The City of Lord Kaṇṇa is Kaṭalmallai
கண்ணபிரான் ஊர் கடல்மல்லை
1091 பேய்த்தாயைமுலையுண்ட பிள்ளைதன்னைப்
பிணைமருப்பிற்கருங்களிற்றை பிணைமான் நோக்கின் *
ஆய்த்தாயர்தயிர்வெண்ணெயமர்ந்தகோவை
அந்தணர்தம் அமுதத்தை, குரவைமுன்னே
கோத்தானை * குடமாடுகூத்தன்றன்னைக்
கோகுலங்கள்தளராமல்குன்றமேந்திக்
காத்தானை * எம்மானைக் கண்டுகொண்டேன்
கடிபொழில்சூழ்கடல்மல்லைத்தலசயனத்தே.