Chapter 2

Parānkusa Nāyaki having a love quarrel with the Lord for coming late - (மின் இடை)

தலைவன் காலம் தாழ்த்து வரக்கண்ட தலைவி ஊடல்கொண்டு உரைத்தல்
Unable to bear the separation from emperumAn, Āzhvār sends various birds as messengers. Realizing Āzhvār’s yearning, emperumAn wishes to run and grace Āzhvār with His presence just like how He had rescued the elephant held by the jaws of the crocodile. Cognizant of emperumān’s decision, “perumānE! There is nothing for you to do here; go someplace where + Read more
எம்பெருமானின் பிரிவாற்றமாட்டாமல் ஆழ்வார் புள்ளினங்களைத் தூது விட்டார். ஆழ்வாரின் துன்பத்தை அறிந்த எம்பெருமான், முதலை வாய்ப்பட்ட யானைக்கு அருள வந்தாற்போல் ஓடிவந்து காட்சி தர எண்ணினான். அப்போது ஆழ்வார், “பெருமானே! இங்கு உமக்குச் செய்யவேண்டுவது ஒன்றுமில்லை; காரியம் உள்ள இடத்திற்குச் செல்லலாம்” என்று ஊடலில் பேசுவதாக அமைந்துள்ளது. தம்மைக் கோபியர் நிலையில் இருத்திப் பாடுகிறார் ஆழ்வார்.
Verses: 3354 to 3364
Grammar: Āsiriyaththuṟai / ஆசிரியத்துறை
Pan: சீகாமரம்
Timing: 9.00-10.30 PM
Recital benefits: will have no troubles in their lives
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

TVM 6.2.1

3354 மின்னிடைமடவார்கள்நின்னருள்சூடுவார் முன்பு நானதஞ்சுவன் *
மன்னுடையிலங்கை அரண்காய்ந்தமாயவனே! *
உன்னுடையசுண்டாயம்நானறிவன் இனிஅதுகொண்டு செய்வதென்? *
என்னுடையபந்தும்கழலும் தந்துபோகுநம்பீ! (2)
3354 ## மின் இடை மடவார்கள் நின் அருள் சூடுவார் * முன்பு
நான் அது அஞ்சுவன் *
மன் உடை இலங்கை * அரண் காய்ந்த மாயவனே **
உன்னுடைய சுண்டாயம் நான் அறிவன் * இனி
அதுகொண்டு செய்வது என்? *
என்னுடைய பந்தும் கழலும் * தந்து போகு நம்பீ (1)
3354 ## miṉ iṭai maṭavārkal̤ niṉ arul̤ cūṭuvār * muṉpu
nāṉ atu añcuvaṉ *
maṉ uṭai ilaṅkai * araṇ kāynta māyavaṉe **
uṉṉuṭaiya cuṇṭāyam nāṉ aṟivaṉ * iṉi
atukŏṇṭu cĕyvatu ĕṉ? *
ĕṉṉuṭaiya pantum kazhalum * tantu poku nampī (1)

Ragam

Shankarābharaṇa / சங்கராபரண

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

I fear that both You and I, Your slender-waisted favorites, will face reprimand. I am well aware of all Your mischief, yet it no longer concerns me. You tore down the ramparts of Rāvaṇa's Laṅkā in great anger, You, the perfect One of wondrous deeds. It is better for You to depart from here and go wherever You please, but leave my playthings here, alright?

Explanatory Notes

(i) Reference to playthings, in this song, would make it appear that Parāṅkuśa Nāyakī and the Lord were playing some game and the latter suddenly left. The Nāyakī felt piqued by this sudden departure of the game-partner so that, when He presented Himself later on, she would keep mum. And now, the Lord tried to coax her, in ever so many ways: He lavished epithets on her + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நின் அருள் உன் அருளை பெறுதற்குரியவர்களான; மின் இடை மின்னற்கொடி போன்ற இடையை உடைய; மடவார்கள் பெண்களை உன்; சூடுவார் அருள் பெறச் செய்த பின்; அது அவர்களுக்கு நீ அடிமையாவது போல்; முன்பு அவர்கள் முன்பு நீ நடிப்பதைக் கண்டு; அஞ்சுவன் நான் அஞ்சுகின்றேன்; மன் உடை ராவணனின்; அரண் இலங்கை காவல் அமைந்த இலங்கையை; காய்ந்த மாயவனே! அழித்த மாயவனே!; உன்னுடைய உன்னுடைய; சுண்டாயம் க்ருத்ரிமங்களெல்லாம்; நான் அறிவன் நான் அறிவேன்; இனி அது கொண்டு இனி அதனால்; செய்வது என்? பெறக்கூடிய பயன் என்ன?; என்னுடைய என்னுடைய; பந்தும் கழலும் பந்தையும் அம்மானையையும்; தந்து திருப்பிக் கொடுத்துவிட்டு; போகு நம்பீ! செல்வாய் நம்பி என்கிறாள்
madavārgal̤ having humility etc which are qualities of the soul; nin your; arul̤ mercy; sūduvār having acquired, them; munbu in presence; nān ī who know your actions towards them; adhu about this act of yours which will make them shy away from you to weaken you; anjuvan ī fear;; man udai ilangai arṇ kāyndha ḫor us, is there any one other than you!; māyavanĕ ŏh such emperumān who is having the mischievous form to deceive the young girls and captivate them!; (adhu that); unnudaiya your; suṇdāyam selfish nature; nān ī who know your thoughts, unlike others; aṛivan know;; ini now; adhu that; koṇdu with; seyvadhu to do; en is there anything?; nambī ŏnly ī am missing [he is known to have 16100 wives as said in -padhinārām āyiravar dhĕvimār-, you should go there, so that they don-t hate me); ennudaiya considered to be owned and possessed by me,; pandhum ball; kazhalum anklet; thandhu give; pŏgu go.; nambī ŏh you who are complete!; pŏgu (why are you not leaving even after being asked to go? ḫrom our proximity,) go

TVM 6.2.2

3355 போகுநம்பீ! உன்தாமரைபுரைகண்ணிணையும் செவ்வாய் முறுவலும் *
ஆகுலங்கள்செய்ய அழிதற்கேநோற்றோமே? யாம் *
தோகைமாமயிலார்கள்நின்னருள்சூடுவார் செவியோசை வைத்தெழ *
ஆகள்போகவிட்டுக் குழலூதுபோயிருந்தே.
3355 போகு நம்பீ உன் தாமரைபுரை கண் இணையும் * செவ்வாய் முறுவலும் *
ஆகுலங்கள் செய்ய * அழிதற்கே நோற்றோமே யாம்? **
தோகை மா மயிலார்கள் நின் அருள் சூடுவார் * செவி ஓசை வைத்து எழ *
ஆகள் போகவிட்டுக் * குழல் ஊது போயிருந்தே (2)
3355 poku nampī uṉ tāmaraipurai kaṇ iṇaiyum * cĕvvāy muṟuvalum *
ākulaṅkal̤ cĕyya * azhitaṟke noṟṟome yām? **
tokai mā mayilārkal̤ niṉ arul̤ cūṭuvār * cĕvi ocai vaittu ĕzha *
ākal̤ pokaviṭṭuk * kuzhal ūtu poyirunte (2)

Ragam

Shankarābharaṇa / சங்கராபரண

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

Leave us be, oh Sire; we womenfolk seem destined to fade away under the enchantment of Your lotus eyes and captivating smiles upon Your red lips. It's best for You to go and tend to the cows, playing the flute from afar for those who are the objects of Your affection, with locks as beautiful as the spread-out plumes of the peacock.

Explanatory Notes

When asked by the Nāyakī to get away, the Lord entered into an argument with her, saying that she could not claim ownership of the games materials and that apart, it would be most uncharitable on her part to expel Him who had come over to her, out of deep love. The Lover advanced towards the Nāyakī with bewitching smile and sweet glances but the Nāyakī, still smarting + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
போகு நம்பீ! நம்பீ! நீ இங்கிருந்து போகலாம்; உன் தாமரை புரை உன்னுடைய தாமரை போன்ற; கண் இணையும் கண்களிரண்டும்; செவ்வாய் சிவந்த வாயில் தோன்றும்; முறுவலும் புன் முறுவலும்; ஆகுலங்கள் செய்ய துயரங்களைச் செய்ய; அழிதற்கே அதனால் அழிவதற்கே; நோற்றோமே யாம் நாங்கள் நோன்பு நோற்றோம்; தோகை தோகையையுடைய; மா மயிலார்கள் சிறந்த மயில்கள் போன்ற பெண்கள்; நின் அருள் உன் அருளை; சூடுவார் அநுபவிக்கப் பிறந்தவர்கள்; செவி ஓசை வேணுகானத்தின் ஒலியைக் கேட்டு; வைத்து எழ எழுந்து வரும்படியாக; ஆகள் போகவிட்டு பசுக்களை மேய்க்கப் போகவிட்டு; போயிருந்தே அவர்களை அழைப்பது போன்று அங்கே; குழல் ஊது சென்று புல்லாங்குழலை ஊதுவாயாக
un you are smiling at us; your,; thāmarai purai attractive like a lotus flower; kaṇṇiṇaiyum eyes; sem reddish; vāy in your mouth; muṛuvalum smile (we are not fortunate to see that and be happy); yām us (hurting our posture); āgulangal̤ anguish; seyya manifest; azhidhaṛku to be finished; nŏṝŏmĕ have we not vowed?; thŏgai with expanded feathers; nice; mayilārgal̤ having hairdo like peacock; nin your; arul̤ mercy; sūduvār don-t they have?; ; ŏsai sound; sevi vaiththu on hearing; ezha to rise and arrive; āgal̤ cows; pŏga vittu driving them far away; pŏy going there; irundhu staying there; kuzhal flute; ūdhu play.; ; nambī you who are complete (in mischief)

TVM 6.2.3

3356 போயிருந்துநின்புள்ளுவம் அறியாதவர்க்குஉரைநம்பீ! * நின்செய்ய
வாயிருங்கனியுங்கண்களும் விபரீதமிந்நாள் *
வேயிருந்தடந்தோளினார் இத்திருவருள்பெறுவார் யவர்கொல்? *
மாயிருங்கடலைக்கடைந்த பெருமானாலே.
3356 போயிருந்து நின் புள்ளுவம் * அறியாதவர்க்கு உரை நம்பீ * நின் செய்ய
வாய் இருங் கனியும் கண்களும் * விபரீதம் இந் நாள் **
வேய் இரும் தடம் தோளினார் * இத் திருவருள் பெறுவார் எவர்கொல் *
மா இரும் கடலைக் கடைந்த * பெருமானாலே? (3)
3356 poyiruntu niṉ pul̤l̤uvam * aṟiyātavarkku urai nampī * niṉ cĕyya
vāy iruṅ kaṉiyum kaṇkal̤um * viparītam in nāl̤ **
vey irum taṭam tol̤iṉār * it tiruvarul̤ pĕṟuvār ĕvarkŏl *
mā irum kaṭalaik kaṭainta * pĕrumāṉāle? (3)

Ragam

Shankarābharaṇa / சங்கராபரண

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

Oh, Sire, it's best to stay away from us and test Your charms on unsuspecting maidens. Indeed, Your lips and eyes, resembling ripe fruits, are more captivating than ever. I am uncertain who those fortunate ones with shoulders like bamboo will be blessed to enjoy the company of this great churner of the vast ocean.

Explanatory Notes

The Lord who was asked to go and fend the cows and play the flute, as in the last song, affirmed that He could play the flute and give vent to His love all right, only in the company of His beloved ones, of which the Nāyakī was indeed the crown jewel. But the Nāyakī was adamant and retorted that she would not be led away by His guiles any more and that He would rather + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நம்பி! பூர்ணனான ஸ்வாமி!; போயிருந்து எங்களை விட்டுப் போயிருந்து; நின் புள்ளுவம் உன் பொய்ப் பேச்சை; அறியாதவர்க்கு அறியாதவர்க்கு; உரை சொல்லுவாய்; இருங்கனியும் கோவைக்கனி போன்ற; நின் செய்ய வாய் உனது சிவந்த அதரமும்; கண்களும் கண்களும் இப்போது; விபரீதம் இந் நாள் தீமையை பயப்பனவாம்; மா இருங் கடலை ஆழமான பெரிய கடலை; கடைந்த கடைந்த; பெருமானாலே பெருமானாலே; இத்திருவருள் இப்படிப்பட்ட அருளை; பெறுவார் பெற்றிருப்பவர்களான; வேய் இருந் தடம் மூங்கில் போன்று பருத்த நெடிய; தோளினார் தோள்களைப் படைத்த பெண்கள்; எவர்கொல்? யாரோ?
pŏy leaving (from our proximity); irundhu staying (in proximity of your dear ones); nin your; pul̤l̤uvam mischief; aṛiyādhavarkku those who don-t know; urai tell (these mischievous words);; nin your; seyya reddish; vāy lips; iru best; kaniyum fruit; kaṇgal̤um eyes (which are naturally having the tendency to finish others); innāl̤ nowadays; viparīdham are causing pain.; deep; iru vast; kadalai ocean; kadaindha churned; perumānālĕ by him who has wondrous abilities; ith thiruvarul̤ the mercy which makes his heart go craśy and praise; peṛuvār those who attain; vĕy like bamboo shoots; iru well rounded; thada tall; thŏl̤inār those who are having shoulders; yavar kol who?; ĕzhulagum all worlds; uṇdu consuming them (to keep them in his small stomach)

TVM 6.2.4

3357 ஆலினீளிலையேழுலகமுண்டு அன்றுநீகிடந்தாய் * உன் மாயங்கள்
மேலைவானவருமறியார் இனியெம்பரமே? *
வேலினேர்தடங்கண்ணினார் விளையாடுசூழலைச்சூழவே நின்று *
காலிமேய்க்கவல்லாய்! எம்மைநீகழறேலே.
3357 ஆலின் நீள் இலை ஏழ் உலகும் உண்டு * அன்று நீ கிடந்தாய் * உன் மாயங்கள்
மேலை வானவரும் அறியார் * இனி எம் பரமே? **
வேலின் நேர் தடம் கண்ணினார் * விளையாடு சூழலைச் சூழவே நின்று *
காலி மேய்க்க வல்லாய்! * எம்மை நீ கழறேலே (4)
3357 āliṉ nīl̤ ilai ezh ulakum uṇṭu * aṉṟu nī kiṭantāy * uṉ māyaṅkal̤
melai vāṉavarum aṟiyār * iṉi ĕm parame? **
veliṉ ner taṭam kaṇṇiṉār * vil̤aiyāṭu cūzhalaic cūzhave niṉṟu *
kāli meykka vallāy! * ĕmmai nī kazhaṟele (4)

Ragam

Shankarābharaṇa / சங்கராபரண

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

Are You not the One who once rested on a tender fig leaf, holding all the worlds within Your stomach? Your extraordinary deeds are beyond comprehension. Even the Nithyasuris cannot fully understand. Oh, Lord, tending to cows near maidens with eyes like spears, do not tempt us with falsehoods any longer.

Explanatory Notes

The Lord refuted the Nāyakī’s allegation of hollowness and insincerity and put it back on her and her mates, saying that He was absolutely forthright and straightforward and it was only they that were full of viles. The Nāyakī was, however, quick to point out the incompatibility of His reposing on a tender fig-leaf afloat, holding, as a tender young infant, all the worlds + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஏழ் உலகும் பிரளயத்திலே ஏழ் உலகும்; உண்டு உண்டு வயிற்றிலே வைத்துக் காத்து; ஆலி நீள் இலை ஆலமரத்தின் இளந்தளிரிலே; அன்று நீ கிடந்தாய் முன்பு கிடந்தவனல்லவோ நீ?; உன் மாயங்கள் உன் மாயச் செயல்களை; மேலை வானவரும் நித்யஸூரிகளும்; அறியார் அறியமாட்டார்கள்; இனி எம் பரமே? இனி எங்களால் அறியப்போமோ?; வேலின் நேர் தடம் வேலை ஒத்த விசாலமான; கண்ணினார் கண்களை உடைய பெண்கள்; விளையாடு விளையாடுகின்ற; சூழலை இடங்களை; சூழவே நின்று சூழ்ந்து கொண்டு நின்று; காலி மேய்க்க பசுக்களை மேய்க்க; வல்லாய்! வல்லவனே!; எம்மை நீ எங்களிடம்; கழறேலே பொய்கள் சொல்ல வேண்டாம்
ālin the peepal-s (which makes one wonder -where did this spring from-); nīl̤ stretched (having blossomed); ilai on the leaf; anṛu on that day (when all worlds were not present due to the total deluge); you (who has childishness of not knowing that you may slip and fall into the deluge); kidandhāy did you not lie down without any worries!; un your; māyangal̤ mischievous acts; mĕlai those who are without any contact with materialistic aspects; vānavarum nithyasūris (permanent residents of paramapadham); aṛiyār will not know (as they let you go and seek out for butter as said in thiruviruththam 21 -ŏr māyaiyināl īttiya veṇṇey thoduvuṇṇap pŏndhu-);; ini now; em to speak about (this); paramĕ is it possible?; vĕlin nĕr destroying people like a spear; thadam vast; kaṇinār those who are having eyes; vil̤aiyādu playing; sūzhalai sand hill; sūzha surrounding; ninṛĕ standing there; kāli cattle; mĕykka vallāy aren-t you greatly skilled to accomplish the impossible tasks such as tending the cows to their stomach-s full satisfaction?; emmai we who know your mischief; you; kazhaṛĕl don-t try to fool us (by saying -why are you blaming me for telling lies, when ī had gone to tend the cattle?-); nambī (as said in -poy nambi #(complete in lies)) you who are complete (in lies)!; kazhaṛĕl don-t argue with me (saying -why are you calling me a liar?-);

TVM 6.2.5

3358 கழறேல்நம்பீ! உன்கைதவம்மண்ணும்விண்ணும் நன்கறியும் * திண்சக்கர
நிழறுதொல்படையாய்! உனக்கொன்றுணர்த்துவன்நான் *
மழறுதேன்மொழியார்கள்நின்னருள்சூடுவார் மனம்வாடிநிற்க * எம்
குழறுபூவையோடும் கிளியோடும்குழகேலே.
3358 கழறேல் நம்பீ ! * உன் கைதவம் மண்ணும் விண்ணும் நன்கு அறியும் * திண் சக்கர
நிழறு தொல் படையாய் * உனக்கு ஒன்று உணர்த்துவன் நான் **
மழறு தேன் மொழியார்கள் நின் அருள் சூடுவார் மனம் வாடி நிற்க * எம்
குழறு பூவையொடும் * கிளியோடும் குழகேலே (5)
3358 kazhaṟel nampī ! * uṉ kaitavam maṇṇum viṇṇum naṉku aṟiyum * tiṇ cakkara
nizhaṟu tŏl paṭaiyāy * uṉakku ŏṉṟu uṇarttuvaṉ nāṉ **
mazhaṟu teṉ mŏzhiyārkal̤ niṉ arul̤ cūṭuvār maṉam vāṭi niṟka * ĕm
kuzhaṟu pūvaiyŏṭum * kil̤iyoṭum kuzhakele (5)

Ragam

Shankarābharaṇa / சங்கராபரண

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

Oh, Sire, do not speak such insincere words to us. Your deceitful ways are known throughout the worlds. You, the wielder of the ancient and powerful discus! Let me remind You that You should refrain from playing with the singing Pūvai birds and parrots here, lest You should harm the hearts of Your sweet-tongued favorites.

Explanatory Notes

The Lord suggests that they should seek arbitration to prove that He is the damned liar, they are dubbing Him to be. The Nāyakī, however, rules out the necessity for such a course for His stratagems are too well known, both on Earth and in spiritual world. Did He not take advantage of the screen raised by the smoke from the incense burnt by the denizens in spiritual world + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நம்பீ! ஸ்வாமியே!; கழறேல் மேலிட்டு வார்த்தை பேசவேண்டாம்; உன் கைதவம் உன் கபடங்களை; மண்ணும் மண்ணுலகத்தவரும்; விண்ணும் விண்ணுலகத்தவரும்; நன்கு அறியும் நன்கு அறிவார்கள்; திண் சக்கர திண்மை பொருந்திய; நிழறு தொல் ஒளி பொருந்திய; படையாய்! சக்கரப்படை உடையவனே!; உனக்கு நான் உனக்கு நான்; ஒன்று உணர்த்துவன் ஒன்று உணர்த்த விரும்புகிறேன்; நின் அருள்சூடுவார் உன் அருளைப் பெற்றவர்களும்; மழறு தேன் மழலைத் தேன்; மொழியார்கள் மொழியார்களுமான பெண்கள்; மனம் வாடி நிற்க மனம் வாடி நிற்க; எம் குழறு பேசத்தெரியாத எங்கள்; பூவையோடும் பூவைப் பறவையோடும்; கிளியோடும் கிளியோடும்; குழகேலே சேர்ந்து விளையாடாதே என்கிறாள்
thiṇ firm (being a great support for falsely transforming day into night); chakkaram divine disc; nizhaṛu emitting radiance; thol padaiyāy oh one who is having distinguished weapon!; un your; kaithavam mischievous acts; maṇṇum (during the mahābhāratha battle times) the princely people who gathered on earth; viṇṇum dhĕvas, the residents of higher worlds, without any distinction; nangu clearly; aṛiyum know;; unakku for you; nān ī; onṛu one thing; uṇarththuvan inform you, listen;; nin your; arul̤ mercy; sūduvār born to behold; mazhaṛu very fresh; thĕn honey like; mozhiyārgal̤ those with voice; manam heart; vādi to wither; niṛka to stand; em ours (instead of theirs); kuzhaṛu (unlike them who speak clearly to you) speaking incohesively; pūvaiyodum with maina; kil̤iyŏdum and parrot; kuzhagĕl don-t play joyfully.; kuzhagi engal̤ kuzhamaṇan koṇdu picking up our doll which is used in our play; kŏyinmai seydhu feeling superior due to the pleasure of having got hold of it

TVM 6.2.6

3359 குழகியெங்கள்குழமணன்கொண்டு கோயின்மைசெய்து கன்மமொன்றில்லை *
பழகியாமிருப்போம் பரமேஇத்திருவருள்கள்? *
அழகியாரிவ்வுலகமூன்றுக்கும் தேவிமைதகுவார்பலருளர் *
கழகமேறேல்நம்பீ! உனக்குமிளைதேகன்மமே.
3359 குழகி எங்கள் குழமணன்கொண்டு * கோயின்மை செய்து கன்மம் ஒன்று இல்லை *
பழகி யாம் இருப்போம் * பரமே இத் திரு அருள்கள்? **
அழகியார் இவ் உலகம் மூன்றுக்கும் * தேவிமை ஈதகுவார் பலர் உளர் *
கழகம் ஏறேல் நம்பீ * உனக்கும் இளைதே கன்மமே (6)
3359 kuzhaki ĕṅkal̤ kuzhamaṇaṉkŏṇṭu * koyiṉmai cĕytu kaṉmam ŏṉṟu illai *
pazhaki yām iruppom * parame it tiru arul̤kal̤? **
azhakiyār iv ulakam mūṉṟukkum * tevimai ītakuvār palar ul̤ar *
kazhakam eṟel nampī * uṉakkum il̤aite kaṉmame (6)

Ragam

Shankarābharaṇa / சங்கராபரண

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

Oh, Sire, it's futile to trample over us, playing with our dolls. We are well aware of who You are from our long association with You. We are not targets for Your romantic gestures; indeed, there are others suitable to be Your companions, surpassing in beauty across all realms. You shall not coerce Your way into our circle. Your actions may even bring shame upon Yourself and cause You to lower Your head.

Explanatory Notes

Sensing the pulse of the Nāyakī, even the birds flew off' and now, only the dolls remain on the scene. The Lord starts fondling the dolls but the Nāyakī prods Him, saying that all this behaviour will not help Him. The Lord, however, swears that He is hers, contemplating her all the time. This draws forth a sharp rebuff from the Nayaki that she has known enough of Him and + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நம்பீ! ஸ்வாமி!; குழகி எங்கள் விளையாடி எங்களைக் கவர்வதற்காக; குழமணன் எங்கள் மரப்பாவைகளை; கொண்டு எடுத்துக் கொண்டு; கோயின்மை செய்து மேன்மை தோன்றப் பேசுவதனால்; கன்மம் ஒன்று இல்லை ஒரு பயனும் இல்லை; பழகி யாம் ஏற்கனவே நாங்கள் பழகி; இருப்போம் இருக்கிறோம்; பரமே நாங்கள் ஏமாறமாட்டோம்; இத் திரு நீ காட்டும்; அருள்கள் அருள் பொய் என்பதை அறிவோம்; இவ் உலகம் மூன்றுக்கும் இம்மூவுலகத்தினுள்ளும்; அழகியார் அழகிற் சிறந்தவர்களாயும்; தேவிமை உமக்குத் தேவிகளாயிருக்க; தகுவார் தகுந்தவர்கள்; பலர் உளர் பலர் உள்ளனர்; கழகம் ஏறேல் எங்கள் கூட்டத்தில் வரவேண்டாம்; உனக்கும் உனக்கும்; கன்மமே இந்தச் செயல்கள்; இளைதே அல்பமானதே
onṛu any; kanmam use; illai not there;; yām we; pazhagi previously used; iruppŏm to it;; i these; thiru great; arul̤gal̤ mercies; paramĕ we cannot handle;; azhagiyār having beauty (fitting to receive your mercy); i (target of your supremacy,) these; ulagu mūnṛukkum for the three worlds; dhĕvimai to be crowned along with you; thaguvār deserving; palar many (as said in -dhĕvyas sahasram-); ul̤ar are present;; nambī aren-t they fitting for you who are complete in all qualities!; kazhagam in our assembly; ĕṛĕl do not mingle;; unakkum for you (who have the nature of only harming others); kanmam this act; il̤aidhu childish.; engal̤ our; kaiyil in the hand

TVM 6.2.7

3360 கன்மமன்றெங்கள்கையிற்பாவைபறிப்பது கடல் ஞாலமுண்டிட்ட *
நின்மலா! நெடியாய்! உனக்கேலும்பிழைபிழையே *
வன்மமேசொல்லியெம்மைநீவிளையாடுதி அதுகேட்கில் என்னைமார் *
தன்மபாவமென்னார் ஒருநான்றுதடிபிணக்கே.
3360 கன்மம் அன்று எங்கள் கையில் பாவை பறிப்பது * கடல் ஞாலம் உண்டிட்ட *
நின்மலா நெடியாய்! * உனக்கேலும் பிழை பிழையே **
வன்மமே சொல்லி எம்மை நீ விளையாடுதி * அது கேட்கில் என் ஐம்மார் *
தன்ம பாவம் என்னார் * ஒரு நான்று தடி பிணக்கே (7)
3360 kaṉmam aṉṟu ĕṅkal̤ kaiyil pāvai paṟippatu * kaṭal ñālam uṇṭiṭṭa *
niṉmalā nĕṭiyāy! * uṉakkelum pizhai pizhaiye **
vaṉmame cŏlli ĕmmai nī vil̤aiyāṭuti * atu keṭkil ĕṉ aimmār *
taṉma pāvam ĕṉṉār * ŏru nāṉṟu taṭi piṇakke (7)

Ragam

Shankarābharaṇa / சங்கராபரண

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

Oh, immaculate Lord, who once swallowed the boundless worlds, it is not fitting for You, oh great One, to snatch our playthings from our hands. A mistake remains a mistake even if committed by You. The words You whisper, we dare not repeat, and yet You flirt with us. Surely, when our brethren come to know, they will feel hurt. They may not care whether it's good or bad, and they might retaliate against You.

Explanatory Notes

(i) Finding the Gopīs terribly vexed with Him, Śrī Kṛṣṇa bade good-bye to them, wishing them well and told them that He would, however, be taking with Him, His playthings. But the Gopīs lost no time in picking up those pieces, with a view to detaining Him and prolonging the controversy. This gave Śrī Kṛṣṇa the golden opportunity He was looking for, to come in physical + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கடல் ஞாலம் கடல் சூழ்ந்த உலகங்களை; உண்டிட்ட உண்டு காப்பாற்றிய; நின்மலா! குற்றமற்றவனே!; நெடியாய்! பெரியோனே!; எங்கள் கையில் எங்கள் கையிலிருக்கும்; பாவை பறிப்பது பாவைகளைப் பறிப்பது; கன்மம் அன்று செய்யத் தகுந்த செயலன்று; உனக்கேலும் நீயாக இருந்தாலும் உனக்கும்; பிழை பிழையே குற்றம் குற்றமேயாகும்; வன்மமே மர்மமான வார்த்தைகளை; சொல்லி எம்மை நீ சொல்லி எங்களுடன் நீ; விளையாடுதி விளையாடுகிறாய்; என் ஐம்மார் எங்கள் உடன் பிறந்தவர்கள்; அது கேட்கில் இவற்றைக் கேள்விப்பட்டார்களாகில்; தன்ம பாவம் நன்மை தீமை என்று கூட; என்னார் பார்க்க மாட்டார்கள்; ஒரு நான்று ஒரு நாள்; தடி பிணக்கே தடி எடுத்துக் கொண்டு வருவார்கள்
pāvai doll; pārippadhu touching and grabbing; kanmam apt acts; anṛu not;; kadal submerged in the causal ocean; gyālam world; uṇditta consumed and protected by placing in stomach; ninmalā ŏh one who is having radiance due to doing that as a great accomplishment!; nediyāy ŏh one who is having greatness (of letting them out and protecting them thinking -what ī have done is not sufficient-)!; unakkum even for you (who are having such greatness); pizhai mistake (of touching and grabbing the doll from us, the helpless girls); pizhaiyĕ is a disgrace;; you (who are great in this manner); vanmam (saying -ṣhall ī touch you? Who were you thinking before?-, reminded us about our previous union) secrets (which cannot be thought about or spoken about by us); emmai towards us; solli telling; vil̤aiyādudhi teasing playfully;; ennaimār our brothers; adhu kĕtkil if they hear that; thanmapāvam will not analyse whether it is right or wrong;; ennār will not prove; oru nānṛu one day they will come; thadi picking up a stick; piṇakku ām will engage in fight.; yāvarum yāvaiyum all chĕthanas (sentient beings) and achĕthanas (insentient entities); piṇakki mixing (at the time of deluge not to have name and form)

TVM 6.2.8

3361 பிணக்கியாவையும்யாவரும் பிழையாமல்பேதித்தும்பேதி யாதது * ஓர்
கணக்கில்கீர்த்திவெள்ளக் கதிர்ஞானமூர்த்தியினாய்! *
இணக்கியெம்மையெந்தோழிமார் விளையாடப்போது மினென்னப்போந்தோமை *
உணக்கிநீவளைத்தால் என்சொல்லாருகவாதவரே?
3361 பிணக்கி யாவையும் யாவரும் * பிழையாமல் பேதித்தும் பேதியாதது ஓர் *
கணக்கு இல் கீர்த்தி வெள்ளக் * கதிர் ஞான மூர்த்தியினாய்
இணக்கி எம்மை எம் தோழிமார் ** விளையாடப் போதுமின் என்னப் போந்தோமை *
உணக்கி நீ வளைத்தால் * என் சொல்லார் உகவாதவரே? (8)
3361 piṇakki yāvaiyum yāvarum * pizhaiyāmal petittum petiyātatu or *
kaṇakku il kīrtti vĕl̤l̤ak * katir ñāṉa mūrttiyiṉāy
iṇakki ĕmmai ĕm tozhimār ** vil̤aiyāṭap potumiṉ ĕṉṉap pontomai *
uṇakki nī val̤aittāl * ĕṉ cŏllār ukavātavare? (8)

Ragam

Shankarābharaṇa / சங்கராபரண

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

Oh, Sire, you embody all radiant knowledge. You keep all sentient and non-sentient things without name and form during dissolution and sort them out at creation, placing each species back in its rightful sphere, clear and coherent. (We didn't expect You'd be here). Our companions brought us here to play. If You were to embrace us closely, what would the unfriendly say?

Explanatory Notes

When the Gopīs threatened to get Śrī Kṛṣṇa beaten, He took up the challenge and shouted at them. The Gopīs coolly told Him, they had known all about Him and there was no need for Him to make all that fuss. When called upon by Him to cite what exactly they had known about Him, they stated, as in the first four lines of this stanza. Śrī Kṛṣṇa then questioned them how, despite + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
யாவையும் அசேதனம்; யாவரும் சேதனம் ஆகிய அனைத்தையும்; பிணக்கி நாமரூப விபாகம் இல்லாதபடி சேர்த்து; பிழையாமல் ஸ்ருஷ்டியில் அவரவர் கர்மப்படி; பேதித்தும் பேதங்களைப் பண்ணியும்; பேதியாதது தோஷத்தால் ஸ்வரூபத்துக்குச் சேதம் வராதபடியும்; ஓர் கணக்கில் ஒப்பற்ற எல்லையில்லாத; கீர்த்தி கீர்த்தியை உடைய; வெள்ளக் கதிர் ஞான ஸங்கல்ப ஞானத்தையே; மூர்த்தியினாய்! திருமேனியாக உடையவனே!; எம் தோழிமார் எமது தோழிமார்கள்; இணக்கி எம்மை எம்மை இசைய வைத்து; விளையாட விளையாட; போதுமின்என்ன வாருங்கோள் என்றழைக்க; போந்தோமை நீ இங்கிருப்பது தெரியாமல் வந்த; உணக்கி எங்களைத் துவளச் செய்து; நீ வளைத்தால் நீ வளைத்துக் கொண்டால்; உகவாதவரே வேண்டாதார் என்னதான்; என் சொல்லார் சொல்ல மாட்டார்கள்
pizhaiyāmal without causing (any effect to karmas (deeds) of those chĕthanas); bĕdhiththum while causing differences in the form of dhĕva (celestials), manushya (humans), thiryak (animals), sthāvara (plants); bhĕdhiyādhadhu not to have the true nature impacted (due to the defects in those forms); ŏr unparallel; kaṇakku il unlimited; kīrththi vel̤l̤am having ocean of glories; kadhir in the form of rays (radiance); gyānam gyānam (knowledge) in the form of sankalpa (will); mūrththiyināy oh you who are having as form!; em belonging to the same category [as we] and having equal sorrow [as we]; thŏzhimār friends; emmai iṇakki convincing us; vil̤aiyāda #NAME?; pŏdhumin go-; enna as they told us, considering such playing as the reason; pŏndhŏmai us who came here (without knowing that you are here, just to play); uṇakki make us wither, being unable to even eat; you; val̤aiththāl block us; ugavādhavar those people who don-t like this; en what; sollār will they say?; ugavaiyāl due to the internal joy; nenjam heart

TVM 6.2.9

3362 உகவையால்நெஞ்சமுள்ளுருகி உன்தாமரைத்தடங்கண் விழிகளின் *
அகவலைப்படுப்பான் அழித்தாயுன்திருவடியால் *
தகவுசெய்திலைஎங்கள்சிற்றிலும் யாமடுசிறுசோறும்கண்டு * நின்
முகவொளிதிகழ முறுவல்செய்துநின்றிலையே.
3362 உகவையால் நெஞ்சம் உள் உருகி * உன் தாமரைத் தடம் கண் விழிகளின் *
அக வலைப் படுப்பான் * அழித்தாய் உன் திருவடியால் **
தகவு செய்திலை எங்கள் சிற்றிலும் * யாம் அடு சிறு சோறும் கண்டு * நின்
முக ஒளி திகழ * முறுவல் செய்து நின்றிலையே (9)
3362 ukavaiyāl nĕñcam ul̤ uruki * uṉ tāmarait taṭam kaṇ vizhikal̤iṉ *
aka valaip paṭuppāṉ * azhittāy uṉ tiruvaṭiyāl **
takavu cĕytilai ĕṅkal̤ ciṟṟilum * yām aṭu ciṟu coṟum kaṇṭu * niṉ
muka ŏl̤i tikazha * muṟuval cĕytu niṉṟilaiye (9)

Ragam

Shankarābharaṇa / சங்கராபரண

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

You could have smiled and watched with Your radiant face, the castles we built in our play and the food we cooked. But You destroyed them all; indeed, You have no heart. And all this just to ensnare us with the sweet gaze from Your large, lotus eyes, causing our hearts to melt away.

Explanatory Notes

In spite of His intercepting the Gopīs, they went their own way, playing games like building houses and cooking food. Śrī Kṛṣṇa, literally pining for their sweet glances, albeit by way of quarrelling with Him, kicked all those things out. Knowing His mind quite well, the Gopīs looked at Him squarely and addressed Him, as above. The inner (esoteric) meaning of this is: + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
உகவையால் உவகையால் மனம் மகிழ்ந்து; நெஞ்சம் உள் உருகி மனம் உருகும்படியாக; உன் தாமரை உன் தாமரை போன்ற; தடம் கண் பெரிய கண்களின்; விழிகளின் பார்வையின்; அகவலை வலைக்குள் நாங்கள்; படுப்பான் அகப்படுவதற்கு; எங்கள் சிற்றிலும் எங்கள் சிறிய மணல் வீட்டையும்; யாம் அடு சிறு சோறும் சமைக்கும் சோற்றையும்; முக ஒளி திகழ முகத்தில் ஒளி திகழும்படி; முறுவல் செய்து புன்முறுவல் செய்து கொண்டு; கண்டு உன் பார்த்துக் கொண்டிருக்க; நின்றிலையே நிற்பதைத் தவிர்த்து; உன் திருவடியால் உன் திருவடியால்; அழித்தாய் அழித்தாய் எங்கள் மீது; தகவு இரக்கம் கொண்டு நாங்கள்; செய்திலை உன்னை அநுபவிப்பதை; உன் திருவடியால் உன் திருவடியால் கெடுத்தாயே
ul̤ urugi melted; un your; thāmarai lotus like; thada broad; kaṇ eye-s; vizhigal̤ glance; valai in the net; agappaduppān to capture; engal̤ our; siṝilum sandcastle; yām we; adugiṛa heating; siṛu sŏṛum food; kaṇdu seeing; nin your; mugam in the divine face; ol̤i thigazha to have shining glow; muṛuval smile; seydhu doing; ninṛilai instead of standing and observing; un your; thiruvadiyāl with the divine feet; azhiththāy destroyed;; thagavu seydhilai you did this mercilessly.; ninṛu to remain firmly; ilangu shining

TVM 6.2.10

3363 நின்றிலங்குமுடியினாய்! இருபத்தோர்காலரசுகளைகட்ட *
வென்றிநீள்மழுவா! வியன்ஞாலம்முன்படைத்தாய் *
இன்றிவ்வாயர்குலத்தைவீடுய்யத்தோன்றிய கருமாணிக்கச்சுடர்! *
நின்றன்னால்நலிவேபடுவோம்என்றும் ஆய்ச்சியோமே.
3363 நின்று இலங்கு முடியினாய்! * இருபத்தோர் கால் அரசு களைகட்ட *
வென்றி நீள் மழுவா! * வியன் ஞாலம் முன் படைத்தாய்! **
இன்று இவ் ஆயர் குலத்தை வீடு உய்யத் தோன்றிய * கருமாணிக்கச் சுடர் *
நின்தன்னால் நலிவே படுவோம் என்றும் * ஆய்ச்சியோமே (10)
3363 niṉṟu ilaṅku muṭiyiṉāy! * irupattor kāl aracu kal̤aikaṭṭa *
vĕṉṟi nīl̤ mazhuvā! * viyaṉ ñālam muṉ paṭaittāy! **
iṉṟu iv āyar kulattai vīṭu uyyat toṉṟiya * karumāṇikkac cuṭar *
niṉtaṉṉāl nalive paṭuvom ĕṉṟum * āycciyome (10)

Ragam

Shankarābharaṇa / சங்கராபரண

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

Oh, Sire of sapphire hue, adorned with a grand crown. With Your triumphant axe, You uprooted kings for generations, once creating the vast universe, and now here to redeem this shepherd clan. But we shepherdesses are forever tormented by You.

Explanatory Notes

The rancour of the overzealous Gopīs would obviously not last long, as it is but a temporary phase, an interim facet of connubial relationship, culminating in the reunion of the lover and the beloveds. Śrī Kṛṣṇa didn’t merely kick the houses etc, put up by the Gopīs during play, but kicked their rancour out and made them gaze at His exquisite Form, from the lotus feet + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நின்று இலங்கு நிலைநின்று விளங்கும்; முடியினாய்! கிரீடத்தை உடையவனே!; இருபத்து ஓர் கால் இருபத்தொரு தலைமுறை; அரசு அரசர்களை; களை கட்ட குலத்தோடு வேர் அறுத்த; வென்றி வெற்றியையுடைய; நீள் மழுவா! நீண்ட மழுவை உடையவனே!; முன் வியன் முன்பு விசாலமான; ஞாலம் உலகத்தை; படைத்தாய் படைத்தாய்; இன்று இவ் ஆயர் இப்போது இந்த ஆயர்; குலத்தை குலத்தை; வீடு உய்ய உய்வடையச் செய்ய; தோன்றிய கண்ணனாகத் தோன்றிய; கருமாணிக்கச்சுடர் கருமாணிக்கச் சுடரே!; என்றும் ஆய்ச்சியோமே ஆய்ச்சியர்களாகிய நாங்கள்; நின் தன்னால் உன்னால் என்றும்; நலிவே படுவோம் துன்பமே படுகிறோம்
mudiyināy wearing divine crown; irubaththŏrkāl twenty one generations; arasu kings; kal̤ai katta destroyed; venṛi victorious; nīl̤ big; mazhuvāl one who is having the axe!; viyal vast; gyālam world; mun during srushti (creation); padaiththāy one who created; inṛu now as well; i this; āyar kulam cowherd clan; vīdu with their families; uyya to uplift; thŏnṛiya one who appeared; karu māṇikkach chudar oh one who is having the form which is radiant like blue gem!; nin thannāl by you (since you are the protector in all ways, you being our lord who eliminated our anger, and brought us back to life, and having relationship with us and are having an enjoyable form); āychchiyŏm we who are born in this ignorant cowherd clan; enṛum always; nalivu suffering; paduvŏmĕ will go through- she is recollecting and telling about the previous sufferings after being pacified.; āychchi āgiya born in cowherd clan; annaiyāl by mother yaṣŏdhā

TVM 6.2.11

3364 ஆய்ச்சியாகியவன்னையால் அன்றுவெண்ணெய் வார்த்தையுள் * சீற்றமுண்டழு
கூத்தவப்பன்தன்னைக் குருகூர்ச்சடகோபன் *
ஏத்தியதமிழ்மாலை ஆயிரத்துள்இவையுமோர்பத்திசை யொடும் *
நாத்தன்னால்நவிலவுரைப்பார்க்கு இல்லைநல்குரவே. (2)
3364 ## ஆய்ச்சி ஆகிய அன்னையால் * அன்று வெண்ணெய் வார்த்தையுள் சீற்ற முண்டு அழு
கூத்த அப்பன் தன்னை * குருகூர்ச் சடகோபன் **
ஏத்திய தமிழ் மாலை * ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து இசை யொடும் *
நாத்தன்னால் நவில உரைப்பார்க்கு * இல்லை நல்குரவே (11)
3364 ## āycci ākiya aṉṉaiyāl * aṉṟu vĕṇṇĕy vārttaiyul̤ cīṟṟa muṇṭu azhu
kūtta appaṉ taṉṉai * kurukūrc caṭakopaṉ **
ettiya tamizh mālai * āyirattul̤ ivaiyum or pattu icai yŏṭum *
nāttaṉṉāl navila uraippārkku * illai nalkurave (11)

Ragam

Shankarābharaṇa / சங்கராபரண

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

Those who melodiously chant these ten verses out of the thousand Tamil songs of Caṭakōpaṉ of Kurukūr, praising the Lord, who cried bitterly as child Kṛṣṇa when accused of stealing butter, to His mother, will never endure poverty (of God-love).

Explanatory Notes

(i) Here is a splendid reference to one of the many infant sports of the Lord. The shepherdesses of Bṛndāvaṉ complained to Yaśodha that all their butter had been stolen by some one. Just on hearing this g neral complaint without any mention about Him in particular, child Kṛṣṇa cried immediately, as if to plead that He was not the culprit. Thus, by His own unbidden cry, + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஆய்ச்சி ஆகிய ஆய்ச்சி ஆகிய; அன்னையால் யசோதையால்; அன்று வெண்ணெய் அன்று வெண்ணெய்களவு; வார்த்தையுள் ஸம்பந்தமான பேச்சு வந்த போது; சீற்ற முண்டு கோபிக்கப்பட்டு; அழு கூத்த அழுது கூத்தாடிய; அப்பன் தன்னை இந்தக் கண்ணனைக் குறித்து; குருகூர் திருக்குருகூரில் அவதரித்த; சடகோபன் நம்மாழ்வார்; ஏத்திய அருளிச் செய்த; தமிழ் மாலை தமிழ் மாலையான; ஆயிரத்துள் ஆயிரம் பாசுரங்களில்; இவையும் ஓர் பத்து இந்தப் பத்துப் பாசுரங்களையும்; இசையோடும் இசையோடு; நாத்தன்னால் நாவினால் மனமுவந்து; நவில விருப்பத்தோடு; உரைப்பார்க்கு ஓத வல்லார்க்கு; இல்லை வறுமை தீருவதுடன்; நல்குரவே பகவதநுபவமும் கிட்டும்
anṛu then; veṇṇey vārththaiyul̤ when the news about butter theft came about; sīṝamuṇdu angered upon; azhu cried and performed sit-ups [as punishment]; kūththan one who is having joyful pastime; appan thannai one who is the benefactor for the world; kurugūrch chatakŏpan nammāzhvār; ĕththiya mercifully spoke in the form of praises; thamizh mālai in the form of a garland in dhrāvida (thamizh) language; āyiraththul̤l̤um among the thousand pāsurams; ivai these (distinguished pāsurams which turned the unfavourable to be favourable); ŏr paththum ten pāsurams (decad); isaiyodum with tune; nāththannāl as a benefit for the tongue; navila well; uraippārkku for those who recite; nalguravu the poverty of bhagavath alābham (not having bhagavān); illai is not there.; nalguravum the poverty of having contracted forms; selvum the wealth of having expanded forms