Thiruvezukuṛṛirukkai

திருவெழுகூற்றிருக்கை

Thiruvezukuṛṛirukkai
This Prabandham, composed by Thirumangai āzhvār as an angam (auxiliary discipline) to the four types of Vedas, is structured in the style of 'Rathabandham.' Thirumangai āzhvār is the only one who has composed such a Prabandham in this intricate poetic form. It consists of 46 sub-verses.

āzhvār deeply contemplated the transient nature of worldly life + Read more
நால்வகை வேதங்களுக்கு ஆறங்கம் கூற வந்த திருமங்கையாழ்வார் அருளிச்செய்த இப்பிரபந்தம் 'ரதபந்தம்' என்ற வகையில் அமைந்துள்ளது. இத்தகைய சித்திரகவியில் பாடி அருளியவர் திருமயங்கையாழ்வார் ஒருவரே ஆகும். இது 46 அடிகள் கொண்ட பிரபந்தம்.

இவ்வுலக வாழ்க்கையின் நிலையில்லாத் தன்மை, கர்மாநுகுணமான + Read more
Group: 3rd 1000
Verses: 2672 to 2672
Glorification: Archa / Manifest State (அர்ச்சாவதாரம்)
Eq scripture: vyAkaraNa
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

TEK 1

2672 ஒருபேருந்தியிருமலர்த்தவிசில் *
ஒருமுறையயனையீன்றனை * ஒருமுறை
இருசுடர்மீதினிலியங்கா * மும்மதி
ளிலங்கையிருகால்வளைய * ஒருசிலை
யொன்றியஈரெயிற்றழல்வாய்வாளியி *
னட்டனை * மூவடிநானிலம்வேண்டி *
முப்புரிநூலொடுமானுரியிலங்கு
மார்வினின் * இருபிறப்பொருமாணாகி *
ஒருமுறையீரடிமூவுலகளந்தனை *
நால்திசைநடுங்கஅஞ்சிறைப்பறவை
யேறி * நால்வாய்மும்மதத்திருசெவி
யொருதனிவேழத்தரந்தையை * ஒருநாள்
இருநீர்மடுவுள் தீர்த்தனை * முத்தீ
நான்மறைஐவகைவேள்வி * அறுதொழி
லந்தணர்வணங்குந்தன்மையை * ஐம்புலன்
அகத்தினுள்செறுத்து * நான்குடனடக்கி
முக்குணத்திரண்டவையகற்றி * ஒன்றினில்
ஒன்றிநின்று * ஆங்கிருபிறப்பறுப்போர்
அறியும்தன்மையை * முக்கண்நால்தோள்
ஐவாயரவோடு * ஆறுபொதிசடையோன்
அறிவருந்தன்மைப்பெருமையுள்நின்றனை *
ஏழுலகெயிற்றினில்கொண்டனை * கூறிய
அறுசுவைப்பயனுமாயினை * சுடர்விடும்
ஐம்படையங்கையுளமர்ந்தனை * சுந்தர
நால்தோள்முந்நீர்வண்ண! * நின்னீரடி
ஒன்றியமனத்தால் * ஒருமதிமுகத்து
மங்கையரிருவரும் மலரன * அங்கையின்
முப்பொழுதும்வருடஅறிதுயிலமர்ந்தனை *
நெறிமுறைநால்வகைவருணமுமாயினை *
மேதகும்ஐம்பெரும்பூதமும்நீயே *
அறுபதம்முரலுங்கூந்தல்காரணம் *
ஏழ்விடையடங்கச்செற்றனை * அறுவகைச்
சமயமும்அறிவருநிலையினை * ஐம்பா
லோதியையாகத்திருத்தினை * அறம்முதல்
நான்கவையாய்மூர்த்திமூன்றாய் *
இருவகைப்பயனாய் ஒன்றாய்விரிந்து
நின்றனை * குன்றாமதுமலர்ச்சோலை
வண்கொடிப்படப்பை * வருபுனற்பொன்னி
மாமணியலைக்கும் * செந்நெலொண்கழனித்
திகழ்வனமுடுத்த * கற்போர்புரிசைக்
கனகமாளிகை * நிமிர்கொடிவிசும்பில்
இளம்பிறைதுவக்கும் * செல்வம்மல்குதென்
திருக்குடந்தை * அந்தணர்மந்திரமொழியுடன்
வணங்க * ஆடரவமளியிலறிதுயில்
அமர்ந்தபரம! * நின்னடியிணைபணிவன்
வருமிடரகலமாற்றோவினையே. (2)
2672 ## ஒரு பேர் உந்தி இரு மலர்த் தவிசில் *
ஒருமுறை அயனை ஈன்றனை * ஒரு முறை
இரு சுடர் மீதினில் இயங்கா * மும் மதிள்
இலங்கை இரு கால் வளைய * ஒரு சிலை
ஒன்றிய ஈர் எயிற்று அழல் வாய் வாளியில் 5

அட்டனை * மூவடி நானிலம் வேண்டி *
முப்புரி நூலொடு மான் உரி இலங்கு
மார்வினின் * இரு பிறப்பு ஒரு மாண் ஆகி *
ஒரு முறை ஈர் அடி மூவுலகு அளந்தனை *
நால் திசை நடுங்க அம் சிறைப் பறவை 10

ஏறி * நால் வாய் மும் மதத்து இரு செவி
ஒரு தனி வேழத்து அரந்தையை * ஒருநாள்
இரு நீர் மடுவுள் தீர்த்தனை * முத் தீ
நான்மறை ஐ வகை வேள்வி * அறு தொழில்
அந்தணர் வணங்கும் தன்மையை * ஐம்புலன் 15

அகத்தினுள் செறித்து * நான்கு உடன் அடக்கி
முக் குணத்து இரண்டு அவை அகற்றி * ஒன்றினில்
ஒன்றி நின்று * ஆங்கு இரு பிறப்பு அறுப்போர்
அறியும் தன்மையை * முக் கண் நால் தோள்
ஐ வாய் அரவோடு * ஆறு பொதி சடையோன் 20

அறிவு அரும் தன்மைப் பெருமையுள் நின்றனை *
ஏழ் உலகு எயிற்றினில் கொண்டனை * கூறிய
அறு சுவைப் பயனும் ஆயினை * சுடர்விடும்
ஐம் படை அங்கையுள் அமர்ந்தனை * சுந்தர
நால் தோள் முந்நீர் வண்ண * நின் ஈர் அடி 25

ஒன்றிய மனத்தால் * ஒரு மதி முகத்து
மங்கையர் இருவரும் மலர் அன * அங்கையின்
முப்பொழுதும் வருட அறிதுயில் அமர்ந்தனை *
நெறி முறை நால் வகை வருணமும் ஆயினை *
மேதகும் ஐம் பெரும் பூதமும் நீயே * 30

அறுபதம் முரலும் கூந்தல் காரணம் *
ஏழ் விடை அடங்கச் செற்றனை * அறு வகைச்
சமயமும் அறிவு அரு நிலையினை * ஐம்பால்
ஓதியை ஆகத்து இருத்தினை * அறம் முதல்
நான்கு அவை ஆய் மூர்த்தி மூன்று ஆய் * 35

இரு வகைப் பயன் ஆய் ஒன்று ஆய் விரிந்து
நின்றனை * குன்றா மது மலர்ச் சோலை
வண் கொடிப் படப்பை * வரு புனல் பொன்னி
மா மணி அலைக்கும் * செந்நெல் ஒண் கழனித்
திகழ் வனம் உடுத்த * கற்போர் புரிசைக் 40

கனக மாளிகை * நிமிர் கொடி விசும்பில்
இளம் பிறை துவக்கும் * செல்வம் மல்கு தென்
திருக் குடந்தை * அந்தணர் மந்திர மொழியுடன்
வணங்க * ஆடு அரவு அமளியில் அறிதுயில்
அமர்ந்த பரம * நின் அடி இணை பணிவன்
வரும் இடர் அகல மாற்றோ வினையே 45
2672 ## ŏru per unti iru malart tavicil *
ŏrumuṟai ayaṉai īṉṟaṉai * ŏru muṟai
iru cuṭar mītiṉil iyaṅkā * mum matil̤
ilaṅkai iru kāl val̤aiya * ŏru cilai
ŏṉṟiya īr ĕyiṟṟu azhal vāy vāl̤iyil-5

aṭṭaṉai * mūvaṭi nāṉilam veṇṭi *
muppuri nūlŏṭu māṉ uri ilaṅku
mārviṉiṉ * iru piṟappu ŏru māṇ āki *
ŏru muṟai īr aṭi mūvulaku al̤antaṉai *
nāl ticai naṭuṅka am ciṟaip paṟavai-10

eṟi * nāl vāy mum matattu iru cĕvi
ŏru taṉi vezhattu arantaiyai * ŏrunāl̤
iru nīr maṭuvul̤ tīrttaṉai * mut tī
nāṉmaṟai ai vakai vel̤vi * aṟu tŏzhil
antaṇar vaṇaṅkum taṉmaiyai * aimpulaṉ-15

akattiṉul̤ cĕṟittu * nāṉku uṭaṉ aṭakki
muk kuṇattu iraṇṭu avai akaṟṟi * ŏṉṟiṉil
ŏṉṟi niṉṟu * āṅku iru piṟappu aṟuppor
aṟiyum taṉmaiyai * muk kaṇ nāl tol̤
ai vāy aravoṭu * āṟu pŏti caṭaiyoṉ-20

aṟivu arum taṉmaip pĕrumaiyul̤ niṉṟaṉai *
ezh ulaku ĕyiṟṟiṉil kŏṇṭaṉai * kūṟiya
aṟu cuvaip payaṉum āyiṉai * cuṭarviṭum
aim paṭai aṅkaiyul̤ amarntaṉai * cuntara
nāl tol̤ munnīr vaṇṇa * niṉ īr aṭi-25

ŏṉṟiya maṉattāl * ŏru mati mukattu
maṅkaiyar iruvarum malar aṉa * aṅkaiyiṉ
muppŏzhutum varuṭa aṟituyil amarntaṉai *
nĕṟi muṟai nāl vakai varuṇamum āyiṉai *
metakum aim pĕrum pūtamum nīye- * 30

aṟupatam muralum kūntal kāraṇam *
ezh viṭai aṭaṅkac cĕṟṟaṉai * aṟu vakaic
camayamum aṟivu aru nilaiyiṉai * aimpāl
otiyai ākattu iruttiṉai * aṟam mutal
nāṉku avai āy mūrtti mūṉṟu āy * -35

iru vakaip payaṉ āy ŏṉṟu āy virintu
niṉṟaṉai * kuṉṟā matu malarc colai
vaṇ kŏṭip paṭappai * varu puṉal pŏṉṉi
mā maṇi alaikkum * cĕnnĕl ŏṇ kazhaṉit
tikazh vaṉam uṭutta- * kaṟpor puricaik 40

kaṉaka māl̤ikai * nimir kŏṭi vicumpil
il̤am piṟai tuvakkum * cĕlvam malku tĕṉ
tiruk kuṭantai * antaṇar mantira mŏzhiyuṭaṉ
vaṇaṅka * āṭu aravu amal̤iyil aṟituyil
amarnta parama * niṉ aṭi iṇai paṇivaṉ
varum iṭar akala māṟṟo viṉaiye-45

Ragam

Dēshi / தேசி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Saranagathi

Divya Desam

Simple Translation

"2672. You created Brahmā on a large lotus on your navel, and you shot your fiery arrows and conquered and burned Lankā surrounded with strong forts around which even the sun and moon cannot move. " "You took the form of a dwarf, a Brahmin bachelor dressed in deerskin, wore a shining string on your chest and went to Mahābali’s sacrifice. You asked the king for three feet of land and measured all the three worlds and the sky with your two feet. " "Gajendra the elephant was caught by a crocodile and you rode on Garudā with beautiful wings, went to the deep pond with abundant water, making all the directions shake, and killed the crocodile and saved the long-trunked Gajendra who dripped with ichor. " "You are worshipped by Vediyars who do five sacrifices with three fires, recite the four Vedās and do six deeds. Your good devotees controlling their five senses and removing desires, pride and egoism from their minds, are rid of the good and bad karmā that cause future births, as they put their minds only on you. You know the nature of those who do not want to be born again. " "You keep in your body the three-eyed Shivā who has four arms, is adorned with a snake, and has the Ganges flowing in his matted hair. He knows your power and worships you who swallowed all the seven worlds and kept them in your stomach. " "You are the six tastes-- sweet, bitter, sour, salty, astringent, pungent. You carry six shining weapons in your hands, have four arms and are colored like the dark ocean. You rest on Adisesha on the ocean. The Earth goddess and Lakshmi who have beautiful moon-like faces stay near your feet at all times of the day and caress them. " "You are the four Varnas, and the five elements–sky, fire, ocean, wind, and earth. You fought and conquered the seven bulls to marry Nappinnai whose hair swarms with six-legged bees and lovely-haired Lakshmi stays on your chest. All the six religions do not know who you are. " "You are the four things–dharma, wealth, pleasure and Mokshā, and the three gods Shivā, Brahmā and Vishnu, and you, the giver of the results of good and bad karmā, are the unique god of rich Thirukkudandai in the south surrounded by flourishing vines and groves where flowers always bloom dripping with honey. The Kaveri river flows there with its abundant water, bringing precious jewels and leaving them on its banks, and good paddy flourishes there in beautiful fields. You are the god of Thirukkudandai where the flags on the golden places fly in the sky and touch the young crescent moon and Vediyars worship you reciting mantras. O highest lord, you rest on Adisesha, the snake bed on the ocean and you know all things. I bow to your feet. Remove the results of my karmā and my troubles. "

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஒரு பேர் மிக்க பெருமை பொருந்திய; உந்தி நாபியிலுண்டான; இரு மலர் பெரிய தாமரைப் பூவாகிய; தவிசில் ஆசனத்தின் மீது; ஒரு முறை ஒரு முறை; அயனை ஈன்றனை பிரமனை படைத்தருளினாய்; ஒருமுறை ராமனாய் அவதரித்த ஒரு காலத்தில்; இரு சுடர் சந்திர ஸூர்யர்கள்; மீதினில் இயங்கா ஆகாசத்தில் நடை ஆடமுடியாத; மும் நீர் மலை வனம் ஆகிய மூன்று; மதிள் கோட்டைகளை உடைய; இலங்கை இலங்கையை; இரு கால் வளைய அழகிய நுனி வளைந்த; ஒரு சிலை ஒப்பற்ற வில்லில்; ஒன்றிய பொருந்திய; ஈர் எயிற்று இரண்டு பற்களையுடைய; அழல் வாய் நெருப்பைக்கக்கும் வாயையுடைய; வாளியின் அம்பினால்; அட்டனை அழித்தாய்; ஒரு முறை ஒரு முறை; முப்புரி நூலொடு பூணூலோடு; மான் உரி இலங்கு மான் தோல் தரித்த; மார்வினில் மார்பையுடைய; இரு பிறப்பு இரு பிறப்பையுடைய; ஒரு மாண் ஆகி ஒரு பிரம்மசாரியாகி; மூவடி நானிலம் மகாபலியிடம் மூவடி மண்; வேண்டி ஈரடி யாசித்து இரண்டு அடிகளால்; மூ உலகு மூன்று உலகங்களையும்; அளந்தனை அளந்து கொண்டாய்; ஒரு நாள் ஒரு நாள்; அம் சிறை அழகிய சிறகுகள் உடைய; பறவை ஏறி கருடன் மீது ஏறி; இரு நீர் ஆழமான நீரையுடைய; மடுவுள் மடுவின் கரையில் சென்று; நால் திசை எங்குமுள்ள ஜனங்களும்; நடுங்க நடுங்க; நால் வாய் தொங்கும் துதிக்கையும்; மும் மதத்து மதநீர்ப் பெருக்கும்; இரு செவி இரு காதுகளுடன் கூடின யானையின்; ஒரு தனி வேழத்து ஒப்பற்ற கஜேந்திரனின்; அரந்தையை துக்கத்தை; தீர்த்தனை போக்கி அருளினாய்; முத்தீ மூவகை அக்நிகளையும்; நான் மறை நால்வகை வேதங்களையும்; ஐவகை வேள்வி ஐவகை யாகங்களையும்; அறு ஆறுவகை; தொழில் கருமங்களையும் உடையவரான; அந்தணர் அந்தணர்களால்; வணங்கும் வணங்கப்படும்; தன்மையை தெய்வமாய் நின்றாய்; ஐம்புலன் ஐம்புலன்களை; அகத்தினுள் செறுத்து மனதுள்ளே அடக்கி; நான்கு உண்ணுதல் உறங்குதல் அஞ்சுதல் புணர்தல்; உடன் அடக்கி ஆகிய நான்கையும் தவிர்த்து; முக் குணத்து ஸத்வ ரஜஸ் தமஸ் மூன்று குணங்களில்; இரண்டு அவை ரஜஸ் தமஸ் இரண்டையும்; அகற்றி விலக்கி; ஒன்றினில் ஸத்வகுணம் ஒன்றிலேயே; ஒன்றி நின்று பொருந்தியிருந்து; ஆங்கு இரு பிறப்பு அதன் பலனாக பிறவித்துயர்; அறுப்போர் போக்கவல்ல ஞானிகளால்; அறியும் தன்மையை அறியத்தக்கவன் நீயே; முக்கண் மூன்று கண்களையும்; நால் தோள் நான்கு தோள்களையும்; ஐ வாய் ஐந்து வாயையுமுடைய; அரவோடு பாம்பையும்; ஆறு பொதி முடியில் கங்கையையும்; சடையோன் ஜடையையும் உடைய ருத்ரனாலும்; அறிவு அரும் தன்மை அறியமுடியாத; பெருமையுள் பெருமையுடையவனாக; நின்றனை இருக்கிறாய் நீ; ஏழ் உலகு ஏழு உலகங்களையும்; எயிற்றினில் வராகமாக அவதரித்து கூரிய பற்களில்; கொண்டனை எடுத்து வந்தாய்; அறு சுவை இனிப்பு காரம் கசப்பு புளிப்பு துவர்ப்பு உப்பு; கூறிய பயனும் ஆயினை ஆகியவற்றின் பயனும் நீயே; அங்கையுள் அழகிய கையில்; சுடர் விடும் ஒளி விடும்; ஐம் படை பஞ்சாயுதங்களையும்; அமர்ந்தனை பொருந்தப்பெற்றாய்; சுந்தர நால் அழகிய நான்கு; தோள் தோள்களையுடைய; முந்நீர் வண்ண! கடல் நிறவண்ணனே! எம்பெருமானே!; நின் ஈரடி உன் இரண்டு திருவடிகளையும்; ஒன்றிய மனத்தால் ஆழ்ந்த அன்புடன்; ஒரு மதி முகத்து சந்திரன் போன்ற முகத்தையுடைய; மங்கையர் இருவரும் திருமகளும் மண்மகளும் இருவரும்; மலர் அன அங்கையில் மலர் போன்ற அழகிய கைகளாலே; முப்பொழுதும் வருட எப்பொழுதும் வருட; அறிதுயில் அமர்ந்தனை யோக நித்திரையில் உள்ளாய்; நெறி முறை சாஸ்திர முறைப்படி உள்ள; நால் வகை வருணமும் நான்கு வகை ஜாதிகளுக்கும்; ஆயினை தலைவன் நீயே; மேதகும் ஆன்மாக்கள் பொருந்தும்படியான; ஐம் பெரும் பூதமும் நீயே! பஞ்ச பூதங்களும் நீயே; அறுபதம் ஆறு கால்களையுடைய வண்டுகள்; முரலும் முரலும்; கூந்தல் கூந்தலையுடைய; காரணம் நப்பின்னையின் பொருட்டு; ஏழ் விடை ஏழு எருதுகளை; அடங்கச் செற்றனை அடக்கி நெறித்தாய்; அறு வகைச் சமயமும் ஆறு வகை சமயத்தாராலும்; அறிவு அரு அறிந்துகொள்ள முடியாத; நிலையினை நிலைமையையுடையவன் நீ; ஐம்பால் மென்மை குளிர்த்தி நறுமணம் கருமை நீண்டிருத்தல்; ஓதியை என்னும் ஐந்து வகை கூந்தலையுடைய பிராட்டியை; ஆகத்து இருத்தினை உன் மார்பில் தரித்தாய்; அறம் முதல் அறம் பொருள் இன்பம் வீடு என்னும்; நான்கு அவை ஆய் நான்கையும் தருபவன் நீயே; மூர்த்தி பிரமன் விஷ்ணு சிவன்; மூன்று ஆய் ஆகிய மும்மூர்த்திகளாயும்; இரு வகை சுகம் துக்கம் ஆகிய இரண்டு; பயன் ஆய் பயன்களாயும்; ஒன்று ஆய் நீ ஒருவனாகவே; விரிந்து நின்றனை வியாபித்து நின்றாய்; குன்றா மது நிறைந்த தேனையுடைய; மலர் மலர்கள் நிறைந்த; சோலை சோலைகளையுடைய; தென் திருக்குடந்தை தென் திருக்குடந்தையில்; வண்கொடி வெற்றிலை; படப்பை தோட்டங்களும் உள்ளன; வரு புனல் நீர் நிறைந்த; பொன்னி காவிரி ஆறு; மாமணி மணிகளையும் ரத்தினங்களையும்; அலைக்கும் கொழித்தபடி; செந்நெல் நெல் வயல்களிலும்; ஒண் அழகிய; கழனி கழனிகளிலும் கொண்டு சேர்க்கின்றன; திகழ் ஊரின் நாற்புறங்களிலும்; வனம் உடுத்த காடுகள் உள்ளன; கற்போர் புரிசை ஞானிகளின் நகரமாக உள்ளது; கனக மாளிகை பொன்மயமான மாளிகைகளிலிருந்து; நிமிர் கொடி விசும்பில் நிமிர்ந்த கொடிகள் ஆகாசத்தில்; இளம் பிறை துவக்கும் இளம் சந்திரனை தொடுமளவும்; செல்வம் மல்கு செல்வம் மிகுந்ததாகவுமான; தென் திருக்குடந்தையில் தென் திருக்குடந்தையிலே; அந்தணர் மந்திர அந்தணர்கள் வேதம் ஓதியபடி; மொழியுடன் வணங்க வணங்கும் பெருமையுடைய; ஆடு அரவு படத்துடன் கூடின ஆதிசேஷனான; அமளியில் படுக்கையில்; அறி துயில் சயனித்திருக்கும்; அமர்ந்த பரம! பெருமானே!; நின் அடியிணை உன் திருவடிகளை; பணிவன் வணங்குகிறேன்; வரும் இடர் வினையே ஸம்ஸாரத் துன்பங்களை; அகல மாற்றோ போக்கி அருளவேண்டும்
iru (from the) big; thavisil seat (also petals of the flower); undhi (that is your) divine nābhi (navel); malar (which is like a lotus) flower; pĕr (that is having the) greatness (of); oru having no equals,; oru muṛai at one time (during creation); īnṛanai you created; ayanai brahmā; iru sudar moon and sun; mīdhinil iyangā would not span above; ilangai lankāpuri; oru muṛai even once (due to fear); mum madhil̤ (lankā) that is covered by three kinds of protection, by water, mountain, and forest,; attanai (you) burned and destroyed (such lankā),; oru silai (using your) unparalleled bow (sārngam); iru kāl val̤aiya with its two ends curved,; vāl̤iyin using the arrows; onṛiya īr eyiṛu that are fit into the bow, and having 2 teeth; azhal vāi and which have got the mouth that spits fire.; oru muṛai once upon a time; muppuri nūlodu with pūṇūl (yagyŏpavītham) and; mān uri deer skin; ilangu mārvinil adorned in your chest,; iru piṛappu oru māṇ āgi as unparalleled Brahmin bachelor; vĕṇdi (you) begged for; mū adi three steps of land; nānilam in this earth that has four kinds of areas,; al̤andhanai (and) you spanned; mū ulagu the three worlds; īr adi with (your) two divine feet.; oru nāl̤ once upon a time; nāl thisai nadunga (got an anger such that) people in all four directions were scared; am siṛai paṛavai ĕṛi (and you) got onto the garudan who has got beautiful feathers; iru nīr maduvul̤ (and went to the shore of) the pond having deep waters; thīrththanai and removed; arandhaiyai the suffering of; nāl vāi the one having a hanging mouth; mummadham which lets out madha (intoxicated) water out of three places; iru sevi and which has got two ears,; oru thani vĕzhaththu that is the unparalleled elephant gajĕndhran who was alone.; andhaṇar vaṇangum thanmaiyai (you are of the nature who is) prayed by the brāhmaṇas using; muththī three types of agni (fire), and; nāl maṛai four types of vĕdhas, and; aivagai vĕl̤vi five types of yagyas (rituals), and; aṛu thozhil six types of karmas.; aimpulan agaththinul̤ seṛuththu (without letting roam around onto other bad influences outside) they control the five senses to stay inside; nāngu udan adakki eating, sleeping, fearing, enjoying other pleasures are the four things they nullify; mukkuṇaththu out of the three characteristics, sathvam, rajas, and thamas; agaṝi they avoid; iraṇdu avai rajas and thamas; onṛi ninṛu and stay involved; onṛinil only in sathva guṇam;; āngu by such a bhakthi yŏgam; iru piṛappu aṛuppŏr upāsakars (worshipers/followers who use their own efforts) avoid two types of births,; aṛiyum thanmaiyai ẏou are of such a nature that they can reach ẏou (by their own efforts as the means).; mukkaṇ (rudhran who is) having three eyes; nāl thŏl̤ four shoulders; aivāi aravŏdu having the snake which has got five mouths; āṛu podhi sadaiyŏn and having river gangā in the plaits of his hair; aṛivu aru cannot know you; thanmai you are of that nature; perumaiyul̤ ninṛanai you are having such a greatness; eyiṝinil koṇdanai (by srī varaham) lifted into your trunk (dhantham); ĕzhulagu all the worlds; kūṛiya aṛu suvaip payanum āyinai six types of tastes (mentioned in the sāsthras) is ẏou who is all such tastes for me.; am kaiyul̤ īn your beautiful divine hands; amarndhanai you hold; sudar vidum ai padai the five weapons that are bright;; sundhara nāl thŏl̤ having four beautiful shoulders; munnīr vaṇṇa ŏh emperumān, having the beauty like an ocean.; oru madhi mugaththu mangaiyar iruvarum the two pirāttis, srīdhĕvi and bḥūdhĕvi (thirumadanthai, maṇmadanthai) with unparalleled divine face like the moon,; onṛiya manaththāl (with their) mind immersed in; nin īr adi your two divine feet; muppozhudhum (they) always; varuda press/caress (your divine feet); malar ena am kaiyin using their beautiful hands that can be said as flowers; aṛi thuyil amarndhanai while you are immersed in meditating sleep (yŏga nidhrā).; nāl vagai varuṇamum āyinai ẏou control all four varṇas (category of births); neṛi muṛai who conduct themselves according to sāsthra; mĕ thagum ai perum pūthamum nīyĕ ẏou are the antharyāmi of all the five elements (bhūthams) into which āthmās can enter into and get set into them.; aṛupadham muralum kūndhal kāraṇam ḫor nappinnai pirātti to whose hair the bees (six legs) come buśśing (for enjoying the honey),; ĕzh vidai the seven bulls; adanga cheṝanai (which you) crushed them together; aṛu vagai chamayamum ṣix type of other philosophies; aṛivu aru cannot know/understand; nilaiyinai ẏou; such is your nature;; aimpāl ŏdhiyai pirātti whose hair is identification of five ways of hair;; āgaththu iruththinai have placed her in your divine chest.; aṛam mudhal nāngu avai āy ẏou are the one who grants the four goals aṛam (dharma), porul̤ (things/wealth), inbam (pleasure), vīdu (srīvaikuṇtam); mūrthy mūnṛu āy as antharyāmi for the three mūrthys; iru vagai payan āy ẏou are the one who creates happiness and sadness (based on karmās); onṛu āi virindhu ninṛanai just the self (in the beginning), and then expanded as the whole world.; kunṛā madhu having unlimited honey; malar chŏlai (from the) groves full of flowers,; vaṇ kodi padappai and with gardens having beautiful creepers,; ponni with cāuvĕry river; varu punal always having proliferating water,; mā maṇi and the best gems; alaikkum great in number thrown by its waves,; sennel oṇ kazhani having fields that are beautified by rice of yellowish hue,; thigazh vanam uduththa surrounded in all the four sides by wilderness / grove / forest,; kaṛpŏr purisai town inhabited by the learned,; kanakam māl̤igai nimir kodi flags fluttering upward from the golden palaces/mansions; visumbil in the sky; thuvakkum touching/caressing; il̤a piṛai the young moon,; selvam malgu (it is the) wealthy and; then thiru kudanthai beautiful thiruk kudanthai,; ādu aravu amal̤iyil (where you are leaning) in the bed of ādhi sĕshan with its open hood; aṛi thuyil amarndha and involved in doing yŏga nidhrai (meditating sleep),; anthaṇar (that is suitable for) brāhmaṇas; manthiram mozhiyudan vaṇanga to recite vĕdha sukthas;; parama hey paramĕshwara!; nin adi iṇai paṇivan am surrendering to your two divine feet; varum idar agala for the removal of hurdles that may come in the way (of reaching ẏou);; māṝu vinai please remove those hurdles by your mercy.; kudanthai īn thirukkudanthai; sūzhum that is surrounded; ponni by kāvĕri; thāmarai koṇda thadam and by the ponds having lotuses; thaṇ pū full of cool/nice/pleasant flowers; malarndha that have blossomed,; pal̤l̤i koṇdān ārāvamudhāzhvār is lying down; padam koṇda pāmbu aṇai in the bed that is thiruvananthāzhwān (ādhi sĕshan) who has opened his hood,; vidam koṇda who is having venom; veṇ pal and white teeth,; karum thuththi dark dots (in the hood); sem kaṇ and reddish eyes,; thazhal umizh vāi and with mouth spitting fire;; thiru pādhangal̤ĕ (such ārāvamudhāzhvār’s) beautiful divine feet (only); enṛum iṇangik kidappana is always felt in; nenjaththu (thirumangai āzhvār’s) heart; idam koṇda (heart that is) wide and deep