O Young Maiden! Arise!
பாவாய்! எழுந்திரு

481 கீழ்வானம்வெள்ளென்று எருமைசிறுவீடு *
மேய்வான்பரந்தனகாண் மிக்குள்ளபிள்ளைகளும் *
போவான்போகின்றாரைப் போகாமல்காத்து * உன்னைக்
கூவுவான்வந்துநின்றோம் * கோதுகலமுடைய
பாவாய்! எழுந்திராய் பாடிப்பறைகொண்டு *
மாவாய்பிளந்தானை மல்லரைமாட்டிய *
தேவாதிதேவனைச் சென்றுநாம்சேவித்தால் *
ஆவாவென்றாராய்ந் தருளேலோரெம்பாவாய்.