TNT 2.11 2062 பட்டு உடுக்கும் அயர்த்து இரங்கும் பாவை பேணாள் * பனி நெடுங் கண் நீர் ததும்பப் பள்ளி கொள்ளாள் * எள் துணைப் போது என் குடங்கால் இருக்ககில்லாள் * எம் பெருமான் திருவரங்கம் எங்கே? என்னும் ** மட்டு விக்கி மணி வண்டு முரலும் கூந்தல் * மட மானை இது செய்தார் தம்மை * மெய்யே கட்டுவிச்சி சொல் என்னச் சொன்னாள் நங்காய்! * கடல் வண்ணர் இது செய்தார் காப்பார் ஆரே? 11
TNT 2.12 2063 நெஞ்சு உருகிக் கண் பனிப்ப நிற்கும் சோரும் * நெடிது உயிர்க்கும் உண்டு அறியாள் உறக்கம் பேணாள் * நஞ்சு அரவில் துயில் அமர்ந்த நம்பீ! என்னும் * வம்பு ஆர் பூ வயல் ஆலி மைந்தா! என்னும் ** அம் சிறைய புட்கொடியே ஆடும் பாடும் * அணி அரங்கம் ஆடுதுமோ? தோழீ! என்னும் * என் சிறகின்கீழ் அடங்காப் பெண்ணைப் பெற்றேன் * இரு நிலத்து ஓர் பழி படைத்தேன் ஏ பாவமே 12
TNT 2.13 2064 கல் எடுத்துக் கல் மாரி காத்தாய்! என்றும் * காமரு பூங் கச்சி ஊரகத்தாய்! என்றும் * வில் இறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய்! என்றும் * வெஃகாவில் துயில் அமர்ந்த வேந்தே! என்றும் ** மல் அடர்த்து மல்லரை அன்று அட்டாய்! என்றும் * மா கீண்ட கைத்தலத்து என் மைந்தா! என்றும் * சொல் எடுத்துத் தன் கிளியைச் சொல்லே என்று * துணை முலைமேல் துளி சோர சோர்கின்றாளே 13
TNT 2.14 2065 ## முளைக் கதிரைக் குறுங்குடியுள் முகிலை * மூவா மூவுலகும் கடந்து அப்பால் முதலாய் நின்ற * அளப்பு அரிய ஆர் அமுதை அரங்கம் மேய அந்தணனை * அந்தணர் தம் சிந்தையானை ** விளக்கு ஒளியை மரதகத்தைத் திருத்தண்காவில் * வெஃகாவில் திருமாலைப் பாடக் கேட்டு * வளர்த்ததனால் பயன்பெற்றேன் வருக என்று * மடக் கிளியைக் கைகூப்பி வணங்கினாளே 14
TNT 2.15 2066 ## கல் உயர்ந்த நெடு மதிள் சூழ் கச்சி மேய களிறு என்றும் * கடல் கிடந்த கனியே! என்றும் * அல்லியம் பூ மலர்ப் பொய்கைப் பழன வேலி * அணி அழுந்தூர் நின்று உகந்த அம்மான்! என்றும் * சொல் உயர்ந்த நெடு வீணை முலை மேல் தாங்கித் * தூ முறுவல் நகை இறையே தோன்ற நக்கு * மெல் விரல்கள் சிவப்பு எய்தத் தடவி ஆங்கே * மென் கிளிபோல் மிக மிழற்றும் என் பேதையே 15
TNT 2.16 2067 ## கன்று மேய்த்து இனிது உகந்த காளாய்! என்றும் * கடி பொழில் சூழ் கணபுரத்து என் கனியே! என்றும் * மன்று அமரக் கூத்து ஆடி மகிழ்ந்தாய்! என்றும் * வட திருவேங்கடம் மேய மைந்தா! என்றும் ** வென்று அசுரர் குலம் களைந்த வேந்தே! என்றும் விரி பொழில் சூழ் திருநறையூர் நின்றாய்! என்றும் * துன்று குழல் கரு நிறத்து என் துணையே! என்றும் * துணை முலைமேல் துளி சோரச் சோர்கின்றாளே! 16
TNT 2.17 2068 பொங்கு ஆர் மெல் இளங் கொங்கை பொன்னே பூப்பப் * பொரு கயல் கண் நீர் அரும்பப் போந்து நின்று * செங் கால மடப் புறவம் பெடைக்குப் பேசும் * சிறு குரலுக்கு உடல் உருகிச் சிந்தித்து ** ஆங்கே தண்காலும் தண் குடந்தை நகரும் பாடித் * தண் கோவலூர் பாடி ஆடக் கேட்டு * நங்காய்! நம் குடிக்கு இதுவோ நன்மை? என்ன * நறையூரும் பாடுவாள் நவில்கின்றாளே 17
TNT 2.18 2069 கார் வண்ணம் திருமேனி கண்ணும் வாயும் * கைத்தலமும் அடி இணையும் கமல வண்ணம் * பார் வண்ண மட மங்கை பத்தர் * பித்தர் பனி மலர்மேல் பாவைக்கு பாவம் செய்தேன் ** ஏர் வண்ண என் பேதை என் சொல் கேளாள் * எம் பெருமான் திருவரங்கம் எங்கே? என்னும் * நீர்வண்ணன் நீர்மலைக்கே போவேன் என்னும் * இது அன்றோ நிறை அழிந்தார் நிற்குமாறே 18
TNT 2.19 2070 முற்று ஆரா வன முலையாள் பாவை * மாயன் மொய் அகலத்துள் இருப்பாள் அஃதும் கண்டும் அற்றாள் * தன் நிறை அழிந்தாள் ஆவிக்கின்றாள் * அணி அரங்கம் ஆடுதுமோ? தோழீ! என்னும் ** பெற்றேன் வாய்ச் சொல் இறையும் பேசக் கேளாள் * பேர் பாடித் தண் குடந்தை நகரும் பாடி * பொற்றாமரைக் கயம் நீராடப் போனாள் * பொரு அற்றாள் என் மகள் உம் பொன்னும் அஃதே 19
TNT 2.20 2071 தேர் ஆளும் வாள் அரக்கன் செல்வம் மாளத் * தென் இலங்கை முன் மலங்கச் செந்தீ ஒல்கி * போர் ஆளன் ஆயிரந் தோள் வாணன் மாளப் * பொரு கடலை அரண் கடந்து புக்கு மிக்க பார் ஆளன் ** பார் இடந்து பாரை உண்டு பார் உமிழ்ந்து பார் அளந்து * பாரை ஆண்ட பேர் ஆளன் * பேர் ஓதும் பெண்ணை மண்மேல் * பெருந்தவத்தள் என்று அல்லால் பேசல் ஆமே? 20