The Abode of Him Who Took the Varāha Incarnation is Kaṭalmallai
வராகாவதாரம் எடுத்தவன் வாழ்விடம் கடல்மல்லை
1093 கிடந்தானைத்தடங்கடலுள் பணங்கள்மேவிக்
கிளர்பொறியமறிதிரியஅதனின்பின்னே
படர்ந்தானை * படுமதத்தகளிற்றின்கொம்பு
பறித்தானைப் பாரிடத்தைஎயிறுகீற
இடந்தானை * வளைமருப்பின்ஏனமாகி
இருநிலனும் பெருவிசும்பும்எய்தாவண்ணம்
கடந்தானை * எம்மானைக்கண்டுகொண்டேன்
கடிபொழில்சூழ்கடல்மல்லைத்தலசயனத்தே.