The Place of the Lotus-eyed Lord is Kaṭalmallai
கமலக்கண்ணன் இடம் கடல்மல்லை
1095 பெண்ணாகிஇன்னமுதம் வஞ்சித்தானைப்
பிறையெயிற்றன்றடலரியாய்ப்பெருகினானை *
தண்ணார்ந்தவார்புனல்சூழ் மெய்யமென்னும்
தடவரைமேல்கிடந்தானை, பணங்கள்மேவி *
என்ணானைஎண்ணிறந்தபுகழினானை
இலங்கொளிசேர்அரவிந்தம்போன்றுநீண்ட
கண்ணானை * கண்ணாரக்கண்டுகொண்டேன்
கடிபொழில்சூழ்கடல்மல்லைத்தலசயனத்தே.