Chapter 3

Parānkusanāyaki dares to write a love letter to the Lord, unable to bear His separation - (மாசு அறு)

பிரிவாற்றாமை மேலீட்டால் தலைமகள் காதல் கைமிக்கு மடலூரத் துணிதல்
By saying ‘madaloorvEn’, Āzhvār wants to make all his thoughts into reality. These hymns are sung by Āzhvār as parAnkusa nAyaki.
இத்திருவாய்மொழியில் மடலூர்வேன் என்று கூறி தாம் நினைப்பதை நடத்திக்கொள்ளப் பார்க்கிறார் ஆழ்வார். இப்பகுதி நாயகி நிலையில் அருளிச்செய்யப்பட்டது.
Verses: 3255 to 3265
Grammar: Kaliviruththam / கலிவிருத்தம்
Pan: நட்டபாடை
Timing: 1.13-2.24 PM
Recital benefits: will truly reach divine Vaikuntam
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

TVM 5.3.1

3255 மாசறுசோதி என்செய்யவாய்மணிக்குன்றத்தை *
ஆசறுசீலனை ஆதிமூர்த்தியைநாடியே *
பாசறவெய்தி அறிவிழந்தெனைநாளையம்? *
ஏசறுமூரவர்கவ்வை தோழீ! என்செய்யுமே? (2)
3255 ## மாசு அறு சோதி * என் செய்ய வாய் மணிக்குன்றத்தை *
ஆசு அறு சீலனை * ஆதி மூர்த்தியை நாடியே **
பாசறவு எய்தி * அறிவு இழந்து எனை நாளையம்? *
ஏசு அறும் ஊரவர் கவ்வை * தோழீ என் செய்யுமே? (1)
3255 ## mācu aṟu coti * ĕṉ cĕyya vāy maṇikkuṉṟattai *
ācu aṟu cīlaṉai * āti mūrttiyai nāṭiye **
pācaṟavu ĕyti * aṟivu izhantu ĕṉai nāl̤aiyam? *
ecu aṟum ūravar kavvai * tozhī ĕṉ cĕyyume? (1)

Ragam

Biyāgadai / பியாகடை

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

You know, my friend, my awareness is lost, and my lustre has been gone for a long time, in my quest for the primordial Lord of pure splendour and coral lips, the emerald mount of unwavering grace. How, then, will the rebuke of slanderous folks affect me?

Explanatory Notes

(i) The mates of Parāṅkuśa Nāyakī, who had prior knowledge of her contemplated move, dissuaded her, in a low whisper, from going ahead with it, lest the people around should reproach her for her aggressive stance. The Nāyakī was, however, not in the least worried about public opinion; as a matter of fact, she had become impervious to it long back. The Nāyakī stood on a + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மாசு அறு சோதி அழுக்கற்ற சோதியையுடைய; செய்ய வாய் சிவந்த அதரத்தை உடையவனும்; என் மணி என் மாணிக்க; குன்றத்தை மலை போன்றவனும்; ஆசு அறு குற்றமற்ற; சீலனை சீலகுணத்தையுடையவனும்; ஆதி மூர்த்தியை முழுமுதற் கடவுளுமான; நாடியே பெருமானைத் தேடி அலைந்து; பாசறவு எய்தி மேனியின் பசுமை நிறம் அழிந்து; அறிவு இழந்து அறிவு இழந்து; எனை நாளையம்? எத்தனை காலம் இருப்போம்?; தோழீ! தோழீ!; ஏசு அறும் ஏசுவதற்கென்றே இருக்கும்; ஊரவர் ஊரார்; கவ்வை பழிச்சொல்; என் செய்யுமே? என்னை என்ன செய்யும்?
sŏdhi having thĕjas (radiance); seyya reddish; vāy having mouth; en maṇik kunṛaththai one who is like an emerald mountain, who is enjoyable for me; āsu defect; aṛu without; seelanai ŏne who is having good qualities; ādhi one who first came and bestowed me the enjoyment; mūrththiyai one who is the lord; nādiyĕ seeking out permanently; pāsu freshness/complexion in my body; aṛaveydhi having lost; aṛivu wisdom; izhandhu having lost; enai nāl̤aiyam for how long; thŏzhī ŏh friend!; ĕsu in scolding/blaming; aṛum fixed on; ūravar the citiśens-; kavvai shouting; en what; seyyum will do?; seyya reddish; thāmarai lotus like

TVM 5.3.2

3256 என்செய்யுமூரவர்கவ்வை? தோழீ! இனிநம்மை *
என்செய்யதாமரைக்கண்ணன் என்னைநிறைகொண்டான் *
முன்செய்யமாமையிழந்து மேனிமெலிவெய்தி *
என்செய்யவாயும்கருங்கண்ணும் பயப்பூர்ந்தவே.
3256 என் செய்யும் ஊரவர் கவ்வை * தோழீ இனி நம்மை? *
என் செய்ய தாமரைக் கண்ணன் * என்னை நிறை கொண்டான் **
முன் செய்ய மாமை இழந்து * மேனி மெலிவு எய்தி *
என் செய்ய வாயும் கருங் கண்ணும் * பயப்பு ஊர்ந்தவே (2)
3256 ĕṉ cĕyyum ūravar kavvai * tozhī iṉi nammai? *
ĕṉ cĕyya tāmaraik kaṇṇaṉ * ĕṉṉai niṟai kŏṇṭāṉ **
muṉ cĕyya māmai izhantu * meṉi mĕlivu ĕyti *
ĕṉ cĕyya vāyum karuṅ kaṇṇum * payappu ūrntave (2)

Ragam

Biyāgadai / பியாகடை

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

My Lord with red-lotus eyes has robbed me of my modesty. My complexion is fading, and my body is thinning down. The hue of my red lips and black eyes is also diminishing. What indeed is the reproof of these folks to me?

Explanatory Notes

Queried by her mates as to how she could afford to ignore public opinion and be indifferent to it, the Nāyakī says that she is well past that stage, having lost all sense of awareness of the world long ago, when the Supreme Lord of exquisite charm stole away her heart. Pining for Him, she has thinned down alarmingly and is terribly off-colour. When she recounts these disquieting + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
செய்ய தாமரை சிவந்த தாமரை போன்ற; கண்ணன் கண்களையுடைய கண்ணன்; என்னை நிறை என்னுடைய அடக்கத்தை; கொண்டான் கொள்ளை கொண்டான்; முன் செய்ய முன்பிருந்த; மாமை இழந்து மேனி நிறம் அழியப்பெற்று; மேனி மெலிவு எய்தி சரீரமும் மெலிந்து; என் செய்ய வாயும் என் சிவந்த அதரமும்; கருங் கண்ணும் கருத்த கண்களும்; பயப்பு ஊர்ந்தவே பசலை நிறம் படர்ந்தன; தோழீ! இனி நம்மை தோழீ! இனி நம்மை; ஊரவர் கவ்வை ஊராருடைய பழிச்சொல்; என் செய்யும்? என்ன செய்யும்?
kaṇṇan having beautiful eyes; en one who is obedient towards me; ennai me; niṛai koṇdān fully captured;; mun appearing visibly; seyya distinguished; māmai shining complexion; izhandhu having lost; mĕni the body (which is the abode for such complexion); melivu eydhi becoming weak; en my; seyya vāyum reddish mouth; karum kaṇṇum blackish eyes; payappu a pale complexion; ūrndha acquired;; thŏzhi ŏh friend!; ini now; nammai us; ūravar kavvai accusations of the people; en seyyum what will they do?; ūrndha rolled over to kill; sagadam ṣakata (wheel)

TVM 5.3.3

3257 ஊர்ந்தசகடம்உதைத்தபாதத்தன் * பேய்முலை
சார்ந்துசுவைத்தசெவ்வாயன் என்னைநிறைகொண்டான் *
பேர்ந்தும்பெயர்ந்தும் அவனோடன்றியோர்சொல்லிலேன் *
தீர்ந்தவென்தோழீ! என்செய்யும்ஊரவர்கவ்வையே?
3257 ஊர்ந்த சகடம் * உதைத்த பாதத்தன் * பேய்முலை
சார்ந்து சுவைத்த * செவ்வாயன் என்னை நிறை கொண்டான் **
பேர்ந்தும் பெயர்ந்தும் * அவனோடு அன்றி ஓர் சொல் இலேன் *
தீர்ந்த என் தோழீ! * என் செய்யும் ஊரவர் கவ்வையே? (3)
3257 ūrnta cakaṭam * utaitta pātattaṉ * peymulai
cārntu cuvaitta * cĕvvāyaṉ ĕṉṉai niṟai kŏṇṭāṉ **
perntum pĕyarntum * avaṉoṭu aṉṟi or cŏl ileṉ *
tīrnta ĕṉ tozhī! * ĕṉ cĕyyum ūravar kavvaiye? (3)

Ragam

Biyāgadai / பியாகடை

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

My experienced friend, I often find myself speaking only of the Lord with coral-red lips, who drained the life from the demon and shattered the devilish wheel. He has stripped me of my feminine qualities, so what do I care about the reproach of these slanderous people around me?

Explanatory Notes

Parāṅkuśa Nāyakī enlightens her mate by saying that the Lord kicked the demon who entered the cart-wheel, to a thousand pieces, and sucked the demoness who feigned as the good mother, unto death, only to attract her and steal her heart away. It was earlier assumed by the mate that these incidents formed part of the general scheme of annihilation of the Lord’s enemies set + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஊர்ந்த சகடம் உருண்டு வந்த சகடத்தை; உதைத்த உதைத்துப் பொடியாக்கின; பாதத்தன் திருவடிகளையுடையவனும்; பேய்முலை பேய் வடிவில் வந்த பூதனையின்; சார்ந்து பாலை மனம் பொருந்தி; சுவைத்த சுவைத்தவனுமான; செவ் வாயன் சிவந்த அதரத்தையுடையவன்; என்னை நிறை என்னுடைய பெண்மையை; கொண்டான் கொள்ளை கொண்டான்; தீர்ந்த என் தோழீ! என் நன்மையை விரும்பும் தோழியே!; பேர்ந்தும் பெயர்ந்தும் எந்த விதத்திலும் நான்; அவனோடு அன்றி அவன் பேச்சைத் தவிர; ஓர் சொல் இலேன் வேறு ஒரு பேச்சு உடையவள் அல்ல; ஊரவர் கவ்வையே ஊரார் பழிச்சொல்; என் செய்யும்? என்னை என்ன செய்யும்?
udhaiththa (having just stopped crying for mother-s milk) kicked (to break); pādhaththan having divine feet; pĕy mulai bosom of the demoniac lady [pūthanā]; sārndhu (considering whole-heartedly to be his mother-s bosom) fixing well; suvaiththa consumed ([the milk] along with the vital air); sem reddish; vāyan having divine lips; en my; niṛaiyai completeness of femininity; koṇdān stole;; pĕrndhum peyarndhum repeatedly; avanŏdu anṛi other than being together with him; ŏr any other; sol word; ilĕn not having; en having a heart which reflects mine; thīrndha fixated; thŏzhi ŏh friend!; ūravar of the people; kavvai accusations; en what; seyyum will do?; ūrāvar people; kavvai accusations

TVM 5.3.4

3258 ஊரவர்கவ்வையெருவிட்டு அன்னைசொல்நீர்படுத்து *
ஈரநெல்வித்திமுளைத்த நெஞ்சப்பெருஞ்செய்யுள் *
பேரமர்காதல் கடல்புரையவிளைவித்த *
காரமர்மேனி! நங்கண்ணன்தோழீ! கடியனே.
3258 ஊரவர் கவ்வை எரு இட்டு * அன்னை சொல் நீர் படுத்து *
ஈர நெல் வித்தி முளைத்த * நெஞ்சப் பெருஞ் செய்யுள் **
பேர் அமர் காதல் * கடல் புரைய விளைவித்த *
கார் அமர் மேனி * நம் கண்ணன் தோழீ! கடியனே (4)
3258 ūravar kavvai ĕru iṭṭu * aṉṉai cŏl nīr paṭuttu *
īra nĕl vitti mul̤aitta * nĕñcap pĕruñ cĕyyul̤ **
per amar kātal * kaṭal puraiya vil̤aivitta *
kār amar meṉi * nam kaṇṇaṉ tozhī! kaṭiyaṉe (4)

Ragam

Biyāgadai / பியாகடை

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

Kaṉṉaṉ, my cloud-hued Lord, has indeed done me so much; He turned the rebukes of the folks around into rich manure, made my mother’s sobering counsel the channel of irrigation, and sowed the seed of devotion. This raised a rich crop of God-love in the spacious field of my heart, big as the ocean. Could such a One, my mate, be dubbed cruel and devoid of compassion?

Explanatory Notes

(i) Mate to the Nāyakī: “I don’t mind your being indifferent to public opinion, if the Lord were at least with you, but now, you are neither here nor there. Why not give up the Lord who seems to treat you as of no consequence?”.

Nāyakī to the Mate: “Is it you speaking like this? How can I at all blame the Lord Who has kindled in me the undying flame of love? Smitten + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தோழீ! தோழியே!; ஊரவர் கவ்வை ஊரார் பழிச்சொல்லையே; எரு இட்டு எருவாக இட்டு; அன்னை சொல் அன்னையின் ஆதரவையே; நீர் மடுத்து நீராகப் பாய்ச்சி; ஈர நெல் வித்தி ஆசை என்னும் நெல் விதைத்து; முளைத்த முளைத்த; நெஞ்ச நெஞ்சாகிற; பெருஞ்செய்யுள் பெரிய வயலிலே; பேர் அமர் பெருத்த ஊர் பூசலையுடைய; காதல் விளைவிப்பதான காதலாகிற பயிரை; கடல் புரைய கடல் போல் அபரிமிதமாக; விளைவித்த விளைவித்த; கார் அமர் மேனி கார்மேக நிறமுடைய; நம் கண்ணன் நம்முடைய கண்ணன்; கடியனே? கெட்டவன் ஆகிவிட்டானா?
eru manure; ittu using; annai mother-s; sol constant advise; nīr water; paduththu using; īram desire; nel paddy seeds; viththi sowing; mul̤aiththa sprout; nenjam heart; perum big; sey ul̤ in the fertile field; pĕr huge; amar having noisy accusations of people; kādhal devotion; kadal puraiya abundant like ocean; vil̤aiviththa made to occur; kār cloud like nature; amar having; mĕni having divine form; nam our obedient; kaṇṇan krishṇa; thŏzhi ŏh friend (who praised his qualities before and engaged me in him)!; kadiyanĕ (now, to be blamed) has he become cruel?; kadiyan having cruelty (ignoring others while quickly engaging in his activities); kodiyan being evil (walking away once such activity is completed)

TVM 5.3.5

3259 கடியன்கொடியன்நெடியமால் உலகங்கொண்ட
அடியன் * அறிவருமேனிமாயத்தன் * ஆகிலும்
கொடியவென்னெஞ்சம் அவனென்றேகிடக்கும்எல்லே! *
துடிகொளிடைமடத்தோழீ! அன்னையென்செய்யுமே?
3259 கடியன் கொடியன் நெடிய மால் * உலகம் கொண்ட
அடியன் * அறிவு அரு மேனி மாயத்தன் ** ஆகிலும்
கொடிய என் நெஞ்சம் * அவன் என்றே கிடக்கும் எல்லே *
துடி கொள் இடை மடத் தோழீ! * அன்னை என் செய்யுமே? (5)
3259 kaṭiyaṉ kŏṭiyaṉ nĕṭiya māl * ulakam kŏṇṭa
aṭiyaṉ * aṟivu aru meṉi māyattaṉ ** ākilum
kŏṭiya ĕṉ nĕñcam * avaṉ ĕṉṟe kiṭakkum ĕlle *
tuṭi kŏl̤ iṭai maṭat tozhī! * aṉṉai ĕṉ cĕyyume? (5)

Ragam

Biyāgadai / பியாகடை

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

The Lord, immense beyond understanding, whose feet measured the worlds, can be either agile and alert or cruelly indifferent. His enchanting form leaves one dazed, yet my obstinate mind clings to Him alone. My slender-waisted, modest friend, if even you can't sway me, how can my mother prevail over me?

Explanatory Notes

(i) The Nāyakī reinforces her stand vis-a-vis the Lord, as set out in the preceding song, by stating that she would adore the Lord even if He were to be a callous despot, bereft of good qualities, and that it was, therefore, no use trying to draw her away from the Lord. Be it a matter of recounting the auspicious traits of the Lord or of cataloguing His oppressive methods + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கடியன் கடுமையையுடையவன்; கொடியன் கொடியவன்; நெடிய மால் பெரிய மேன்மையையுடையவன்; உலகம் கொண்ட உலகம் அளந்து கொண்ட; அடியன் திருவடி உடையவன்; அறிவு நல்லவனோ தீயவனோ என்று; அரு அறிய இயலாத; மேனி தன் திருமேனி அழகாலே; மாயத்தன் மயக்கக் கூடியவன்; ஆகிலும் எப்படி இருந்தாலும்; கொடிய என் நெஞ்சம் கொடிய என் மனம்; அவன் என்றே அப்பெருமானே தஞ்சமென்று; கிடக்கும் கிடக்கிறது; துடி கொள் இடை உடுக்கை போன்ற இடையையும்; மடத் தோழீ! மடப்பத்தையும் உடைய தோழியே!; எல்லே! அன்னை என் தாய்; என் செய்யுமே? என்ன செய்யக்கூடும்?
nediya (while leaving, difficult to stay away) great; māl having supremacy; ulagam the whole world; koṇda accepting it for himself, without leaving anything for the others; adiyan being the deceptive one, who is having it for himself; aṛivu to conceive; aru difficult; mĕni captivating by his beauty; māyaththan āgilum though he is amaśing; kodiya bad (disregarding the worldly limits, unable to withdraw by highlighting the defects); en my; nenjam heart; avanĕ he (who is having the qualities explained here) is the only refuge; enṛu as; kidakkum will remain; ellĕ ellĕ (wonder struck thinking about having these qualities- since emperumān pursues first, since he eliminates our attachment in external matters, since he has great attachment, since he places us at his divine feet exclusively, since he is an amaśing entity who is having an inconceivable form after having helped us)- what amaśing qualities does he have!; thudi slender; kol̤ having; idai waist; madam having humility; thŏzhi ŏh friend!; annai she (mother); en what; seyyum will do?; thŏzhimīr ŏh friends (who share my joy and sorrow); munnai the primordial

TVM 5.3.6

3260 அன்னையென்செய்யிலென்? ஊரென்சொல்லிலென்? தோழிமீர்! *
என்னையினியுமக்காசையில்லை அகப்பட்டேன் *
முன்னையமரர்முதல்வன் வண்துவராபதி
மன்னன் * மணிவண்ணன் வாசுதேவன்வலையுளே.
3260 அன்னை என் செய்யில் என்? * ஊர் என் சொல்லில் என்? தோழிமீர் *
என்னை இனி உமக்கு * ஆசை இல்லை அகப்பட்டேன் **
முன்னை அமரர் முதல்வன் * வண் துவராபதி
மன்னன் * மணிவண்ணன் வாசுதேவன் வலையுளே (6)
3260 aṉṉai ĕṉ cĕyyil ĕṉ? * ūr ĕṉ cŏllil ĕṉ? tozhimīr *
ĕṉṉai iṉi umakku * ācai illai akappaṭṭeṉ **
muṉṉai amarar mutalvaṉ * vaṇ tuvarāpati
maṉṉaṉ * maṇivaṇṇaṉ vācutevaṉ valaiyul̤e (6)

Ragam

Biyāgadai / பியாகடை

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

It doesn't matter what my mother says or what the people around us think. Leave me be. I am captivated by Vāsudevan, with his sapphire hue, the prince of Tuvārakai, the beautiful city, and the chief of Nithyasuris.

Explanatory Notes

(i) Nityas—the ‘Nitya Sūrīs’ or the Eternal Heroes, the ever-free angels in spiritual world.

(ii) Finding the Nāyakī implacable, her mates tried to impress upon her that, by her conduct, she would only imperil the life of her mother and it would be a terrible loss, all round—the Lord hasn’t come to her, her mother would die and the folks around would heap abuses on + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தோழிமீர் தோழிமார்களே!; முன்னை முழு முதல் கடவுளான அவன்; அமரர் முதல்வன் நித்யஸூரிகளின் தலைவன்; வண் துவராபதி அழகிய துவாரகைக்கு; மன்னன் அரசன்; மணிவண்ணன் நீலமணி போன்ற வடிவுடையவன்; வாசுதேவன் வசுதேவரின் புத்ரனான கண்ணனின்; வலையுளே வலையினுள்ளே; அகப்பட்டேன் சிக்கிக் கொண்டேன்; இனி என்னை இனி என்னை மீட்க நினைக்கும்; உமக்கு நீங்கள்; ஆசை இல்லை அந்த ஆசையை விட்டுவிடுங்கள்; அன்னை என் என் தாயார்; செய்யில் என்? என்ன செய்தால் என்ன?; ஊர் என் ஊரார்; சொல்லில் என்? பழி சொல் தான் என்னை என்ன செய்யும்?
amarar to nithyasūris (eternal servitors of emperumān in paramapadham); mudhalvan having the greatness of being their leader; vaṇ having unlimited wealth; thuvarāpathi for ṣrīmath dhvārakā; mannan having the quality of being the king; maṇi attractive like blue gem; vaṇṇan having beautiful form; vāsudhĕvan (even if has no beauty, he cannot be given up for having high family heritage) one who is the son of vasudhĕva, his; valaiyul̤ĕ in to this (deeply strung with four strings) web (of attractive activities), in an inescapable manner; agappattĕn got caught;; ini now; ennai in my case; umakku for you all (who are trying to withdraw me from him); āsai to be obeying you; illai not required;; annai mother; en whatever; seyyil she does; en what does it matter?; ūr people of the town; en whatever; sollil they say; en what does it matter?; ennai me; valaiyul̤ by his attractive qualities and activities

TVM 5.3.7

3261 வலையுளகப்படுத்து என்னைநன்நெஞ்சம்கூவிக்கொண்டு *
அலைகடற்பள்ளியம்மானை ஆழிப்பிரான்தன்னை *
கலைகொளகலல்குல்தோழீ! நம்கண்களால்கண்டு *
தலையில்வணங்கவும்ஆங்கொலோ? தையலார்முன்பே.
3261 வலையுள் அகப்படுத்து * என்னை நல் நெஞ்சம் கூவிக்கொண்டு *
அலை கடல் பள்ளி அம்மானை * ஆழிப்பிரான் தன்னை **
கலை கொள் அகல் அல்குல் தோழீ * நம் கண்களால் கண்டு *
தலையில் வணங்கவும் ஆம் கொலோ * தையலார் முன்பே? (7)
3261 valaiyul̤ akappaṭuttu * ĕṉṉai nal nĕñcam kūvikkŏṇṭu *
alai kaṭal pal̤l̤i ammāṉai * āzhippirāṉ taṉṉai **
kalai kŏl̤ akal alkul tozhī * nam kaṇkal̤āl kaṇṭu *
talaiyil vaṇaṅkavum ām kŏlo * taiyalār muṉpe? (7)

Ragam

Biyāgadai / பியாகடை

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

My lovely, well-clad friend, shall we gaze upon the Lord who captured my heart and took it away? He rests on the surging ocean and wields the discus. Let's bow to Him right in front of these rebuking ladies.

Explanatory Notes

(i) The Nāyakī longs for the Lord’s presence so as to enable her to fall at His feet, right in front of the slanderous folks and silence them. These folks were slandering the Lord as faithless to the Nāyakī and the latter as foolishly sticking on to Him.

(ii) When Kūrathaḻvāṉ discoursed on this song in a place called Rājēntracōḻaṉ, a centenarian got up, shaking from + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கலை கொள் உடை அழகையுடையவளும்; அகல் அல்குல் அகன்ற இடையுடையவளுமான; தோழீ! தோழியே!; என்னை என்னைத் தன்; வலையுள் வலையுள்; அகப்படுத்து சிக்கவைத்து; நல் நெஞ்சம் என்னுடைய நல்ல மனதையும்; கூவிக்கொண்டு கூவி அழைத்துக்கொண்டு; அலை கடல் அலைகளையுடைய கடலிலே; பள்ளி அம்மானை பள்ளி கொள்ளும் பெருமானை; ஆழிப் பிரான் தன்னை ஆழிப் பிரானை; நம் கண்களால் கண்டு நம் கண்களால் பார்த்து; தையலார் முன்பே பழிச்சொல்லும் தாய்மார் முன்பே; தலையில் தலையாலே; வணங்கவும் வணங்கவும்; ஆம் கொலோ? கூடுமோ?
agappaduththu capturing; nal having goodness (more than me, towards him); nenjam heart; kūvik koṇdu who invited it, cutting off the other ties; alai wavy; kadal in the ocean; pal̤l̤i one who is resting in seclusion; emmānai my lord who manifested such reclining posture and made me his servitor; āzhi having divine disc (which protects that beauty); pirān thannai one who is a great benefactor; kalai decorated by beautiful garments; kol̤ having; agal vast; alkul having waist area; thŏzhi ŏh friend!; nam our; kaṇgal̤āl with eyes; kaṇdu see; thaiyalār women who blame us; munbĕ in front of them; thalaiyil by our head; vaṇangavum to bow; ām kolŏ can we?; pĕy the demon-s; mulai bosom

TVM 5.3.8

3262 பேய்முலையுண்டுசகடம்பாய்ந்து மருதிடைப்
போய்முதல்சாய்த்து * புள்வாய்பிளந்துகளிறட்ட *
தூமுறுவல் தொண்டைவாய்ப்பிரானை எந்நாள்கொலோ? *
யாமுறுகின்றதுதோழீ! அன்னையர்நாணவே.
3262 பேய் முலை உண்டு சகடம் பாய்ந்து * மருது இடைப்
போய் முதல் சாய்த்து * புள் வாய் பிளந்து களிறு அட்ட **
தூ முறுவல் தொண்டைவாய்ப் பிரானை * எந் நாள்கொலோ *
யாம் உறுகின்றது தோழீ ** அன்னையர் நாணவே? (8)
3262 pey mulai uṇṭu cakaṭam pāyntu * marutu iṭaip
poy mutal cāyttu * pul̤ vāy pil̤antu kal̤iṟu aṭṭa **
tū muṟuval tŏṇṭaivāyp pirāṉai * ĕn nāl̤kŏlo *
yām uṟukiṉṟatu tozhī ** aṉṉaiyar nāṇave? (8)

Ragam

Biyāgadai / பியாகடை

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

When will we finally attain the divine Lord with coral-red lips, whose smile is as pure as can be? He who suckled at the demon's breast, crawled between twin trees, shattered the wheel, severed the bird's beak, and crushed the elephant, leaving these elders to hang their heads in shame.

Explanatory Notes

The Nāyakī enumerates the deeds of Lord Kṛṣṇa, directed towards the annihilation of the evil forces, the opponents of the devotees. If such a great Benefactor could come and join her, it would put to shame the elders who were all bereft of good qualities, condemning Him as heartless, faithless and so on. It needs to be specially noted that the Lord’s appearance is sought, + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தோழீ! தோழியே!; பேய் முலை உண்டு பூதனையின் பாலை உண்டு; சகடம் பாய்ந்து சகடத்தை முறித்து; மருது இடை மருதமரங்களிடையே; போய் தவழ்ந்து சென்று; முதல் சாய்த்து வேரோடே தள்ளி; புள் வாய் பகாசுரனின் வாயை; பிளந்து பிளந்து; களிறு அட்ட குவலயாபீட யானையைக் கொன்று; தூ முறுவல் தூய புன்முறுவலையும்; தொண்டை தொண்டைப்பழம் போல்; வாய் சிவந்த அதரத்தையும் உடைய; பிரானை எம்பெருமானை; அன்னையர் நாணவே தாய்மார் தலை குனிய; யாம் உறுகின்றது நாம் கிட்டுவது; எந் நாள்கொலோ? என்றைக்கோ?
uṇdu consumed; sagadam ṣakata [wheel possessed by a demon]; pāyndhu jumped on; marudhu arjuna tree; idai in between; pŏy went; mudhal along with the root; sāyththu knocking down; pul̤ bakāsura, the bird [demon in the form of a crane]; vāy mouth; pil̤andhu tore; kal̤iṛu kuvalayāpīda, the wild elephant; atta killed; thū white; muṛuval shining smile; thoṇdai reddish like thoṇdai (tindora) fruit; vāy beautiful lips; pirānai the benefactor who enjoyed the gŏpikās, his devotees; thŏzhi ŏh friend!; annaiyar mothers (who blamed him); nāṇa to feel ashamed; yām we; uṛuginṛadhu will attain; ennāl̤ kolŏ when?; ennai me; nāṇum shyness

TVM 5.3.9

3263 நாணும்நிறையும்கவர்ந்து என்னைநல்நெஞ்சம்கூவிக் கொண்டு *
சேணுயர்வானத்திருக்கும்தேவபிரான்தன்னை *
ஆணையென்? தோழீ! உலகுதோறலர் தூற்றி * ஆம்
கோணைகள்செய்து குதிரியாய்மடலூர்துமே.
3263 நாணும் நிறையும் கவர்ந்து * என்னை நல் நெஞ்சம் கூவிக்கொண்டு *
சேண் உயர் வானத்து இருக்கும் * தேவ பிரான் தன்னை **
ஆணை என் தோழீ! * உலகுதோறு அலர் தூற்றி! * ஆம்
கோணைகள் செய்து * குதிரியாய் மடல் ஊர்துமே (9)
3263 nāṇum niṟaiyum kavarntu * ĕṉṉai nal nĕñcam kūvikkŏṇṭu *
ceṇ uyar vāṉattu irukkum * teva pirāṉ taṉṉai **
āṇai ĕṉ tozhī! * ulakutoṟu alar tūṟṟi! * ām
koṇaikal̤ cĕytu * kutiriyāy maṭal ūrtume (9)

Ragam

Biyāgadai / பியாகடை

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

Oh, mate, be sure, I shall resort to maṭal, getting out of hand, and arraign, in every way and in all lands, the Chief of Nithyasuris, who stole my good mind along with my shyness and modesty and now stays in SriVaikuntam.

Explanatory Notes

in the seventh song of this decad. the Nāyakī had complained that the Lord had stolen her heart and fled with it to the milk-ocean. Apprehending that the Nāyakī might get at Him even there, He seems to have since gone to the high spiritual worlds, so as to be out of her reach. But the Nāyakī is now determined to get out of her shell and ferret Him out wherever He might go and expose Him thoroughly all over the land.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
என் தோழீ! என் தோழியே!; என்னை என்னுடைய; நாணும் நாணத்தையும்; நிறையும் அடக்கத்தையும்; கவர்ந்து கவர்ந்து சென்று; நல் நெஞ்சம் என் நல்ல மனதையும்; கூவிக்கொண்டு கூவி அழைத்துக்கொண்டு; சேண் உயர் மிக உயர்ந்த; வானத்து இருக்கும் பரமபதத்திலிருப்பவனை; தேவ பிரான் தன்னை எம்பெருமானை; உலகுதோறு உலகத்தவர் அறிய; அலர் தூற்றி பழி தூற்றி; கோணைகள் என்னைக் கைவிட்ட குற்றத்தை; செய்து கூறி; குதிரியாய் அடங்காதவளாய்; மடல் ஊர்துமே மடலூர்தலும் செய்வேன்; ஆணை இது உறுதி என்று ஆணையிடுகிறேன்
niṛaiyum completeness; kavarndhu capturing; nal very friendly; nenjam heart; kūvik koṇdu inviting; sĕṇ uyar very lofty; vānaththu paramapadham (which is indicated by the word paramākāṣa); irukkum one who is being present; dhĕvar sūris (eternally free souls in paramapadham); pirān thannai one who is greater than all (one who reveals his activities of the material realm); en one who is obedient towards me; thŏzhi ŏh friend!; āṇai its my vow on you; ulagu thŏṛu in all worlds; alar accusations; thūṝi spreading (to make it well known); ām which can be done; kŏṇaigal̤ all troubles; seydhu performing; kudhiri shameless girl who cannot be controlled by anyone; āy being; madal madal; ūrdhum will engage.; matching the femininity, in any manner; madam shyness

TVM 5.3.10

3264 யாமடலூர்ந்தும் எம்மாழியங்கைப்பிரானுடை *
தூமடல்தண்ணந்துழாய் மலர்கொண்டுசூடுவோம் *
யாமடமின்றித் தெருவுதோறு அயல்தையலார் *
நாமடங்கப்பழிதூற்றி நாடுமிரைக்கவே.
3264 யாம் மடல் ஊர்ந்தும் * எம் ஆழி அங்கைப் பிரான் உடை *
தூ மடல் தண் அம் துழாய் * மலர் கொண்டு சூடுவோம் **
யாம் மடம் இன்றித் தெருவுதோறு * அயல் தையலார் *
நா மடங்காப் பழி தூற்றி * நாடும் இரைக்கவே (10)
3264 yām maṭal ūrntum * ĕm āzhi aṅkaip pirāṉ uṭai *
tū maṭal taṇ am tuzhāy * malar kŏṇṭu cūṭuvom **
yām maṭam iṉṟit tĕruvutoṟu * ayal taiyalār *
nā maṭaṅkāp pazhi tūṟṟi * nāṭum iraikkave (10)

Ragam

Biyāgadai / பியாகடை

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

With all inhibition cast aside, I will boldly traverse every street, stirring women across all realms to join me in outcry and commotion, as they empathize with my plight. I will seek recourse to Maṭal and obtain from the Lord, who wields the charming discus, the cool and exquisite tuḷaci garland adorned with pure petals, and proudly wear it.

Explanatory Notes

If the Nāyakī contemplates such a drastic move, totally repugnant to her essential nature, it is because of the exuberance of her God-love and the resultant intolerance of delayed consummation. This aspect has already been dealt with, in extenso, in the preamble to this decad. At the end of all these hectic activities, all that the Nāyakī aspires for is the Lord’s tuḷaci + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
யாம் மடம் இன்றி பெண்மையைக் கைவிட்டு; தெருவு தோறு வீதிகள் தோறும் புகுந்து; நாடும் உலகம் முழுதும்; அயல் தையலார் அயலாரான பெண்கள்; நா மடங்கா நாக்கு இடைவிடாதே சொல்லுகிற; பழி தூற்றி பழி மொழிகளைத் தூற்றி; இரைக்கவே இரைந்து இரைந்து; யாம் மடல் ஊர்ந்தும் நாம் மடலூர்ந்தாகிலும்; எம் ஆழி அங்கை சக்கரத்தை கையிலுடைய; பிரான் உடை பெருமானின்; தூ மடல் தூய இதழ்களோடு கூடின; தண் அம் துழாய் மலர் குளிர்ந்த துளசிமாலையை; கொண்டு அவன் தரப்பெற்று; சூடுவோம் தலையில் அணிவோம்
inṛi without; theruvu thŏṛu in every street; ayal neighbouring; thaiyalār women; tongue; madangā saying continuously; pazhi accusations; thūṝi hurling; nādum all of the world; iraikka to call out in an angry/agitated manner; yām we (who have femininity and hence cannot engage in madal); madal madal (which does not match our nature); ūrndhum even by engaging in; āzhi am kai one who lets us enjoy the combination of his hand and chakra; em attracted us; pirānudai benefactor-s; thū pure due to its freshness; madal having leaf; thaṇ invigorating; am attractive; thuzhāy thul̤asi; malar garland; koṇdu accepting it from him; sūduvŏm will wear it in our head.; iraikkum noisy due to rising tides; karum kadal abundant like blackish sea

TVM 5.3.11

3265 இரைக்குங்கருங்கடல்வண்ணன் கண்ணபிரான்தன்னை *
விரைக்கொள்பொழில் குருகூர்ச்சடகோபன்சொன்ன *
நிரைக்கொளந்தாதி ஓராயிரத்துள்இப்பத்தும் *
உரைக்கவல்லார்க்கு வைகுந்தமாகும்தம்மூரெல்லாம். (2)
3265 ## இரைக்கும் கருங் கடல் வண்ணன் * கண்ண பிரான் தன்னை *
விரைக் கொள் பொழில் * குருகூர்ச் சடகோபன் சொன்ன **
நிரைக் கொள் அந்தாதி * ஓர் ஆயிரத்துள் இப் பத்தும் *
உரைக்க வல்லார்க்கு * வைகுந்தம் ஆகும் தம் ஊர் எல்லாம் (11)
3265 ## iraikkum karuṅ kaṭal vaṇṇaṉ * kaṇṇa pirāṉ taṉṉai *
viraik kŏl̤ pŏzhil * kurukūrc caṭakopaṉ cŏṉṉa **
niraik kŏl̤ antāti * or āyirattul̤ ip pattum *
uraikka vallārkku * vaikuntam ākum tam ūr ĕllām (11)

Ragam

Biyāgadai / பியாகடை

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

Those who chant these ten songs from the thousand composed by Caṭakōpaṉ of Kurukūr, a place full of fragrant orchards, adoring Lord Kaṇṇaṉ of the ocean's hue, will enjoy spiritual and worldly bliss right in their homes.

Explanatory Notes

(i) The Lord will court those that recite these ten songs and remain inseparably united with them. Where the Lord is there is spiritual world and thus the chanters of this Tiruvāy-moḻi (decad) get the spiritual world transported unto them.

(ii) “Roaring ocean”—The ocean is in a state of upheaval, the bottom of the sea throwing the sands right up to the surface in violent + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இரைக்கும் ஒலிக்கும்; கருங் கடல் கருங் கடல் போன்ற; வண்ணன் வடிவழகு உடையவனான; கண்ணபிரான் தன்னை கண்ணனைக் குறித்து; விரைக் கொள் மணம் கமழும்; பொழில் சோலைகளையுடைய; குருகூர் திருக்குருகூரில் அவதரித்த; சடகோபன் நம்மாழ்வார்; நிரை எழுத்தும் சீரும் தளையும் தொடையும்; கொள் பாவும் இனமும் இசையும் தாளமும் உடைய; அந்தாதி அந்தாதியாய்; சொன்ன அருளிச்செய்த; ஓர் ஆயிரத்துள் ஆயிரம் பாசுரங்களுள்; இப் பத்தும் இந்தப் பத்துப் பாசுரங்களையும்; உரைக்க வல்லார்க்கு ஓத வல்லார்க்கு; தம் ஊர் எல்லாம் தங்கள் இருப்பிடமே; வைகுந்தம் ஆகும் வைகுந்தம் ஆகும்
vaṇṇan one who is having beautiful form; pirān one who is of the nature of letting his devotees enjoy such beauty; kaṇṇan thannai krishṇa; viraik kol̤ greatly fragrant; pozhil having garden; kurugūravar leader of those who dwell in [āzhvār]thirunagari; satakŏpan āzhvār; sonna mercifully spoke; nirai Poetic aspects such ezhuththu, asai, sīr, thal̤ai, adi, thodai, pā, isai, thāl̤am and other decorative aspects; kol̤ having; andhādhi being in andhādhi [antham + ādhi, a type of poem where the last word of one pāsuram is used as the first word in the next pāsuram]; ŏr distinguished; āyiraththul̤ among the thousand pāsurams; ippaththum this decad; uraikka vallārkku for those who can recite just the pāsurams (without understanding anything more); tham where they are located; ūr ellām the towns/abodes; vaigundham to be said as paramapadham; āgum have bliss.; ūr the whole town; ellām everyone