The Benefit of Reciting the Twelve Sacred Names
துவாதச நாமங்களின் பயன்
151 வார்காதுதாழப்பெருக்கியமைத்து
மகரக்குழையிடவேண்டி *
சீரால்அசோதைதிருமாலைச்சொன்னசொல்
சிந்தையுள்நின்றுதிகழ *
பாரார்தொல்புகழான்புதுவைமன்னன்
பன்னிருநாமத்தாற்சொன்ன *
ஆராதஅந்தாதிபன்னிரண்டும்வல்லார்
அச்சுதனுக்குஅடியாரே (2)