Govinda, Our Lord of Auspicious Praises
சோத்தம்பிரான் கோவிந்தன்
142 வணநன்றுடையவயிரக்கடிப்பிட்டு
வார்காதுதாழப்பெருக்கி *
குணநன்றுடையர்இக்கோபாலபிள்ளைகள்
கோவிந்தா! நீசொல்லுக்கொள்ளாய் *
இணைநன்றழகியஇக்கடிப்புஇட்டால்
இனியபலாப்பழம்தந்து *
சுணநன்றணிமுலையுண்ணத்தருவன்நான்
சோத்தம்பிரான்! இங்கேவாராய்