது? உரையீரே? (10)
3594 kalakkam illā * nal tava muṉivar karai kaṇṭor *
tul̤akkam illā * vāṉavar ĕllām tŏzhuvārkal̤ **
malakkam ĕyta * mā kaṭal taṉṉaik kaṭaintāṉai *
ulakka nām pukazhkiṟpatu * ĕṉ cĕyvatu? uraiyīre? (10)

Ragam

Varāḷi / வராளி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

Considering the presence of great sages with profound clarity of mind, along with liberated souls and eternal heroes of the spiritual realm, all of whom are devoted to the Lord, who churned the mighty ocean, one wonders if we frail beings can truly grasp His immense glory. It seems that His greatness knows no bounds, making it challenging for us to comprehend it fully.

Explanatory Notes

It was only when the Lord finally brought home the fact, quite reassuring, that He was carefully attended upon by the most eminent sages like Sanaka, Nandana and others, the ‘Muktas’, released from the bondage of samsāra and the ‘Nityas’, the Eternal Heroes in spiritual world, and, above all, His own prowess unlimited, the Āzhvār’s fears were set at naught. But then, it + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
கலக்கம் இல்லா கலக்கமற்ற; நல் தவ நல்ல தபஸ்விகளான; முனிவர் முனிவர்கள்; கரை ஸம்ஸாரத்தைக் கரை; கண்டோர் கண்ட முக்தர்கள்; துளக்கம் இல்லா சலனம் அற்ற; வானவர் நித்யஸூரிகள்; எல்லாம் எல்லாரும்; தொழுவார்கள் தொழுது வணங்குவார்கள்; மா கடல் தன்னை பெருங்கடலை; மலக்கம் எய்த கலங்கும்படி; கடைந்தானை கடைந்த பெருமானை; உலக்க நாம் அற்பரான நாம் அவன்; புகழ்கிற்பது கல்யாணகுணங்களைப் புகழ்வது; என் செய்வது? நம்மால் ஆகுமோ?; உரையீரே சொல்லுங்கோள்
nal thavam having thapas (penance) in the form of gyānam (knowledge); munivar sages sanaka et al; karai kaṇdŏr (as said in -sŏdhvana: pāram āpnŏthi #) mukthāthmās (liberated souls) who have reached the other shore (after crossing samsāra); thul̤akkam wavering [thoughts]; illā not having; vānavar nithyasūris (eternally free souls); ellām all; thozhuvārgal̤ worship and perform mangal̤āṣāsanam (wishing well with care); boundless; kadal thannai ocean; malakkam eydha to agitate; kadaindhānai omnipotent emperumān who churned; nām us; ulakka to see fully; pugazhgiṛpadhu and this ability to praise him; en seyvadhu how to do?; uraiyīr Please tell- āzhvār asks the worldly people.; uraiyā to be beyond speech; vem causing heat/suffering

TVM 8.3.11

3595 உரையாவெந்நோய்தவிர அருள்நீண்முடியானை *
வரையார்மாட மன்னுகுருகூர்ச்சடகோபன் *
உரையேய்சொல்தொடை ஓராயிரத்துள்இப்பத்தும் *
நிரையேவல்லார் நீடுலகத்துப்பிறவாரே. (2)
3595 ## உரையா வெம் நோய் தவிர * அருள் நீள் முடியானை *
வரை ஆர் மாடம் * மன்னு குருகூர்ச் சடகோபன் **
உரை ஏய் சொல்தொடை * ஓர் ஆயிரத்துள் இப் பத்தும் *
நிரையே வல்லார் * நீடு உலகத்துப் பிறவாரே (11)
3595 ## uraiyā vĕm noy tavira * arul̤ nīl̤ muṭiyāṉai *
varai ār māṭam * maṉṉu kurukūrc caṭakopaṉ **
urai ey cŏltŏṭai * or āyirattul̤ ip pattum *
niraiye vallār * nīṭu ulakattup piṟavāre (11)

Ragam

Varāḷi / வராளி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

Those who thoroughly understand these ten songs, among the thousand divine compositions of Caṭakōpaṉ from Kurukūr, praising the Lord adorned with a majestic crown and dispelling all apprehensions, will never be reincarnated in this vast world.

Explanatory Notes

The benefit accruing from learning well this decad as set out above, is self-explanatory. It is, of course, not mere freedom from rebirth in this wretched land where there is none who would feel concerned about the Lord’s safety and well-being but also eternal enjoyment in spiritual world where the whole lot of them are dedicated to the Lord’s well-being. As regards the + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
உரையா சொல்ல முடியாத; வெம் நோய் பிறவி நோயை; தவிர தீர்க்கும்படி; அருள் நீள் அருளிய நீண்ட; முடியானை முடி உடையவனை; வரை ஆர் மலை போன்ற; மாடம் மன்னு மாடங்கள் நிறைந்த; குருகூர் திருக்குருகூரில் அவதரித்த; சடகோபன் நம்மாழ்வார்; சொல்தொடை சொல் தொடை ஆகியவை; உரை ஏய் நிரம்பிய பாசுரங்களை அருளிச் செய்த; ஓர் ஆயிரத்துள் ஒப்பற்ற ஆயிரம் பாசுரங்களுள்; இப் பத்தும் இந்தப் பத்துப் பாசுரங்களையும்; நிரையே வல்லார் முறையாக கற்க வல்லவர்கள்; நீடு உலகத்து நீண்ட இந்த உலகில்; பிறவாரே மறுபடி பிறக்கமாட்டார்கள்
nŏy disease (of bewilderment); thavira to eradicate; arul̤ showing his completeness of wealth and ability; nīl̤ mudiyānai emperumān, the lord who is greater than all; varai mountain; ār like densely present; mādam mansions; mannu being firmly present; kurugūr leader of āzhvārthirunagari; satakŏpan nammāzhvār-s; urai in the manner of speech; ĕy dense; sol thodai having string of words; ŏr distinguished; āyiraththul̤ among the thousand pāsurams; ippaththum this decad; niraiyĕ in proper sequence; vallār those who can recite; nīdu vast; ulagaththu in this samsāra (where there is none who cares for bhagavān); piṛavār will not take birth.; vār flowing; kadā exultation