O Mothers! Show Me the City of Tiruppēr.
அன்னைமீர்! திருப்பேர் நகரை எனக்குக் காட்டுங்கள்
3479 முனிந்துசகடமுதைத்து மாயப்
பேய்முலையுண்டுமருதிடைபோய் *
கனிந்தவிளவுக்குக்கன்றெறிந்த
கண்ணபிரானுக்குஎன்பெண்மைதோற்றேன் *
முனிந்தினியென்செய்தீர்? அன்னைமீர்காள்!
முன்னியவன்வந்துவீற்றிருந்த *
கனிந்தபொழில்திருப்பேரையிற்கே
காலம்பெறஎன்னைக்காட்டுமினே.