Recite the Sacred Names of Mādhava
மாதவன் திருநாமங்களைச் சொல்

482 தூமணிமாடத்துச் சுற்றும்விளக்கெரியத் *
தூபம்கமழத் துயிலணைமேல்கண்வளரும் *
மாமான்மகளே! மணிக்கதவம்தாள்திறவாய் *
மாமீர்! அவளையெழுப்பீரோ? * உன்மகள்தான்
ஊமையோ? அன்றிச்செவிடோ? அனந்தலோ? *
ஏமப்பெருந் துயில் மந்திரப்பட்டாளோ? *
மாமாயன்மாதவன் வைகுந்தனென்றென்று *
நாமம்பலவும் நவின்றேலோரெம்பாவாய்.