PAT 2.3.5

The Dark-tressed Viṣṇu

கருங்குழல்விட்டு (விஷ்ணு)

143 சோத்தம்பிரான் என்றுஇரந்தாலும்கொள்ளாய்

சுரிகுழலாரொடுநீபோய் *

கோத்துக்குரவைபிணைந்துஇங்குவந்தால்

குணங்கொண்டிடுவனோ? நம்பீ! *

பேர்த்தும்பெரியனஅப்பம்தருவன்

பிரானே! திரியிடவொட்டில் *

வேய்த்தடந்தோளார்விரும்புகருங்குழல்

விட்டுவே! நீஇங்கேவாராய்

Text size