Your browser does not support the audio element.
audio
3244 பொலிகபொலிகபொலிக போயிற்றுவல்லுயிர்ச்சாபம் *
நலியும்நரகமும்நைந்த நமனுக்கிங்கியாதொன்றுமில்லை *
கலியும்கெடும்கண்டுகொண்மின் கடல்வண்ணன்பூதங்கள் மண்மேல் *
மலியப்புகுந்திசைபாடி ஆடியுழிதரக்கண்டோ ம். (2)
3245 கண்டோம்கண்டோம்கண்டோம் கண்ணுக்கினியன கண்டோம் *
தொண்டீர்! எல்லீரும்வாரீர் தொழுதுதொழுது நின்றார்த்தும் *
வண்டார்தண்ணந்துழாயான் மாதவன்பூதங்கள்மண்மேல் *
பண்தான்பாடிநின்றாடிப் பரந்துதிரிகின்றனவே.
3246 திரியுங்கலியுகம்நீங்கித் தேவர்கள்தாமும்புகுந்து *
பெரியகிதயுகம்பற்றிப் பேரின்பவெள்ளம்பெருக *
கரியமுகில்வண்ணனெம்மான் கடல்வண்ணன்பூதங்கள் மண்மேல் *
இரியப்புகுந்திசைபாடி எங்குமிடங்கொண்டனவே.
3247 இடங்கொள்சமயத்தையெல்லாம் எடுத்துக்களைவன போல *
தடங்கடற்பள்ளிப்பெருமான்தன்னுடைப்பூதங்களேயாய் *
கிடந்துமிருந்துமெழுந்தும் கீதம்பலபலபாடி *
நடந்தும்பறந்தும்குனித்தும் நாடகம்செய்கின்றனவே.
3248 செய்கின்றதென்கண்ணுக்கொன்றே ஒக்கின்ற திவ்வுலகத்து *
வைகுந்தன்பூதங்களேயாய் மாயத்தினாலெங்கும்மன்னி *
ஐயமொன்றில்லை அரக்கர்அசுரர்பிறந்தீருள்ளீரேல் *
உய்யும்வகையில்லைதொண்டீர்! ஊழிபெயர்த்திடும் கொன்றே.
3249 கொன்றுயிருண்ணும்விசாதி பகைபசிதீயனவெல்லாம் *
நின்றிவ்வுலகிற்கடிவான் நேமிப்பிரான்தமர்போந்தார் *
நன்றிசைபாடியும்துள்ளியாடியும் ஞாலம்பரந்தார் *
சென்றுதொழுதுய்ம்மின்தொண்டீர்! சிந்தையைச் செந்நிறுத்தியே.
3250 நிறுத்திநும்முள்ளத்துக்கொள்ளும் தெய்வங்களும்மை யுய்யக்கொள் *
மறுத்துமவனோடேகண்டீர் மார்க்கண்டேயனும்கரியே *
கறுத்தமனமொன்றும்வேண்டா கண்ணனல்லால் தெய்வமில்லை *
இறுப்பதெல்லாம் அவன்மூர்த்தியாயவர்க்கேயிறுமினே.
3251 இறுக்குமிறையிறுத்துண்ண எவ்வுலகுக்கும்தன்மூர்த்தி *
நிறுத்தினான்தெய்வங்களாக அத்தெய்வநாயகன்தானே *
மறுத்திருமார்வனவன்தன் பூதங்கள்கீதங்கள்பாடி *
வெறுப்பின்றிஞாலத்துமிக்கார் மேவித்தொழுதுய்ம்மின் நீரே.
3252 மேவித்தொழுதுய்ம்மினீர்கள் வேதப்புனிதவிருக்கை *
நாவிற்கொண்டச்சுதன்தன்னை ஞானவிதிபிழையாமே *
பூவிற்புகையும்விளக்கும் சாந்தமும்நீரும்மலிந்து *
மேவித்தொழுமடியாரும் பகவருமிக்கதுலகே.
3253 மிக்கவுலகுகள்தோறும் மேவிக்கண்ணன்திருமூர்த்தி *
நக்கபிரானோடு அயனுமிந்திரனும்முதலாக *
தொக்கவமரர்குழாங்கள்எங்கும்பரந்தனதொண்டீர்! *
ஒக்கத்தொழுகிற்றிராகில் கலியுகமொன்றுமில்லையே.
3254 கலியுகமொன்றுமின்றிக்கே தன்னடியார்க்கருள் செய்யும் *
மலியுஞ்சுடரொளிமூர்த்தி மாயப்பிரான்கண்ணன்தன்னை *
கலிவயல்தென்னன்குருகூர்க் காரிமாறன்சடகோபன் *
ஒலிபுகழாயிரத்திப்பத்து உள்ளத்தைமாசறுக்கும்மே. (2)