Everyone Has Arrived: Why Do You Still Sleep?
யாவரும் வந்தனர்: நீ எதற்காக உறங்குகிறாய்?

484 கற்றுக்கறவைக் கணங்கள்பலகறந்து *
செற்றார்திறலழியச் சென்றுசெருச்செய்யும் *
குற்றமொன்றில்லாத கோவலர்தம்பொற்கொடியே! *
புற்றரவல்குல் புனமயிலே! போதராய் *
சுற்றத்துத்தோழிமாரெல்லாரும்வந்து * நின்
முற்றம்புகுந்து முகில்வண்ணன்பேர்பாட *
சிற்றாதேபேசாதே செல்வப்பெண்டாட்டி! * நீ
எற்றுக்குறங்கும் பொருளேலோரெம்பாவாய்.