My Mind Belongs to Kaṇṇaṉ's Red-Fruit-like Mouth.
என் மனம் கண்ணன் செங்கனிவாயின் திறத்தது
3476 நானக்கருங்குழல்தோழிமீர்காள்!
அன்னையர்காள்! அயல்சேரியீர்காள்! *
நானித்தனிநெஞ்சம்காக்கமாட்டேன்
என்வசமன்றிது, இராப்பகல்போய் *
தேன்மொய்த்தபூம்பொழில்தண்பணைசூழ்
தெந்திருப்பேரையில்வீற்றிருந்த *
வானப்பிரான்மணிவண்ணன்கண்ணன்
செங்கனிவாயின் திறத்ததுவே.