Was it Not You Who Promised to Awaken Us?
எங்களை எழுப்புவதாக அன்றோ நீ சொன்னாய்!

487 உங்கள்புழக்கடைத் தோட்டத்துவாவியுள் *
செங்கழுனீர்வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய்கூம்பின காண் *
செங்கற்பொடிக்கூறை வெண்பல்தவத்தவர் *
தங்கள்திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார் *
எங்களைமுன்ன மெழுப்புவான்வாய்பேசும் *
நங்காய்! எழுந்திராய் நாணாதாய்! நாவுடையாய்! *
சங்கொடுசக்கரம் ஏந்தும்தடக்கையன் *
பங்கயக்கண்ணானைப் பாடேலோரெம்பாவாய்.