Chapter 5

Thirukkadalmallai 1 - (பார்-ஆயது உண்டு)

திருக்கடல்மல்லை -1
Thirukkadalmallai 1 - (பார்-ஆயது உண்டு)
Introduction & Details
Recitation
Translation

PT 2.5.2

1089 பூண்டவத்தம்பிறர்க் கடைந்துதொண்டுபட்டுப்

பொய்ந்நூலை மெய்ந்நூலென்றென்றுமோதி

மாண்டு * அவத்தம்போகாதேவம்மின் எந்தை

என்வணங்கப்படுவானை * கணங்களேத்தும்

நீண்டவத்தைக்கருமுகிலை எம்மான்தன்னை

நின்றவூர்நித்திலத்தைத் தொத்தார்சோலை *

காண்டவத்தைக்கனலெரிவாய்ப்பெய்வித்தானைக்

கண்டதுநான்கடல்மல்லைத்தலசயனத்தே. (2)

PT 2.5.3

1090 உடம்புருவில்மூன்றொன்றாய் மூர்த்திவேறாய்

உலகுய்யநின்றானை * அன்றுபேய்ச்சி

விடம்பருகுவித்தகனைக் கன்றுமேய்த்து

விளையாடவல்லானை, வரைமீகானில் *

தடம்பருகுகருமுகிலைத் தஞ்சைக்கோயில்

தவநெறிக்குஓர்பெருநெறியை, வையங்காக்கும் *

கடும்பரிமேல்கற்கியைநான் கண்டுகொண்டேன்

கடிபொழில்சூழ்கடல்மல்லைத்தலசயனத்தே.

PT 2.5.4

1091 பேய்த்தாயைமுலையுண்ட பிள்ளைதன்னைப்

பிணைமருப்பிற்கருங்களிற்றை பிணைமான் நோக்கின் *

ஆய்த்தாயர்தயிர்வெண்ணெயமர்ந்தகோவை

அந்தணர்தம் அமுதத்தை, குரவைமுன்னே

கோத்தானை * குடமாடுகூத்தன்றன்னைக்

கோகுலங்கள்தளராமல்குன்றமேந்திக்

காத்தானை * எம்மானைக் கண்டுகொண்டேன்

கடிபொழில்சூழ்கடல்மல்லைத்தலசயனத்தே.

PT 2.5.5

1092 பாய்ந்தானைத் திரிசகடம்பாறிவீழப்

பாலகனாய்ஆலிலையில் பள்ளியின்ப

மேய்ந்தானை * இலங்கொளிசேர்மணிக்குன்றன்ன

ஈரிரண்டுமால்வரைத்தோளெம்மான்தன்னை *

தோய்ந்தானைநிலமகள்தோள் தூதிற்சென்று அப்

பொய்யறைவாய்ப்புகப்பெய்தமல்லர்மங்கக்

காய்ந்தானை * எம்மானைக் கண்டுகொண்டேன்

கடிபொழில்சூழ்கடல்மல்லைத்தலசயனத்தே.