By Reciting These Verses, the Sorrow of Birth Will Depart.
இவற்றைப் படித்தால் பிறவித் துன்பம் அகலும்
3595 உரையாவெந்நோய்தவிர அருள்நீண்முடியானை *
வரையார்மாட மன்னுகுருகூர்ச்சடகோபன் *
உரையேய்சொல்தொடை ஓராயிரத்துள்இப்பத்தும் *
நிரையேவல்லார் நீடுலகத்துப்பிறவாரே. (2)