I Cannot Completely Praise the One Who Churned the Ocean.
கடல் கடைந்தானை நான் முற்றமுடியப் புகழ இயலாது
3594 கலக்கமில்லாநல்தவமுனிவர் கரைகண்டோர் *
துளக்கமில்லா வானவரெல்லாம்தொழுவார்கள் *
மலக்கமெய்த மாகடல்தன்னைக்கடைந்தானை *
உலக்கநாம்புகழ்கிற்பது என்செய்வது? உரையீரே.