Chapter 9

Thirumalirunjolai 2 - (மூவரில் முன்)

திருமாலிருஞ்சோலை 2
Thirumalirunjolai 2 - (மூவரில் முன்)
The āzhvār, captivated by the divine beauty of Azhagar of Thirumaliruncholai, sings these verses with a melting heart. Assuming the role of the heroine and considering Azhagar as the hero, the āzhvār's verses are structured like the words of the heroine's mother, wondering if the heroine will ever meet and rejoice in the presence of the hero.
திருமாலிருஞ்சோலை அழகரின் வடிவழகிலே நெஞ்சைப் பறி கொடுத்த ஆழ்வார் ஈண்டு உருகிப் பாடியுள்ளார். அழகரைத் தலைமகனாகவும், தம்மைத் தலைமகளாகவும் பாவித்துக் கொள்கிறார். தலைமகனைத் தலைமகள் கண்டு மகிழ்வாளோ என்று தலைவியின் தாய் கூறதல்போல் பாடல்கள் அமைந்துள்ளன.

மூவரில் முன் முதல்வன் முழங்கார் கடலுள் கிடந்து பூ வளருந்தி தன்னுள் புவனம் படைத்து உண்டு உமிழ்ந்த தேவர்கள் நாயகனைத் திரு மால் இருஞ்சோலை நின்ற கோவலர் கோவிந்தனைக் கொடியேரிடை கூடுங்கொலோ–9-9-1-பிரவேசம் —

இவ்விருப்பைத் தவிர்த்து பரம பதத்தைத் தர வேணும் என்று அபேஷித்தார்- அப்போதே அது பெறாமையாலே

+ Read more
Verses: 1828 to 1837
Grammar: Kalinilaiththuṟai / கலிநிலைத்துறை
Recital benefits: Will not get affected by the results of karma
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

PT 9.9.1

1828 மூவரில்முன்முதல்வன் முழங்கார்கடலுள்கிடந்து *
பூவுலருந்திதன்னுள் புவனம்படைத்துண்டுமிழ்ந்த *
தேவர்கள்நாயகனைத் திருமாலிருஞ்சோலைநின்ற *
கோவலர்கோவிந்தனைக் கொடியேரிடைகூடுங்கொலோ? (2)
1828 ## மூவரில் முன் முதல்வன் * முழங்கு ஆர் கடலுள் கிடந்து *
பூ வளர் உந்தி தன்னுள் * புவனம் படைத்து உண்டு உமிழ்ந்த **
தேவர்கள் நாயகனைத் * திருமாலிருஞ்சோலை நின்ற *
கோவலர் கோவிந்தனைக் * கொடி ஏர் இடை கூடும்கொலோ? 1
1828 ## mūvaril muṉ mutalvaṉ * muzhaṅku ār kaṭalul̤ kiṭantu *
pū val̤ar unti-taṉṉul̤ * puvaṉam paṭaittu uṇṭu umizhnta **
tevarkal̤ nāyakaṉait * tirumāliruñcolai niṉṟa *
kovalar kovintaṉaik * kŏṭi er iṭai kūṭumkŏlo?-1

Ragam

Kamās / கமாஸ்

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1828. Her mother says, “He, the highest of the three gods who rests on Adisesha on the roaring milky ocean, swallowed the earth and spit it out and on his navel created Nānmuhan creator of the world. Can my daughter with a vine-like waist join the god of the gods, Govindan, the cowherd in Thirumālirunjolai?”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
மூவரில் மும்மூர்த்திகளில்; முன் முதல்வன் முதல்வராய்; முழங்கு ஆர் ஒலிக்கும் அழகிய; கடலுள் கிடந்து பாற்கடலில் கிடந்து; வளர் உந்தி நாபியில் வளர் கின்ற; பூ தன்னுள் தாமரைப் பூவிலே; புவனம் படைத்து உலகைப்படைத்து; உண்டுஉமிழ்ந்த உண்டுஉமிழ்ந்த; தேவர்கள் தேவர்கள்; நாயகனை நாயகனை; திருமாலிருஞ்சோலை திருமாலிருஞ்சோலையில்; நின்ற நின்ற; கோவலர் ஆயர்க்குல; கோவிந்தனை கோவிந்தனை; கொடி ஏர் கொடிபோன்ற; இடை இடையையுடைய என் மகள்; கூடும் அணைத்துக்கொள்ள; கொலோ? வல்லவளோ?

PT 9.9.2

1829 புனைவளர்பூம்பொழிலார் பொன்னிசூழரங்கநகருள்
முனைவனை * மூவுலகும்படைத்த முதல்மூர்த்திதன்னை *
சினைவளர்பூம்பொழில்சூழ் திருமாலிருஞ்சோலைநின்றான் *
கனைகழல்காணுங்கொலோ? கயல்கண்ணியெம்காரிகையே. (2)
1829 புனை வளர் பூம் பொழில் ஆர் * பொன்னி சூழ் அரங்க நகருள்
முனைவனை * மூவுலகும் படைத்த * முதல் மூர்த்தி தன்னை **
சினை வளர் பூம் பொழில் சூழ் * திருமாலிருஞ்சோலை நின்றான் *
கனை கழல் காணும்கொலோ * கயல் கண்ணி எம் காரிகையே? 2
1829 puṉai val̤ar pūm pŏzhil ār * pŏṉṉi cūzh araṅka nakarul̤
muṉaivaṉai * mūvulakum paṭaitta * mutal mūrtti-taṉṉai **
ciṉai val̤ar pūm pŏzhil cūzh * tirumāliruñcolai niṉṟāṉ *
kaṉai kazhal kāṇumkŏlo- * kayal kaṇṇi ĕm kārikaiye?-2

Ragam

Kamās / கமாஸ்

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1829. Her mother says, “He, the ancient one, , the god of Srirangam encircled by blooming punnai trees and the Kaveri river, created the three worlds. He stays in Thirumālirunjolai surrounded with blooming groves filled with trees with flourishing branches. Will my beautiful fish-eyed daughter see his ankleted feet?”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
புனை புன்னைமரங்கள்; வளர் வளர்ந்துள்ள; பூம் பொழில் பூஞ்சோலைகளை; ஆர் உடைய; பொன்னி சூழ் காவேரியாலே சூழந்த; அரங்க திருவரங்கத்தில்; நகருள் இருக்கும்; முனைவனை முக்யமானவனை; மூவுலகும் மூவுலகும்; படைத்த படைத்த; முதல் மூர்த்தி முதல்; தன்னை மூர்த்தியை; சினை வளர் பணைகள் மிக்க; பூம் பொழில் பூஞ்சோலைகளால்; சூழ் சூழந்த; திருமாலிருஞ்சோலை திருமாலிருஞ்சோலையில்; நின்றான் நின்ற எம்பெருமானின்; கனை கழல் ஒலிக்கும் திருவடிகளை; கயல் மீன் போன்ற; கண்ணி கண்களையுடைய; எம் காரிகையே என் மகள்; காணும் கொலோ? காண்பாளோ?

PT 9.9.3

1830 உண்டுஉலகேழினையும் ஒருபாலகன்ஆலிலைமேல் *
கண்டுயில்கொண்டுகந்த கருமாணிக்கமாமலையை *
திண்திறல்மாகரிசேர் திருமாலிருஞ்சோலைநின்ற *
அண்டர்தம்கோவினைஇன்றுஅணுகுங்கொல்? என்னாயிழையே.
1830 உண்டு உலகு ஏழினையும் * ஒரு பாலகன் ஆல் இலைமேல் *
கண்துயில் கொண்டு உகந்த * கரு மாணிக்க மா மலையை **
திண் திறல் மா கரி சேர் * திருமாலிருஞ்சோலை நின்ற *
அண்டர் தம் கோவினை இன்று * அணுகும்கொல் என் ஆய் இழையே? 3
1830 uṇṭu ulaku ezhiṉaiyum * ŏru pālakaṉ āl ilaimel *
kaṇtuyil kŏṇṭu ukanta * karu māṇikka mā malaiyai **
tiṇ tiṟal mā kari cer * tirumāliruñcolai niṉṟa *
aṇṭar-tam koviṉai iṉṟu * aṇukumkŏl-ĕṉ āy-izhaiye?-3

Ragam

Kamās / கமாஸ்

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1830. Her mother says, “He, the king of the gods in the sky, shining like a dark diamond hill, swallowed all the seven worlds and rested happily on a banyan leaf as a baby. He stays in Thirumālirunjolai where large elephants live. Will my daughter ornamented with beautiful jewels join him today?”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
உலகு ஏழினையும் ஏழுலகங்களையும்; உண்டு உண்டு; ஒரு பாலகன் ஒரு பாலகன்; ஆலிலை மேல் ஆலிலை மேல்; கண் துயில் கண் துயின்று; கொண்டு உகந்த உகந்த; கரு மாணிக்க மா பெரிய கருமாணிக்க; மலையை மலை போன்றவனை; திண் திறல் மிக்க வல்லமை வாய்ந்த; மா கரி சேர் பெரிய யானைகள் வாழும்; திருமாலிருஞ்சோலை திருமாலிருஞ்சோலையில்; நின்ற இருக்கும்; அண்டர் தம் கோவினை தேவாதி தேவனை; என் ஆய் இழையே! ஆபரணங்களணிந்த என் மகள்; இன்று அணுகும்கொல்? இன்று அணுகுவளோ?

PT 9.9.4

1831 சிங்கமதாய்அவுணன் திறலாகம்முன்கீண்டுகந்த *
பங்கயமாமலர்க்கண் பரனைஎம்பரஞ்சுடரை *
திங்கள்நன்மாமுகில்சேர் திருமாலிருஞ்சோலைநின்ற *
நங்கள்பிரானை இன்றுநணுகுங்கொல்? என்நன்னுதலே.
1831 சிங்கம் அது ஆய் அவுணன் * திறல் ஆகம் முன் கீண்டு உகந்த *
பங்கய மா மலர்க் கண் * பரனை எம் பரம் சுடரை **
திங்கள் நல் மா முகில் சேர் * திருமாலிருஞ்சோலை நின்ற *
நங்கள் பிரானை இன்று * நணுகும்கொல் என் நல் நுதலே? 4
1831 ciṅkam-atu āy avuṇaṉ * tiṟal ākam muṉ kīṇṭu ukanta *
paṅkaya mā malark kaṇ * paraṉai ĕm param cuṭarai **
tiṅkal̤ nal mā mukil cer * tirumāliruñcolai niṉṟa *
naṅkal̤ pirāṉai iṉṟu * naṇukumkŏl-ĕṉ nal nutale?-4

Ragam

Kamās / கமாஸ்

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1831. Her mother says, “The highest god with beautiful lotus eyes wbo shines like a divine light took the form of a man-lion and split open the strong chest of Hiranyan. He stays in Thirumālirunjolai where the hills touch the moon and the large thick clouds. Will my daughter with a beautiful forehead join him today?”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
முன் முன்பு பிரகலாதன் துயரைப்போக்க; சிங்கம் அது ஆய் நாஸிம்மமாக வந்து; அவுணன் திறல் இரணியனின் வலிமையுள்ள; ஆகம் கீண்டு உகந்த மார்பை கிழித்து உகந்த; பங்கய மா மலர் பெரிய தாமரைப்பூப் போன்ற; கண் பரனை கண்களையுடைய பெருமானை; எம் என் ஸ்வாமியான; பரம் சுடரை எம் பரம் ஜோதியை; திங்கள் சந்திரனளவும்; நல் மா முகில் நல்ல மேகத்தளவும்; சேர் ஓங்கி வளர்ந்த சிகரங்களையுடைய; திருமாலிருஞ்சோலை திருமாலிருஞ்சோலையில்; நின்ற நங்கள் நமக்கு எளிய; பிரானை எம் பெருமானை; என் நல் என்னுடைய அழகிய; நுதலே நெற்றியையுடைய என் மகள்; இன்று இன்று சென்று; நணுகும்கொல்? சேர்ந்திடுவளோ?

PT 9.9.5

1832 தானவன்வேள்விதன்னில் தனியேகுறளாய்நிமிர்ந்து *
வானமும்மண்ணகமும் அளந்ததிரிவிக்கிரமன் *
தேனமர்பூம்பொழில்சூழ் திருமாலிருஞ்சோலைநின்ற *
வானவர்கோனைஇன்றுவணங்கித் தொழவல்லள்கொலோ?
1832 தானவன் வேள்வி தன்னில் * தனியே குறள் ஆய் நிமிர்ந்து *
வானமும் மண்ணகமும் * அளந்த திரிவிக்கிரமன் **
தேன் அமர் பூம் பொழில் சூழ் * திருமாலிருஞ்சோலை நின்ற *
வானவர் கோனை இன்று * வணங்கித் தொழ வல்லள்கொலோ? 5
1832 tāṉavaṉ vel̤vi-taṉṉil * taṉiye kuṟal̤ āy nimirntu *
vāṉamum maṇṇakamum * al̤anta tirivikkiramaṉ **
teṉ amar pūm pŏzhil cūzh * tirumāliruñcolai niṉṟa *
vāṉavar-koṉai iṉṟu * vaṇaṅkit tŏzha vallal̤kŏlo?-5

Ragam

Kamās / கமாஸ்

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1832. Her mother says, “Will my daughter go today to Thirumālirunjolai surrounded with blooming groves that drip with honey and swarm with bees and worship the god of the gods who went as the dwarf ThrivikRāman to king Mahabali’s sacrifice, grew tall and measured the sky and the earth?”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
தானவன் அசுரனான மஹாபலியின்; வேள்வி தன்னில் யாகத்தில்; தனியாக தனியாக; தனியே குறள் ஆய் வாமநனாய் வந்து; நிமிர்ந்து ஓங்கிவளர்ந்து; வானமும் வானத்தையும்; மண்ணகமும் பூமியையும்; அளந்த அளந்து கொண்ட; திரிவிக்கிரமன் திரிவிக்கிரமப் பெருமானை; தேன் அமர் தேன் மிகுந்த; பூம் பொழில் சூழ் பூஞ்சோலை சூழ்ந்த; திருமாலிருஞ்சோலை திருமாலிருஞ்சோலையில்; நின்ற இருக்கும் பெருமானை; வானவர் கோனை தேவாதி தேவனை என் மகள்; இன்று வணங்கித்தொழ இன்று வணங்கித் தொழ; வல்லள்கொலோ? வல்லவளோ?

PT 9.9.6

1833 நேசமிலாதவர்க்கும் நினையாதவர்க்கும் அரியான் *
வாசமலர்ப்பொழில்சூழ் வடமாமதுரைப்பிறந்தான் *
தேசமெல்லாம்வணங்கும் திருமாலிருஞ்சோலைநின்ற *
கேசவநம்பிதன்னைக் கெண்டையொண்கண்ணிகாணுங்கொலோ? (2)
1833 நேசம் இலாதவர்க்கும் * நினையாதவர்க்கும் அரியான் *
வாச மலர்ப் பொழில் சூழ் * வட மா மதுரைப் பிறந்தான் **
தேசம் எல்லாம் வணங்கும் * திருமாலிருஞ்சோலை நின்ற *
கேசவ நம்பி தன்னைக் * கெண்டை ஒண் கண்ணி காணும்கொலோ? 6
1833 necam ilātavarkkum * niṉaiyātavarkkum ariyāṉ *
vāca malarp pŏzhil cūzh * vaṭa mā maturaip piṟantāṉ **
tecam ĕllām vaṇaṅkum * tirumāliruñcolai niṉṟa *
kecava nampi-taṉṉaik * kĕṇṭai ŏṇ kaṇṇi kāṇumkŏlo?-6

Ragam

Kamās / கமாஸ்

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1833. Her mother says, “The dear god Kesava Nambi born in Madhura surrounded with fragrant blooming flowers is hard for people to reach if they do not love him or think of him. He stays in Thirumālirunjolai worshiped by the whole world. Will my daughter with eyes like kendai fish be able to see him?”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
நேசம் பர பக்தி; இலாதவர்க்கும் இல்லாதவர்களுக்கும்; நினையாத வர்க்கும் இறைவனை நினைக்காதவர்க்கும்; அரியான் இறைவனை அரியமுடியாது; வாச மலர் மணம் மிக்க மலர்களையுடைய; பொழில் சூழ் சோலைகளால் சூழ்ந்த; வட மா மதுரை வடமதுரையில்; பிறந்தான் பிறந்த பெருமானை; எல்லாம் எல்லா; தேசம் தேசத்தவர்களும் வந்து; வணங்கும் வணங்கும்; திருமாலிருஞ்சோலை திருமாலிருஞ்சோலையில்; நின்ற இருக்கும் பெருமானை; கேசவ நம்பி தன்னை கேசவ நம்பியை; கெண்டை ஒண் மீன் போன்ற அழகிய; கண்ணி கண்களையுடைய என் மகள்; காணுங்கொலோ? காண்பளோ?

PT 9.9.7

1834 புள்ளினைவாய்பிளந்து பொருமாகரிகொம்பொசித்து *
கள்ளச்சகடுதைத்த கருமாணிக்கமாமலையை *
தெள்ளருவிகொழிக்கும் திருமாலிருஞ்சோலைநின்ற *
வள்ளலை, வாணுதலான் வணங்கித்தொழவல்லள்கொலோ?
1834 புள்ளினை வாய் பிளந்து * பொரு மா கரி கொம்பு ஒசித்து *
கள்ளச் சகடு உதைத்த * கரு மாணிக்க மா மலையை **
தெள் அருவி கொழிக்கும் * திருமாலிருஞ்சோலை நின்ற *
வள்ளலை வாள் நுதலாள் * வணங்கித் தொழ வல்லள்கொலோ? 7
1834 pul̤l̤iṉai vāy pil̤antu * pŏru mā kari kŏmpu ŏcittu *
kal̤l̤ac cakaṭu utaitta * karu māṇikka mā malaiyai **
tĕl̤ aruvi kŏzhikkum * tirumāliruñcolai niṉṟa *
val̤l̤alai vāl̤ nutalāl̤ * vaṇaṅkit tŏzha vallal̤kŏlo?-7

Ragam

Kamās / கமாஸ்

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1834. Her mother says, “The dark god who is like a diamond mountain split open the beak of Bakasuram when he came as of a bird. He broke the tusks of the elephant Kuvalayābeedam and he killed Sakatāsuran when he came as a cart. He stays in Thirumālirunjolai where a clear waterfall flows. Will my daughter with a shining forehead be able to go there and worship that generous lord?”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
புள்ளினை பகாஸுரனின்; வாய் பிளந்து வாயைக் கிழித்தவனும்; பொரு போர்செய்தவனும்; மா பெரிய குவலயாபீட; கரி யானையின்; கொம்பு கொம்பை; ஒசித்து முறித்தவனும்; கள்ளச் சகடு கள்ளச் சகடாஸுரனை; உதைத்த உதைத்தவனும்; கரு மாணிக்க மா பெரிய கரு மாணிக்க; மலையை மலையைப் போன்றவனும்; தெள் அருவி தெளிந்த; கொழிக்கும் அருவிகள் ஓடும்; திருமாலிருஞ்சோலை திருமாலிருஞ்சோலையில்; நின்ற வள்ளலை இருக்கும் வள்ளலை; வாள் நுதலாள் ஒளியுள்ள நெற்றியையுடைய; வணங்கித் தொழ என் மகள் வணங்கித் தொழ; வல்லள்கொலோ? வல்லளோ?

PT 9.9.8

1835 பார்த்தனுக்குஅன்றருளிப் பாரதத்தொருதேர்முன்நின்று
காத்தவன்தன்னை * விண்ணோர்கருமாணிக்கமாமலையை *
தீர்த்தனைப்பூம்பொழில்சூழ் திருமாலிருஞ்சோலைநின்ற *
மூர்த்தியைக்கைதொழவும் முடியுங்கொல்? என்மொய்குழற்கே. (2)
1835 பார்த்தனுக்கு அன்று அருளிப் * பாரதத்து ஒரு தேர் முன் நின்று *
காத்தவன் தன்னை * விண்ணோர் கரு மாணிக்க மா மலையை **
தீர்த்தனைப் பூம் பொழில் சூழ் * திருமாலிருஞ்சோலை நின்ற *
மூர்த்தியைக் கைதொழவும் * முடியும் கொல் என் மொய் குழற்கே? 8
1835 pārttaṉukku aṉṟu arul̤ip * pāratattu ŏru ter muṉ niṉṟu *
kāttavaṉ-taṉṉai * viṇṇor karu māṇikka mā malaiyai **
tīrttaṉaip pūm pŏzhil cūzh * tirumāliruñcolai niṉṟa *
mūrttiyaik kaitŏzhavum * muṭiyum kŏl-ĕṉ mŏy kuzhaṟke?-8

Ragam

Kamās / கமாஸ்

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1835. Her mother says, “The god of the gods, shining like a dark diamond hill, drove the chariot in the Bhārathā war, gave his grace to Arjunā and protected him. He stays in Thirumālirunjolai surrounded with blooming groves. Will my daughter with hair that swarms with bees be able to worship the lord?”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
அன்று முன்பு; பார்த்தனுக்கு அர்ஜுனனுக்கு; அருளி அருள்கூர்ந்து; பாரதத்து பாரத யுத்தத்தில்; ஒரு தேர் ஒரு ஒப்பற்ற தேரின்; முன் நின்று ஸாரதியாயிருந்து; காத்தவன் தன்னை காப்பாற்றினவனை; விண்ணோர் நித்யஸூரிகளுக்கு; கரு மாணிக்க மா பெரிய கரு மாணிக்க; மலையை மலையைப் போன்றவனை; தீர்த்தனை பவித்திரனை; பூம் பொழில் பூஞ்சோலைகளால்; சூழ் சூழ்ந்த; திருமாலிருஞ்சோலை திருமாலிருஞ்சோலையில்; நின்ற மூர்த்தியை இருக்கும் பெருமானை; என் மொய் அடர்ந்த கூந்தலையுடைய; குழற்கே என் மகளுக்கு; கை தொழவும் கை எடுத்து தொழவும்; முடியும்கொல்? முடியுமோ?

PT 9.9.9

1836 வலம்புரியாழியனை வரையார்திரள்தோளன்தன்னை *
புலம்புரிநூலவனைப் பொழில்வேங்கடவேதியனை *
சிலம்பியலாறுடைய திருமாலிருஞ்சோலைநின்ற *
நலந்திகழ்நாரணனை நணுகுங்கொல்? என்நன்னுதலே. (2)
1836 வலம்புரி ஆழியனை * வரை ஆர் திரள் தோளன் தன்னை *
புலம் புரி நூலவனைப் * பொழில் வேங்கட வேதியனை **
சிலம்பு இயல் ஆறு உடைய * திருமாலிருஞ்சோலை நின்ற *
நலம் திகழ் நாரணனை * நணுகும் கொல் என் நல் நுதலே? 9
1836 valampuri āzhiyaṉai * varai ār tiral̤ tol̤aṉ-taṉṉai *
pulam puri nūlavaṉaip * pŏzhil veṅkaṭa vetiyaṉai **
cilampu iyal āṟu uṭaiya * tirumāliruñcolai niṉṟa *
nalam tikazh nāraṇaṉai * naṇukum kŏl-ĕṉ nal nutale?-9

Ragam

Kamās / கமாஸ்

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1836. Her mother says, “The god of Thiruvenkatam surrounded with groves, the scholar of the Vedās, wears a divine thread on his chest and carries a conch and a discus in his mountain-like arms. He stays in Thirumālirunjolai where the river Silampāru flows. Will my daughter with a beautiful forehead join the god Nāranan who shines with goodness?”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
வலம்புரி வலம்புரி சங்கும்; ஆழியனை சக்கரமும் உடையவனும்; வரை ஆர் மலைபோன்று; திரள் தோளன் திரண்ட தோள்களை; தன்னை உடையுயவனும்; புலம் புரி பூணூல் புரி நூல்; நூலவனை உள்ளவனும்; பொழில் சோலைகள் சூழ்ந்த; வேங்கட திருவேங்கட மலையிலுள்ள; வேதியனை வேத புருஷனும்; சிலம்பு சிலம்பு என்று சொல்லப்படுகிற; இயல் ஆறு உடைய நூபுரகங்கை பாயும்; திருமாலிருஞ்சோலை திருமாலிருஞ்சோலையில்; நின்ற இருக்கும் பெருமானை; நலம் திகழ் கல்யாணகுணங்களையுடைய; நாரணனை நாராயணனை; நுதலே அழகிய நெற்றியையுடைய; என் என் மகள்; நணுகும் கொல்? அணுகுவளோ?

PT 9.9.10

1837 தேடற்கரியவனைத் திருமாலிருஞ்சோலைநின்ற *
ஆடல் பறவையனை அணியாயிழைகாணுமென்று *
மாடக்கொடிமதிள்சூழ் மங்கையார்கலிகன்றிசொன்ன *
பாடல்பனுவல்பத்தும் பயில்வார்க்குஇல்லைபாவங்களே. (2)
1837 ## தேடற்கு அரியவனைத் * திருமாலிருஞ்சோலை நின்ற *
ஆடல் பறவையனை * அணி ஆய் இழை காணும் என்று **
மாடக் கொடி மதிள் சூழ் * மங்கையார் கலிகன்றி சொன்ன *
பாடல் பனுவல் பத்தும் * பயில்வார்க்கு இல்லை பாவங்களே 10
1837 ## teṭaṟku ariyavaṉait * tirumāliruñcolai niṉṟa *
āṭal paṟavaiyaṉai * aṇi āy-izhai kāṇum ĕṉṟu **
māṭak kŏṭi matil̤ cūzh * maṅkaiyār kalikaṉṟi cŏṉṉa *
pāṭal paṉuval pattum * payilvārkku illai-pāvaṅkal̤e-10

Ragam

Kamās / கமாஸ்

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1837. He is hard to search out and find. He rides on Garudā and stays in Thirumālirunjolai. Kaliyan, the chief of Thirumangai surrounded with walls where flags fly on the palaces composed ten Tamil pāsurams on the god. If devotees learn and recite these ten songs, they will not experience any fruits of their karmā.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
தேடற்கு தன் முயற்சியால் தேட; அரியவனை முடியாதவனை; திருமாலிருஞ்சோலை திருமாலிருஞ்சோலையில்; நின்ற இருப்பவனை; ஆடல் பெரிய திருவடியை; பறவையனை கருடனை வாகனமாக உடையவனை; இழை அழகிய ஆபரணங்கள்; அணி ஆய் அணிந்த என் மகள்; காணும் காணக்கூடும்; என்று என்று தாயின் பேச்சை; மாட மாடங்களில் உள்ள; கொடி கொடிகளோடு கூடின; மதிள் சூழ் மதிள்களால் சூழ்ந்த; மங்கையார் திருமங்கை; கலிகன்றி ஆழ்வார்; சொன்ன அருளிச்செய்த; பாடல் பத்தும் பாடல்களான பத்து; பனுவல் பாசுரங்களையும்; பயில்வார்க்கு கற்பவர்களுக்கு; இல்லை பாவங்களே பாவங்கள் இல்லை