Hṛṣīkeśa, Who Hurled the Calf-Demon
கன்றெறிந்த இருடீகேசன்
148 காரிகையார்க்கும்உனக்கும்இழுக்குற்றென்?
காதுகள்வீங்கியெரியில் *
தாரியாதாகில்தலைநொந்திடுமென்று
விட்டிட்டேன்குற்றமேயன்றே *
சேரியிற்பிள்ளைகளெல்லாரும் காது
பெருக்கித்திரியவும்காண்டி *
ஏர்விடைசெற்றுஇளங்கன்றுஎறிந்திட்ட
இருடீகேசா! என்தன்கண்ணே