PT 2.5.10

The Root of Evil Karmas Will Be Severed

தீவினைகளின் வேர் அறும்

1097 படநாகத்தணைக்கிடந்து அன்றுஅவுணர்கோனைப்

படவெகுண்டுமருதிடைபோய், பழனவேலி *

தடமார்ந்தகடல்மல்லைத் தலசயனத்துத்

தாமரைக்கண்துயிலமர்ந்த தலைவன்தன்னை *

கடமாரும்கருங்களிறுவல்லான் வெல்போர்க்

கலிகன்றி ஒலிசெய்தஇன்பப்பாடல் *

திடமாக இவையைந்துமைந்தும் வல்லார்

தீவினையைமுதலரியவல்லார்தாமே. (2)

Text size