
489 நாயகனாய்நின்ற நந்தகோபனுடைய
கோயில்காப்பானே! * கொடித்தோன்றும் தோரண
வாயில்காப்பானே! * மணிக்கதவம்தாள்திறவாய் *
ஆயர்சிறுமியரோமுக்கு * அறைபறை
மாயன்மணிவண்ணன் நென்னலேவாய்நேர்ந்தான் *
தூயோமாய்வந்தோம் துயிலெழப்பாடுவான் *
வாயால்முன்னம்முன்னம் மாற்றாதேயம்மா! * நீ
நேயநிலைக்கதவம் நீக்கேலோரெம்பாவாய். (2)
491 உந்துமதகளிற்றன் ஓடாததோள்வலியன் *
நந்தகோபாலன்மருமகளே! நப்பின்னாய்! *
கந்தம்கமழுங்குழலி! கடைதிறவாய் *
வந்தெங்குங் கோழியழைத்தனகாண் * மாதவிப்
பந்தல்மேல் பல்கால்குயிலினங்கள்கூவினகாண் *
பந்தார்விரலி! உன்மைத்துனன்பேர்பாட *
செந்தாமரைக்கையால் சீரார்வளையொலிப்ப *
வந்துதிறவாய் மகிழ்ந்தேலோரெம்பாவாய். (2)
493 முப்பத்துமூவ ரமரர்க்குமுன்சென்று *
கப்பம்தவிர்க்கும்கலியே! துயிலெழாய் *
செப்பமுடையாய்! திறலுடையாய்! * செற்றார்க்கு
வெப்பம்கொடுக்கும் விமலா! துயிலெழாய் *
செப்பென்னமென்முலைச் செவ்வாய்ச்சிறுமருங்குல் *
நப்பின்னைநங்காய்! திருவே! துயிலெழாய் *
உக்கமும்தட்டொளியும் தந்துஉன்மணாளனை *
இப்போதே எம்மைநீராட்டேலோரெம்பாவாய்.
494 ஏற்றகலங்கள் எதிர்பொங்கிமீதளிப்ப *
மாற்றாதேபால்சொரியும் வள்ளல்பெரும்பசுக்கள் *
ஆற்றப்படைத்தான்மகனே! அறிவுறாய் *
ஊற்றமுடையாய்! பெரியாய்! * உலகினில்
தோற்றமாய்நின்ற சுடரே! துயிலெழாய் *
மாற்றார்உனக்கு வலிதொலைந்துஉன்வாசற்கண் *
ஆற்றாதுவந்து உன்னடிபணியுமாபோலே *
போற்றியாம்வந்தோம் புகழ்ந்தேலோரெம்பாவாய்.
495 அங்கண்மாஞாலத்தரசர் * அபிமான
பங்கமாய்வந்து நின்பள்ளிக்கட்டிற்கீழே *
சங்கமிருப்பார்போல் வந்துதலைப்பெய்தோம் *
கிங்கிணிவாய்ச்செய்த தாமரைப்பூப்போலே *
செங்கண்சிறுச்சிறிதே எம்மேல்விழியாவோ? *
திங்களும்ஆதித்தியனும் எழுந்தாற்போல் *
அங்கணிரண்டும்கொண்டு எங்கல்மேல்நோக்குதியேல் *
எங்கள்மேல்சாபம் இழிந்தேலோரெம்பாவாய்.
496 மாரிமலைமுழைஞ்சில் மன்னிக்கிடந்துறங்கும் *
சீரியசிங்கம் அறிவுற்றுத்தீவிழித்து *
வேரிமயிர்பொங்க எப்பாடும்பேர்ந்துதறி *
மூரிநிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு *
போதருமாபோலே நீபூவைப்பூவண்ணா! * உன்
கோயில்நின்று இங்ஙனேபோந்தருளி! * கோப்புடைய
சீரியசிங்காசனத்திருந்து * யாம்வந்த
காரியமாராய்ந்தரு ளேலோரெம்பாவாய். (2)