PAT 2.3.6

The Ocean-hued Madhusūdana

கடல்வண்ணன் மதுசூதன்

144 விண்ணெல்லாம்கேட்கஅழுதிட்டாய்.

உன்வாயில்விரும்பியதனை நான்நோக்கி *

மண்ணெல்லாம்கண்டுஎன்மனத்துள்ளேயஞ்சி

மதுசூதனேயென்றிருந்தேன் *

புண்ணேதுமில்லைஉன்காதுமறியும்

பொறுத்துஇறைப்போதுஇருநம்பீ! *

கண்ணா! என்கார்முகிலே!

கடல்வண்ணா! காவலனே! முலையுணாயே

Text size