139 போய்ப்பாடுடையநின்தந்தையும்தாழ்த்தான்
பொருதிறல்கஞ்சன்கடியன் *
காப்பாருமில்லைகடல்வண்ணா! உன்னைத்
தனியேபோய்எங்கும்திரிதி *
பேய்ப்பால்முலையுண்டபித்தனே!
கேசவநம்பீ! உன்னைக்காதுகுத்த *
ஆய்ப்பாலர்பெண்டுகளெல்லாரும்வந்தார்
அடைக்காய்திருத்திநான்வைத்தேன். (2)