He Who Lives Eternally in the Hearts of Those Who Think of Him
நினைப்பவரின் உள்ளத்தில் நிலையாக வாழ்பவன்
1094 பேணாதவலியரக்கர் மெலியவன்று
பெருவரைத்தோளிறநெரித்து அன்ற அவுணர்கோனை *
பூணாகம்பிளவெடுத்த போர்வல்லோனைப்
பொருகடலுள்துயிலமர்ந்தபுள்ளூர்தியை *
ஊணாகப்பேய்முலைநஞ்சு உண்டான்தன்னை
உள்ளுவாருள்ளத்தேஉறைகின்றானை *
காணாதுதிரிதருவேன் கண்டுகொண்டேன்
கடிபொழில்சூழ்கடல்மல்லைத்தலசயனத்தே.