O Kaṇṇa! Do Not Play with Our Myna and Parrot.
கண்ணா! எம்பூவையோடும் கிளியோடும் விளையாடாதே
3358 கழறேல்நம்பீ! உன்கைதவம்மண்ணும்விண்ணும் நன்கறியும் * திண்சக்கர
நிழறுதொல்படையாய்! உனக்கொன்றுணர்த்துவன்நான் *
மழறுதேன்மொழியார்கள்நின்னருள்சூடுவார் மனம்வாடிநிற்க * எம்
குழறுபூவையோடும் கிளியோடும்குழகேலே.