The One Seen by the Vedas Can Be Seen in Kaṭalmallai
வேதங்கள் கண்டவனைக் கடல்மல்லையில் காணலாம்
1096 தொண்டாயர்தாம்பரவும் அடியினானை
படிகடந்ததாளாளற்குஆளாஉய்தல்
விண்டானை * தென்னிலங்கையரக்கர்வேந்தை
விலங்குண்ணவலங்கைவாய்ச்சரங்களாண்டு *
பண்டாயவேதங்கள்நான்கும் ஐந்து
வேள்விகளும் கேள்வியோடுஅங்கமாறும்
கண்டானை * தொண்டனேன்கண்டுகொண்டேன்
கடிபொழில்சூழ்கடல்மல்லைத்தலசயனத்தே.