He Who Burned the Kāṇḍava Forest is in Kaṭalmallai
காண்டவ வனம் எரித்தவன் கடல்மல்லையில் உள்ளான்
1089 பூண்டவத்தம்பிறர்க் கடைந்துதொண்டுபட்டுப்
பொய்ந்நூலை மெய்ந்நூலென்றென்றுமோதி
மாண்டு * அவத்தம்போகாதேவம்மின் எந்தை
என்வணங்கப்படுவானை * கணங்களேத்தும்
நீண்டவத்தைக்கருமுகிலை எம்மான்தன்னை
நின்றவூர்நித்திலத்தைத் தொத்தார்சோலை *
காண்டவத்தைக்கனலெரிவாய்ப்பெய்வித்தானைக்
கண்டதுநான்கடல்மல்லைத்தலசயனத்தே. (2)