Your browser does not support the audio element.
audio
3365 நல்குரவும்செல்வும் நரகும்சுவர்க்கமுமாய் *
வெல்பகையும்நட்பும் விடமும்அமுதமுமாய் *
பல்வகையும்பரந்தபெரு மானென்னையாள்வானை *
செல்வம்மல்குகுடித் திருவிண்ணகர்க்கண்டேனே. (2)
3366 கண்டவின்பம்துன்பம் கலக்கங்களும்தேற்றமுமாய் *
தண்டமும்தண்மையும் தழலும்நிழலுமாய் *
கண்டுகோள்தற்கரிய பெருமானென்னையாள்வானூர் *
தெண்டிரைப்புனல்சூழ் திருவிண்ணகர்நன்னகரே.
3367 நகரமும்நாடுகளும் ஞானமும்மூடமுமாய் *
நிகரில்சூழ்சுடராயிருளாய் நிலனாய்விசும்பாய் *
சிகரமாடங்கள்சூழ் திருவிண்ணகர்ச்சேர்ந்தபிரான் *
புகர்கொள்கீர்த்தியல்லாலில்லை யாவர்க்கும்புண்ணியமே.
3368 புண்ணியம்பாவம் புணர்ச்சிபிரிவென்றிவையாய்
எண்ணமாய்மறப்பாய் உண்மையாயின்மயாயல்லனாய் *
திண்ணமாடங்கள்சூழ் திருவிண்ணகர்சேர்ந்தபிரான் *
கண்ணனின்னருளே கண்டுகொண்மின்கள்கைதவமே.
3369 கைதவம்செம்மை கருமைவெளுமையுமாய் *
மெய்பொய் இளமைமுதுமை புதுமைபழமையுமாய் *
செய்ததிண்மதிள்சூழ் திருவிண்ணகர்சேர்ந்தபிரான் *
பெய்தகாவுகண்டீர் பெருந்தேவுடைமூவுலகே.
3370 மூவுலகங்களுமாயல்லனாய் உகப்பாய்முனிவாய் *
பூவில்வாழ்மகளாய்த்தவ்வையாய்ப் புகழாய்ப்பழியாய் *
தேவர்மேவித்தொழும் திருவிண்ணகர்சேர்ந்தபிரான் *
பாவியேன்மனத்தே உறைகின்றபரஞ்சுடரே.
3371 பரஞ்சுடருடம்பாய் அழுக்குப்பதித்தவுடம்பாய் *
கரந்தும்தோன்றியும்நின்றும் கைதவங்கள்செய்தும் * விண்ணோர்
சிரங்களால்வணங்கும் திருவிண்ணகர்சேர்ந்தபிரான் *
வரங்கொள்பாதமல்லாலில்லை யாவர்க்கும்வன்சரணே.
3372 வன்சரண்சுரர்க்காய் அசுரர்க்குவெங்கூற்றமுமாய் *
தன்சரண்நிழற்கீழ் உலகம்வைத்தும்வையாதும் *
தென்சரண்திசைக்குத் திருவிண்ணகர்சேர்ந்தபிரான் *
என்சரணென்கண்ணன் என்னையாளுடையென்னப்பனே.
3373 என்னப்பனெனக்காயிகுளாய் என்னைப்பெற்றவளாய் *
பொன்னப்பன்மணியப்பன்முத்தப்பன் என்னப்பனுமாய் *
மின்னப்பொன்மதிள்சூழ் திருவிண்ணகர்சேர்ந்தவப்பன் *
தன்னொப்பாரில்லப்பன் தந்தனன்தனதாள்நிழலே.
3374 நிழல்வெய்யில்சிறுமைபெருமை குறுமைநெடுமையுமாய் *
சுழல்வனநிற்பன மற்றுமாயவையல்லனுமாய் *
மழலைவாய்வண்டுவாழ் திருவிண்ணகர்மன்னுபிரான் *
கழல்களன்றி மற்றோர்களைகணிலம்காண்மின்களே.
3375 காண்மின்களுலகீர்! என்று கண்முகப்பேநிமிர்ந்த *
தாளிணையன்தன்னைக் குருகூர்ச்சடகோபன்சொன்ன *
ஆணையாயிரத்துத் திருவிண்ணகர்ப்பத்தும்வல்லார் *
கோணையின்றிவிண்ணோர்க்கு என்றுமாவர்குரவர்களே. (2)