Chapter 1

Praising God - (மின் உரு)

எம்பெருமானை புகழ்வது
Verses: 2052 to 2061
Grammar: Eṇcīrk Kaḻinediladi Āsiriya Viruththam / எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
  • TNT 1.1
    2052 ## மின் உருவாய் முன் உருவில் வேதம் நான்கு ஆய் *
    விளக்கு ஒளி ஆய் முளைத்து எழுந்த திங்கள் தான் ஆய் *
    பின் உரு ஆய் முன் உருவில் பிணி மூப்பு இல்லாப் *
    பிறப்பிலி ஆய் இறப்பதற்கே எண்ணாது ** எண்ணும்
    பொன் உரு ஆய் மணி உருவில் பூதம் ஐந்து ஆய்ப் *
    புனல் உரு ஆய் அனல் உருவில் திகழும் சோதி *
    தன் உரு ஆய் என் உருவில் நின்ற எந்தை *
    தளிர் புரையும் திருவடி என் தலைமேலவே 1
  • TNT 1.2
    2053 பார் உருவில் நீர் எரி கால் விசும்பும் ஆகிப் *
    பல் வேறு சமயமும் ஆய்ப் பரந்து நின்ற *
    ஏர் உருவில் மூவருமே என்ன நின்ற *
    இமையவர் தம் திருவுரு வேறு எண்ணும்போது **
    ஓர் உருவம் பொன் உருவம் ஒன்று செந்தீ *
    ஒன்று மா கடல் உருவம் ஒத்துநின்ற *
    மூவுருவும் கண்ட போது ஒன்றாம் சோதி *
    முகில் உருவம் எம் அடிகள் உருவம் தானே 2
  • TNT 1.3
    2054 திருவடிவில் கரு நெடுமால் சேயன் என்றும் *
    திரேதைக்கண் வளை உருவாய்த் திகழ்ந்தான் என்றும் *
    பெரு வடிவில் கடல் அமுதம் கொண்ட காலம் *
    பெருமானைக் கரு நீல வண்ணன் தன்னை **
    ஒரு வடிவத்து ஓர் உரு என்று உணரல் ஆகாது *
    ஊழிதோறு ஊழி நின்று ஏத்தல் அல்லால் *
    கரு வடிவில் செங் கண்ண வண்ணன் தன்னைக் *
    கட்டுரையே யார் ஒருவர் காண்கிற்பாரே? 3
  • TNT 1.4
    2055 இந்திரற்கும் பிரமற்கும் முதல்வன் தன்னை *
    இரு நிலம் கால் தீ நீர் விண் பூதம் ஐந்து ஆய் *
    செந்திறத்த தமிழ் ஓசை வடசொல் ஆகித் *
    திசை நான்கும் ஆய்த் திங்கள் ஞாயிறு ஆகி **
    அந்தரத்தில் தேவர்க்கும் அறியல் ஆகா
    அந்தணனை * அந்தணர்மாட்டு அந்தி வைத்த
    மந்திரத்தை * மந்திரத்தால் மறவாது என்றும் *
    வாழுதியேல் வாழலாம் மட நெஞ்சமே 4
  • TNT 1.5
    2056 ஒண் மிதியில் புனல் உருவி ஒரு கால் நிற்ப *
    ஒரு காலும் காமரு சீர் அவுணன் உள்ளத்து *
    எண் மதியும் கடந்து அண்டமீது போகி *
    இரு விசும்பினூடு போய் எழுந்து ** மேலைத்
    தண் மதியும் கதிரவனும் தவிர ஓடித் *
    தாரகையின் புறந் தடவி அப்பால் மிக்கு *
    மண் முழுதும் அகப்படுத்து நின்ற எந்தை *
    மலர் புரையும் திருவடியே வணங்கினேனே 5
  • TNT 1.6
    2057 அலம்புரிந்த நெடுந் தடக்கை அமரர் வேந்தன் *
    அம் சிறைப் புள் தனிப் பாகன் அவுணர்க்கு என்றும் *
    சலம்புரிந்து அங்கு அருள் இல்லாத் தன்மையாளன் *
    தான் உகந்த ஊர் எல்லாம் தன் தாள் பாடி **
    நிலம் பரந்து வரும் கலுழிப் பெண்ணை ஈர்த்த *
    நெடு வேய்கள் படு முத்தம் உந்த உந்தி *
    புலம் பரந்து பொன் விளைக்கும் பொய்கை வேலிப் *
    பூங் கோவலூர் தொழுதும் போது நெஞ்சே 6
  • TNT 1.7
    2058 வற்பு உடைய வரை நெடுந் தோள் மன்னர் மாள *
    வடி வாய மழு ஏந்தி உலகம் ஆண்டு *
    வெற்பு உடைய நெடுங் கடலுள் தனி வேல் உய்த்த *
    வேள் முதலா வென்றான் ஊர் விந்தம் மேய **
    கற்பு உடைய மடக் கன்னி காவல் பூண்ட *
    கடி பொழில் சூழ் நெடு மறுகில் கமல வேலி *
    பொற்பு உடைய மலை அரையன் பணிய நின்ற *
    பூங் கோவலூர் தொழுதும் போது நெஞ்சே 7
  • TNT 1.8
    2059 ## நீரகத்தாய் நெடுவரையின் உச்சி மேலாய் *
    நிலாத்திங்கள் துண்டத்தாய் நிறைந்த கச்சி
    ஊரகத்தாய் * ஒண் துறை நீர் வெஃகா உள்ளாய் *
    உள்ளுவார் உள்ளத்தாய் ** உலகம் ஏத்தும்
    காரகத்தாய் கார்வானத்து உள்ளாய் கள்வா *
    காமரு பூங் காவிரியின் தென்பால் மன்னு
    பேரகத்தாய் * பேராது என் நெஞ்சின் உள்ளாய் *
    பெருமான் உன் திருவடியே பேணினேனே 8
  • TNT 1.9
    2060 வங்கத்தால் மா மணி வந்து உந்து முந்நீர்
    மல்லையாய் * மதிள் கச்சியூராய் பேராய் *
    கொங்கத் தார் வளங் கொன்றை அலங்கல் மார்வன் *
    குலவரையன் மடப் பாவை இடப்பால் கொண்டான் **
    பங்கத்தாய் பாற்கடலாய் பாரின் மேலாய்
    பனி வரையின் உச்சியாய் பவள வண்ணா! *
    எங்கு உற்றாய்? எம் பெருமான் உன்னை நாடி *
    ஏழையேன் இங்ஙனமே உழிதருகேனே 9
  • TNT 1.10
    2061 பொன் ஆனாய் பொழில் ஏழும் காவல் பூண்ட *
    புகழ் ஆனாய் இகழ்வாய தொண்டனேன் நான் *
    என் ஆனாய் என் ஆனாய் என்னல் அல்லால் *
    என் அறிவன் ஏழையேன்? ** உலகம் ஏத்தும்
    தென் ஆனாய் வட ஆனாய் குடபால் ஆனாய் *
    குணபால மத யானாய்! இமையோர்க்கு என்றும்
    முன் ஆனாய் * பின் ஆனார் வணங்கும் சோதி! *
    திருமூழிக்களத்து ஆனாய்! முதல் ஆனாயே! 10