PT 2.5.1

I Saw Tirumāl in Tirukkaṭalmallai

திருக்கடல் மல்லையில் திருமாலைக் கண்டேன்

1088 பாராயதுண்டுமிழ்ந்தபவளத்தூணைப்

பாடுகடலிலமுதத்தைப்பரிவாய்கீண்ட

சீரானை * எம்மானைத்தொண்டர்தங்கள்

சிந்தையுள்ளே முளைத்தெழுந்ததீங்கரும்பினை *

போரானைக்கொம்பொசித்த போரேற்றினைப்

புணர்மருதமிறநடந்தபொற்குன்றினை *

காரானையிடர்கடிந்தகற்பகத்தைக்

கண்டதுநான்கடல்மல்லைத் தலசயனத்தே. (2)

Text size