TVM 7.3.1

I Will Reach Tiruppēr.

நான் திருப்பேரைச் சேர்வேன்

3475 வெள்ளைச்சுரிசங்கொடாழியேந்தித்

தாமரைக்கண்ணன்என்னெஞ்சினூடே *

புள்ளைக்கடாகின்றவாற்றைக்காணீர்

எஞ்சொல்லிச்சொல்லுகேன்? அன்னைமீர்காள்! *

வெள்ளச்சுகமவன்வீற்றிருந்த

வேதவொலியும்விழாவொலியும் *

பிள்ளைக்குழாவிளையாட்டொலியுமறாத்

திருப்பேரையில்சேர்வன்நானே. (2)

Text size