Chapter 1

Āndāl waking up her friends - (மார்கழித் திங்கள்)

ஆண்டாள் தோழிகளை எழுப்புதல்
Āndāl waking up her friends - (மார்கழித் திங்கள்)
Recitation
Translation

TP 1.1

474 மார்கழித்திங்கள் மதிநிறைந்தநன்னாளால் *

நீராடப்போதுவீர் போதுமினோநேரிழையீர்! *

சீர்மல்குமாய்ப்பாடிச் செல்வச்சிறுமீர்காள்! *

கூர்வேல்கொடுந்தொழிலன் நந்தகோபன்குமரன் *

ஏரார்ந்தகண்ணி யசோதையிளஞ்சிங்கம் *

கார்மேனிச்செங்கண் கதிர்மதியம்போல்முகத்தான் *

நாராயணனே நமக்கேபறைதருவான் *

பாரோர்புகழப் படிந்தேலோரெம்பாவாய். (2)

TP 1.2

475 வையத்துவாழ்வீர்காள்! நாமும்நம்பாவைக்கு *

செய்யும்கிரிசைகள் கேளீரோ * பாற்கடலுள்

பையத்துயின்ற பரமனடிபாடி *

நெய்யுண்ணோம்பாலுண்ணோம் நாட்காலேநீராடி *

மையிட்டெழுதோம் மலரிட்டுநாம்முடியோம் *

செய்யாதனசெய்யோம் தீக்குறளைசென்றோதோம் *

ஐயமும்பிச்சையும் ஆந்தனையும்கைகாட்டி *

உய்யுமாறெண்ணி உகந்தேலோரெம்பாவாய்.

TP 1.3

476 ஓங்கியுலகளந்த உத்தமன்பேர்பாடி *

நாங்கள்நம்பாவைக்குச் சாற்றிநீராடினால் *

தீங்கின்றிநாடெல்லாம் திங்கள்மும்மாரிபெய்து *

ஓங்குபெருஞ்செந்நெலூடு கயலுகளப் *

பூங்குவளைப்போதில் பொறிவண்டுகண்படுப்பத் *

தேங்காதேபுக்கிருந்து சீர்த்தமுலைபற்றி

வாங்க * குடம்நிறைக்கும் வள்ளல்பெரும்பசுக்கள் *

நீங்காதசெல்வம் நிறைந்தேலோரெம்பாவாய். (2)

TP 1.4

477 ஆழிமழைக்கண்ணா! ஒன்றுநீகைகரவேல் *

ஆழியுள்புக்கு முகந்துகொடார்த்தேறி *

ஊழிமுதல்வனுருவம்போல்மெய்கறுத்துப் *

பாழியந்தோளுடைப் பற்பநாபன்கையில் *

ஆழிபோல்மின்னி வலம்புரிபோல்நின்றதிர்ந்து *

தாழாதேசார்ங்கமுதைத்த சரமழைபோல் *

வாழவுலகினில்பெய்திடாய் * நாங்களும்

மார்கழிநீராட மகிழ்ந்தேலோரெம்பாவாய்.

TP 1.5

478 மாயனை மன்னுவடமதுரைமைந்தனைத் *

தூயபெருநீர் யமுனைத்துறைவனை *

ஆயர்குலத்தினில்தோன்றும் அணிவிளக்கைத் *

தாயைக்குடல்விளக்கம்செய்த தாமோதரனைத் *

தூயோமாய்வந்துநாம் தூமலர் தூவித்தொழுது *

வாயினால்பாடி மனத்தினால்சிந்திக்கப் *

போயபிழையும் புகுதருவான்நின்றனவும் *

தீயினில்தூசாகும் செப்பேலோரெம்பாவாய்.

TP 1.6

479 புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயிலின் *

வெள்ளைவிளிசங்கின் பேரரவம்கேட்டிலையோ? *

பிள்ளாய்! எழுந்திராய் பேய்முலைநஞ்சுண்டு *

கள்ளச்சகடம் கலக்கழியக்காலோச்சி *

வெள்ளத்தரவில் துயிலமர்ந்தவித்தினை *

உள்ளத்துக்கொண்டு முனிவர்களும்யோகிகளும் *

மெள்ளவெழுந்து அரியென்றபேரரவம் *

உள்ளம்புகுந்து குளிர்ந்தேலோரெம்பாவாய்.

TP 1.7

480 கீசுகீசென்றெங்கும் ஆனைச்சாத்தன் * கலந்து

பேசினபேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே! *

காசும்பிறப்பும் கலகலப்பக்கைபேர்த்து *

வாசநறுங்குழலாய்ச்சியர் * மத்தினால்

ஓசைபடுத்த தயிரரவம்கேட்டிலையோ? *

நாயகப்பெண்பிள்ளாய்! நாராயணன்மூர்த்தி *

கேசவனைப்பாடவும் நீகேட்டேகிடத்தியோ? *

தேசமுடையாய்! திறவேலோரெம்பாவாய்.

TP 1.8

481 கீழ்வானம்வெள்ளென்று எருமைசிறுவீடு *

மேய்வான்பரந்தனகாண் மிக்குள்ளபிள்ளைகளும் *

போவான்போகின்றாரைப் போகாமல்காத்து * உன்னைக்

கூவுவான்வந்துநின்றோம் * கோதுகலமுடைய

பாவாய்! எழுந்திராய் பாடிப்பறைகொண்டு *

மாவாய்பிளந்தானை மல்லரைமாட்டிய *

தேவாதிதேவனைச் சென்றுநாம்சேவித்தால் *

ஆவாவென்றாராய்ந் தருளேலோரெம்பாவாய்.

TP 1.10

483 நோற்றுச்சுவர்க்கம் புகுகின்றவம்மனாய்! *

மாற்றமும்தாராரோ? வாசல்திறவாதார் *

நாற்றத்துழாய்முடி நாராயணன்நம்மால் *

போற்றப்பறைதரும் புண்ணியனால் * பண்டொருநாள்

கூற்றத்தின்வாய்வீழ்ந்த கும்பகரணனும் *

தோற்றுமுனக்கே பெருந்துயில்தான்தந்தானோ? *

ஆற்றஅனந்தலுடையாய்! அருங்கலமே! *

தேற்றமாய்வந்து திறவேலோரெம்பாவாய்.

TP 1.11

484 கற்றுக்கறவைக் கணங்கள்பலகறந்து *

செற்றார்திறலழியச் சென்றுசெருச்செய்யும் *

குற்றமொன்றில்லாத கோவலர்தம்பொற்கொடியே! *

புற்றரவல்குல் புனமயிலே! போதராய் *

சுற்றத்துத்தோழிமாரெல்லாரும்வந்து * நின்

முற்றம்புகுந்து முகில்வண்ணன்பேர்பாட *

சிற்றாதேபேசாதே செல்வப்பெண்டாட்டி! * நீ

எற்றுக்குறங்கும் பொருளேலோரெம்பாவாய்.

TP 1.12

485 கனைத்திளங்கற்றெருமை கன்றுக்கிரங்கி *

நினைத்துமுலைவழியே நின்றுபால்சோர *

நனைத்தில்லம்சேறாக்கும் நற்செல்வன்தங்காய்! *

பனித்தலைவீழ நின்வாசற்கடைபற்றிச் *

சினத்தினால்தென்னிலங்கைக் கோமானைச்செற்ற *

மனத்துக்கினியானைப் பாடவும்நீவாய்திறவாய் *

இனித்தானெழுந்திராய் ஈதென்னபேருறக்கம்? *

அனைத்தில்லத்தாரும் அறிந்தேலோரெம்பாவாய்.

TP 1.13

486 புள்ளின்வாய்கீண்டானைப் பொல்லாவரக்கனை *

கிள்ளிக்களைந்தானைக் கீர்த்திமைபாடிப்போய் *

பிள்ளைகளெல்லாரும் பாவைக்களம்புக்கார் *

வெள்ளியெழுந்து வியாழ முறங்கிற்று *

புள்ளும்சிலம்பினகாண் போதரிக்கண்ணினாய்! *

குள்ளக்குளிரக் குடைந்துநீராடாதே *

பள்ளிக்கிடத்தியோ? பாவாய்! நீநன்னாளால் *

கள்ளம்தவிர்ந்து கலந்தேலோரெம்பாவாய்.

TP 1.14

487 உங்கள்புழக்கடைத் தோட்டத்துவாவியுள் *

செங்கழுனீர்வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய்கூம்பின காண் *

செங்கற்பொடிக்கூறை வெண்பல்தவத்தவர் *

தங்கள்திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார் *

எங்களைமுன்ன மெழுப்புவான்வாய்பேசும் *

நங்காய்! எழுந்திராய் நாணாதாய்! நாவுடையாய்! *

சங்கொடுசக்கரம் ஏந்தும்தடக்கையன் *

பங்கயக்கண்ணானைப் பாடேலோரெம்பாவாய்.

TP 1.15

488 எல்லே! இளங்கிளியே! இன்னமுறங்குதியோ? *

சில்லென்றழையேன்மின்! நங்கைமீர்! போதருகின்றேன் *

வல்லையுன்கட்டுரைகள் பண்டேயுன்வாயறிதும் *

வல்லீர்கள்நீங்களே நானேதானாயிடுக *

ஒல்லைநீபோதாய் உனக்கென்ன வேறுடையை *

எல்லாரும்போந்தாரோ? போந்தார்போந்தெண்ணிக்கொள் *

வல்லானைகொன்றானை மாற்றாரைமாற்றழிக்க

வல்லானை * மாயனைப் பாடேலோரெம்பாவாய்.