Padmanābha, Who Kicked the Cart-Demon
சகடமுதைத்த பத்மநாபன்
149 கண்ணைக்குளிரக்கலந்துஎங்கும்நோக்கிக்
கடிகமழ்பூங்குழலார்கள் *
எண்ணத்துள்என்றும்இருந்துதித்திக்கும்
பெருமானே! எங்களமுதே *
உண்ணக்கனிகள்தருவன் கடிப்பொன்றும்
நோவாமேகாதுக்கிடுவன் *
பண்ணைக்கிழியச்சகடமுதைத்திட்ட
பற்பநாபா! இங்கேவாராய்