The Place of Him Who Stood for the World's Salvation is Kaṭalmallai
உலகுய்ய நின்றான் இடம் கடல்மல்லை
1090 உடம்புருவில்மூன்றொன்றாய் மூர்த்திவேறாய்
உலகுய்யநின்றானை * அன்றுபேய்ச்சி
விடம்பருகுவித்தகனைக் கன்றுமேய்த்து
விளையாடவல்லானை, வரைமீகானில் *
தடம்பருகுகருமுகிலைத் தஞ்சைக்கோயில்
தவநெறிக்குஓர்பெருநெறியை, வையங்காக்கும் *
கடும்பரிமேல்கற்கியைநான் கண்டுகொண்டேன்
கடிபொழில்சூழ்கடல்மல்லைத்தலசயனத்தே.