PT 2.5.2

காண்டவ வனம் எரித்தவன் கடல்மல்லையில் உள்ளான்

1089 பூண்டவத்தம்பிறர்க் கடைந்துதொண்டுபட்டுப்
பொய்ந்நூலை மெய்ந்நூலென்றென்றுமோதி
மாண்டு * அவத்தம்போகாதேவம்மின் எந்தை
என்வணங்கப்படுவானை * கணங்களேத்தும்
நீண்டவத்தைக்கருமுகிலை எம்மான்தன்னை
நின்றவூர்நித்திலத்தைத் தொத்தார்சோலை *
காண்டவத்தைக்கனலெரிவாய்ப்பெய்வித்தானைக்
கண்டதுநான்கடல்மல்லைத்தலசயனத்தே. (2)
PT.2.5.2
1089 ## pūṇṭu avattam piṟarkku aṭaintu tŏṇṭu paṭṭup * pŏyn nūlai mĕyn nūl ĕṉṟu ĕṉṟum oti
māṇṭu * avattam pokāte vammiṉ * ĕntai ĕṉ vaṇaṅkappaṭuvāṉai ** kaṇaṅkal̤ ettum
nīṇṭa vattai karu mukilai ĕmmāṉ-taṉṉai * niṉṟavūr nittilattai tŏttu ār colai *
kāṇṭavattaik kaṉal ĕrivāyp pĕyvittāṉaik * kaṇṭatu nāṉ-kaṭalmallait talacayaṉatte-2

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

1089. Don’t believe in those who do tapas to other gods and serve them and don’t trust their false books as true or believe in their teachings and destroy yourselves. Come to our dark cloud-colored lord in Thirunindravur, who is a precious pearl and good tapas worshiped by all the ganas in Kāndavanam where he burned Indra’s gardens. I saw him in Kadalmallai Thalasayanam.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அவத்தம் வீண் வேலைகளில்; பூண்டு ஈடுபட்டு; பிறர்க்கு அடைந்து பிறர்க்கு; தொண்டு பட்டு அடிமை செய்து; பொய்ந் நூலை பொய்யான புத்தகங்களை; மெய்ந் மெய்யான; நூல் என்று சாஸ்திரங்கள் என்று நம்பி; என்றும் ஓதி எப்போதும் அவைகளை கற்று; மாண்டு முடிந்து; அவத்தம் போகாதே பாழாய்ப் போகாமல்; வம்மின் வாழ வாருங்கள்; என் என் போன்றவர்க்கு; வணங்கப்படுவானை வணங்கத் தகுதியுடையவனை; கணங்கள் ஞானிகளின் திரள்களாலே; ஏத்தும் துதிக்கப்படுபவனும்; நீண்ட வத்தை சிறந்த அப்படிப்பட்ட; எந்தை நம் தந்தையானவனை; கரு முகிலை காளமேகம் போன்றவனுமான; எம்மான் தன்னை எம்பெருமானை; நின்றவூர் திருநின்றவூரில்; நித்திலத்தை முத்துக்குவியல் போன்றவனும்; தொத்து ஆர் பூங்கொத்துகள் நிறைந்த; சோலை சோலைகளையுடைய; காண்டவத்தைக் காண்டவவனத்தை; கனல் எறியும்; எரிவாய்ப் நெருப்பில் இட்டு; பெய்வித்தானை அழித்த எம்பெருமானை; கண்டது நான் நான் கண்டது; கடல்மல்லைத் திருக்கடல் மல்லை; தலசயனத்தே தலசயனத்தில்
avaththam some useless acts; pūṇdu taking up; piṛarkku for lowly people; adaindhu holding on (to them); thoṇdupattu serving; poy false; nūlai scriptures of those who reject vĕdham; ŏdhi learning (those); mey nūl enṛum believing to be true meanings; māṇdu being finished; avaththam useless; pŏgāmal not becoming; vammin come (to become liberated);; endhai being my father; en for those who are like me; vaṇangap paduvānai one who is easily approachable and surrendered to; kaṇangal̤ by the groups of wise people; ĕththum one who is praised; nīṇda aththai being that entity which is inconceivable; karumugilai one who has dark cloud like complexion; ninṛavūr in thiruninṛavūr; niththilaththai one who has a cool form like a collection of pearls; thoththu flower bunches; ār being abundant; sŏlai having garden; kāṇdavaththai kāṇdava forest; kanal shining; eri fire-s; vāy in the mouth; peyviththānai one who made to enter; emmān thannai sarvĕṣvaran; thalasayanam sthala sayanam (where he rests on the ground); kadal mallai in thirukkadalmallai; nān kaṇdadhu ī got to see