Chapter 3

Joy upon uniting with the Lord - (கோவை வாயாள்)

எம்பெருமானது சேர்க்கையால் பெற்ற இன்பம்
As per parAnkusa nAyaki’s wishes, Bhagavān expressing His immense love and affection, joins her. Āzhvār focuses on His auspicious trait, pranayithva (fake quarrel between couples) in these hymns.
பராங்குச நாயகி ஆசைப்பட்டபடியே பகவான் அவரோடு வந்து கலந்து தன் பேரன்பை வெளியிட்டான். ஆழ்வார் அவனது பிரணயித்வ குணத்தை இப்பகுதியில் புலப்படுத்துகிறார்.
Verses: 3145 to 3155
Grammar: Aṟuchīrk Kaḻinediladi Āsiriya Viruththam / அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Pan: தக்கேசி
Timing: 10.49 - 12.00 PM
Recital benefits: will stay in this world happily and rule heaven
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

TVM 4.3.1

3145 கோவைவாயாள்பொருட்டு ஏற்றினெருத்தமிறுத்தாய் * மதிளிலங்கைக்
கோவைவீயச்சிலைகுனித்தாய்! குலநல்யானைமருப்பொசித்தாய்! *
பூவைவீயாநீர்தூவிப் போதால்வணங்கேனேலும் * நின்
பூவைவீயாமேனிக்குப் பூசுஞ்சாந்து என்னெஞ்சமே. (2)
3145 ## கோவை வாயாள் பொருட்டு *
ஏற்றின் எருத்தம் இறுத்தாய் * மதிள் இலங்கைக்
கோவை வீயச் சிலை குனித்தாய் *
குல நல் யானை மருப்பு ஒசித்தாய் **
பூவை வீயா நீர் தூவிப் *
போதால் வணங்கேனேலும் * நின்
பூவை வீயாம் மேனிக்குப் *
பூசும் சாந்து என் நெஞ்சமே (1)
3145 ## kovai vāyāl̤ pŏruṭṭu *
eṟṟiṉ ĕruttam iṟuttāy * matil̤ ilaṅkaik
kovai vīyac cilai kuṉittāy *
kula nal yāṉai maruppu ŏcittāy **
pūvai vīyā nīr tūvip *
potāl vaṇaṅkeṉelum * niṉ
pūvai vīyām meṉikkup *
pūcum cāntu ĕṉ nĕñcame (1)

Ragam

Ārabi / ஆரபி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

Oh, Lord, You broke the hump of the bulls truly and secured Nappiṉṉai, the red-lipped beauty. The king of Laṅkā, with ramparts high, You killed with Your infallible bow, and out You pulled the tusk of that majestic elephant and slew it. At these crucial moments, I served You not in a manner fit with flowers fine and water pure, and yet my mind is the sandal paste fit for Your lovely body of lily tint.

Explanatory Notes

(i) The Āzhvār regrets that he wasn’t keeping himself close to the Lord, when He tamed the unruly bulls for winning the hand of Nappiṉṉai, the charming bride, when he slew Rāvaṇa, the king of Laṅkā and killed Kuvalayāpīḍa, the high class elephant, set on Him by the treacherous Kaṃsa, by crushing its tusks. Had he (Āzhvār) been by the side of the Lord on those occasions, + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கோவை கோவைக்கனிபோல் சிவந்த; வாயாள் அதரத்தையுடைய நப்பின்னையின்; பொருட்டு பொருட்டு; ஏற்றின் எருத்தம் எருதுகளின் பிடரியை; இறுத்தாய்! முறித்தவனே!; மதிள் இலங்கை மதிள் சூழ்ந்த இலங்கைக்கு; கோவை அரசனான ராவணன்; வீய முடியும்படியாக; சிலை குனித்தாய்! வில்லை வளைத்தவனே!; குல நல் யானை நல்ல ஜாதி யானையான; மருப்பு குவலயாபீடத்தின் கொம்பை; ஒசித்தாய்! முறித்தவனே!; பூவை வீயா பூக்களை விட்டு அகலாத; நீர் தூவி தண்ணீரைத் தூவி; போதால் உரிய காலங்களில்; வணங்கேனேலும் உன்னைப் பணிந்திலேனாகிலும்; நின் பூவை உன்னுடைய காயாம்பூ; வீயாம் மேனிக்கு போன்ற திருமேனிக்கு; பூசும் சாந்து பூசும் சந்தனம்; என் நெஞ்சமே என் நெஞ்சமே ஆகும்
vāyāl̤ poruttu for nappinnai who has lips; ĕṝin bulls-; eruththam nape (the back of the neck); iṛuththāy one who broke; madhil̤ having forts; ilangai for lankā; kŏvai rāvaṇa who is the kŏ (ruler); vīya to finish; silai bow; kuniththāy one who drew; kulam having high birth (best breed); nal having best abilities; yānai kuvalayāpīda-s; maruppu tusk; osiththāy ŏh one who (effortlessly) broke!; pūvai flowers; vīyā inseparable from; nīr water; thūvi offering unto you in a disorderly manner (due to love); pŏdhu at those times; vaṇangĕnĕlum though ī did not worship; nin your; pūvai vīyām having the complexion of pūvaippū (a dark-blue coloured flower); mĕnikku for the divine form; pūsum qualified to apply; sāndhu angarāga (scented cosmetic); en nenjamĕ let it be my heart!; īsan being natural controller

TVM 4.3.2

3146 பூசுஞ்சாந்துஎன்னெஞ்சமே புனையுங்கண்ணிஎனதுடைய *
வாசகம்செய்மாலையே வான்பட்டாடையும்அஃதே *
தேசமானவணிகலனும் என்கைகூப்புச்செய்கையே *
ஈசன்ஞாலமுண்டுமிழ்ந்த எந்தையேகமூர்த்திக்கே.
3146 பூசும் சாந்து என் நெஞ்சமே *
புனையும் கண்ணி எனதுடைய *
வாசகம் செய் மாலையே *
வான் பட்டு ஆடையும் அஃதே **
தேசம் ஆன அணிகலனும் *
என் கைகூப்புச் செய்கையே *
ஈசன் ஞாலம் உண்டு உமிழ்ந்த *
எந்தை ஏக மூர்த்திக்கே (2)
3146 pūcum cāntu ĕṉ nĕñcame *
puṉaiyum kaṇṇi ĕṉatuṭaiya *
vācakam cĕy mālaiye *
vāṉ paṭṭu āṭaiyum aḵte **
tecam āṉa aṇikalaṉum *
ĕṉ kaikūppuc cĕykaiye *
īcaṉ ñālam uṇṭu umizhnta *
ĕntai eka mūrttikke (2)

Ragam

Ārabi / ஆரபி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

My devotion knows no bounds, as I offer my mind as the fragrant sandalwood paste, symbolizing purity and reverence, to adorn the Supreme Lord. He, who encompasses all existence, once ingested and then released the entire universe, demonstrating His unfathomable power. My hymns, crafted with devotion, serve as garlands adorning His divine form, while my heartfelt salutations, expressed with hands clasped in reverence, bestow upon Him the brilliance of precious jewels, symbolizing my utmost respect and adoration.

Explanatory Notes

The Āzhvār keeps meditating on the Lord’s resplendent Form and His extraordinary love for him. All the three faculties of the Āzhvār-word, deed and thought-are extremely delectable to Him and loom large in His eyes. If the Āzhvār’s mind is unto Him as aromatic as the sandal paste, his hymns are like unto the colourful garlands made of choice flowers of special fragrance. + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஈசன் எம்பெருமானும்; ஞாலம் உண்டு உலகங்களை உண்டு; உமிழ்ந்த எந்தை உமிழ்ந்த என் தந்தையுமான; ஏக மூர்த்திக்கே ஒப்பற்ற பெருமானுக்கு; பூசும் சாந்து பூசும் சந்தனம்; என் நெஞ்சமே என் நெஞ்சமே ஆகும்; புனையும் கண்ணி அணியும் மாலை; எனதுடைய என்னுடைய; வாசகம் செய் வாக்கினால் தொடுத்த; மாலையே சொல்மாலையே ஆகும்; வான் பட்டு ஆடையும் சிறந்த பட்டு ஆடையும்; அஃதே அந்த சொல்மாலையே; தேசம் ஆன ஒளிமயமான; அணிகலனும் ஆபரணங்களும்; என் கைகூப்பு என் கைகளால் கைகூப்பி; செய்கையே தொழும் வணக்கங்களே ஆகும்
gyālam uṇdu umizhndha being the protector of all since he consumes everything and spits them out again (during the danger of pral̤ayam (deluge)); endhai being my lord (enslaving me by manifesting this activity); ĕkam matchless; mūrththikku for the one who has form; pūsum suitable (as given by kūni [vendor of sandal paste]); sāndhu sāththuppadi (sandalwood paste); en nenjam my heart;; punaiyum adorning (as joyfully offered by ṣrīmālākārar [vendor of garlands]); kaṇṇi divine garland; enadhudaiya my; vāsagam the words which are the result of my speech; sey strung; mālai garland;; vān best; pattādaiyum garment; ahdhĕ those words only;; thĕsamāna adding thĕjas (radiance); aṇi worn; kalanum ābharaṇams (ornaments); en my; kai kūppuch cheygaiyĕ the anjali (salutation with joined palms); ĕka mūrththi ḥaving the causal form (as said in chāndhŏgya upanishath -ĕkamĕva- (ŏnly him) with the chith (sentient entities) and achith (insentient entities) in their subtle form)

TVM 4.3.3

3147 ஏகமூர்த்தியிருமூர்த்தி மூன்றுமூர்த்திபலமூர்த்தி
யாகி * ஐந்துபூதமாய் இரண்டுசுடராயருவாகி *
நாகமேறிநடுக்கடலுள்துயின்ற நாராயணனே! * உன்
ஆகமுற்றுமகத்தடக்கி ஆவியல்லல்மாய்த்ததே.
3147 ஏக மூர்த்தி இரு மூர்த்தி *
மூன்று மூர்த்தி பல மூர்த்தி
ஆகி * ஐந்து பூதம் ஆய்
இரண்டு சுடர் ஆய் * அருவு ஆகி **
நாகம் ஏறி நடுக் கடலுள் துயின்ற *
நாராயணனே * உன்
ஆகம் முற்றும் அகத்து அடக்கி *
ஆவி அல்லல் மாய்த்ததே (3)
3147 eka mūrtti iru mūrtti *
mūṉṟu mūrtti pala mūrtti
āki * aintu pūtam āy
iraṇṭu cuṭar āy * aruvu āki **
nākam eṟi naṭuk kaṭalul̤ tuyiṉṟa *
nārāyaṇaṉe * uṉ
ākam muṟṟum akattu aṭakki *
āvi allal māyttate (3)

Ragam

Ārabi / ஆரபி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Reference Scriptures

BG. 9-10

Simple Translation

You assumed a single form, then two, three, and many—the form you took of the senses five, the Sun, and the Moon. Formless, you did everywhere, as the Internal Controller, pervade. You repose, Oh, Nārāyaṇa, in the mid-ocean on a serpent-bed, and now Your body and all it needs you have compressed right in my mind, and thus I feel fully relaxed.

Explanatory Notes

(i) Here is a complete reversal of the picture, we saw in the last decad. The Āzhvār, sunk deep in dejection in that decad, is now very happy and proclaims that the Lord is also jubilant that His task has been well done, having taken the Āzhvār unto His fold, with great delight.

(ii) Single Form: This refers to the state of affairs prior to creation, when the Lord + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஏக மூர்த்தி காரணபூதனான ஒரு மூர்த்தியாய்; இரு பிரக்ருதி மஹான் ஆகிய இரு; மூர்த்தி மூர்த்தியாய்; மூன்று ஸத்வ ரஜஸ் தமஸ் என்ற முக்குணங்களோடு; மூர்த்தி மூன்று மூர்த்தியாய்; பல மூர்த்தி ஆகி பல மூர்த்திகளாகவும் ஆகி; ஐந்து பூதம் ஆய் பஞ்ச பூதங்களாய்; இரண்டு சுடர் ஆய் சந்திர சூரியர்களாய்; அருவு ஆகி அவற்றுக்கு அந்தராத்மாவாய்; நாகம் ஏறி ஆதிசேஷன் மீது ஏறி; நடுக் கடலுள் பாற்கடலில்; துயின்ற யோக நித்திரை செய்யும்; நாராயணனே! நாராயணனே!; உன் ஆகம் உன்னுடைய திருமேனியையும்; முற்றும் அழகையும் எல்லாவற்றையும்; அகத்து அடக்கி என் நெஞ்சுக்குள்ளே அடக்கி; ஆவி அல்லல் அநுபவித்து என் ஆத்மா; மாய்த்ததே துயரத்தைப் போக்கப் பெற்றது
iru mūrththi having the forms of mahath and ahankāram (both of which are sequential manifested states of the primordial matter which is avyaktha (unmanifest)); mūnṛu mūrththi having the variations based on sathvam (goodness), rajas (passion) and thamas (ignorance) qualities, as attributes; pala mūrththi āgi having the 11 senses (pancha karmĕndhriyam (5 sense organs of action), pancha gyānĕndhriyam (5 sense organs of knowledge) and manas (mind)) as attributes (these 11 senses are an effect of vaikārika, one of the three types of ahankāram), as attributes; aindhu būthamāy having pancha bhūthams (five great elements, which are effects of bhūthādhi, which is the thāmasa ahankāram, one of the three types of ahankāram) as attributes; iraṇdu sudarāy having sun and moon (which are cited as a sample for the entities inside the aṇdam (oval shaped universe), which are part of vyashti srushti (variegated creation)) as his forms; aru āgi being in a subtle form (as the in-dwelling super soul of such entities); nāgam on thiruvananthāzhwān (ādhiṣĕshan); ĕṛi climb; naduk kadal ul̤ in the thiruppāṛkadal (milk ocean); thuyinṛa resting; nārāyaṇanĕ ŏh one who is known by the word nārāyaṇa (which is established by such antharāthmathva (being the in-dwelling super-soul) and samudhrasāyithva (resting in ocean))!; un your; āgam form; muṝum all beauty (of having all of my faculties as all of your decorations); agaththu in my heart; adakki consumed and enjoyed; āvi my āthmā; allal the sorrows (which occurred to me in previous decad); māyththadhĕ are gone; māyththal to finish

TVM 4.3.4

3148 மாய்த்தலெண்ணிவாய்முலைதந்த மாயப்பேயுயிர்
மாய்த்த * ஆயமாயனே! வாமனனே மாதவா! *
பூத்தண்மாலைகொண்டுஉன்னைப் போதால் வணங்கேனேலும் * நின்
பூத்தண்மாலைநெடுமுடிக்குப் புனையுங்கண்ணிஎனதுயிரே.
3148 மாய்த்தல் எண்ணி வாய் முலை தந்த *
மாயப் பேய் உயிர்
மாய்த்த * ஆய மாயனே! *
வாமனனே! மாதவா! **
பூத் தண் மாலை கொண்டு *
உன்னைப் போதால் வணங்கேனேலும் * நின்
பூத் தண் மாலை நெடு முடிக்குப் *
புனையும் கண்ணி எனது உயிரே (4)
3148 māyttal ĕṇṇi vāy mulai tanta *
māyap pey uyir
māytta * āya māyaṉe! *
vāmaṉaṉe! mātavā! **
pūt taṇ mālai kŏṇṭu *
uṉṉaip potāl vaṇaṅkeṉelum * niṉ
pūt taṇ mālai nĕṭu muṭikkup *
puṉaiyum kaṇṇi ĕṉatu uyire (4)

Ragam

Ārabi / ஆரபி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

My Lord, I served you not with nice garlands when You killed the strange demoness with a poisoned breast, who suckled you with intent to kill. When, as Vāmaṉaṉ, you sought alms from Bali, when you churned the ocean and took Lakṣmī (Mother) on your chest as 'Mātavaṉ', yet how is it that my life You hold dear like the garland on Your high crown?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மாய்த்தல் எண்ணி அழிக்க நினைத்து; வாய் முலை உன் வாயிலே தன் ஸ்தனங்களின்; தந்த பாலைப் பருக வைத்த; மாயப் பேய் வஞ்சகப் பேயான பூதனையின்; உயிர் மாய்த்த உயிரை மாய்த்த; ஆய மாயனே! ஆயர்குல மாயனே!; வாமனனே! மாதவா! வாமனனே! மாதவா!; பூத் தண் குளிர்ந்த பூக்களால் தொடுத்த; மாலை கொண்டு மாலைகளைக் கொண்டு; உன்னை போதால் உன்னை உரிய காலங்களில்; வணங்கேனேலும் வணங்கவில்லையானாலும்; பூத் தண் மாலை பூமாலையால்; நெடு அலங்கரிக்கப்பட்ட நீண்ட; நின் முடிக்கு உன் திருமுடிக்கு; புனையும் அலங்காரமாய்; கண்ணி சாத்தியிருக்கும் மாலை; எனது உயிரே என்னுடைய பிராணனே!
eṇṇi thinking; vāy in the divine mouth; mulai thandha placed her breast; māyam having a motherly form (which is favourable); pĕy evil demon-s; uyir prāṇa (vital air); māyththa finished; āyan without any deficiency in -cowherd child- qualities; māyanĕ ŏh amaśing emperumān!; vāmananĕ blessing me to see vāmanāvathāram (where he manifested his lordship over the whole universe and showed that everything is fully dependent on him); mādhavā ŏh one who established (your natural) ṣriya:pathithvam (being the lord of ṣrī mahālakshmi)!; unnai you (who is the destroyer of enemy in disguise); with distinguished flowers; thaṇ cool; mālai koṇdu with garlands; pŏdhu according to the situation; vaṇangĕnĕlum even though ī did not get to worship you; nin your; abundant flowers; thaṇ fresh; mālai decorated with garland; nedu tall (revealing the supremacy over everyone); mudikku for the divine crown; punaiyum worn as decoration; kaṇṇi garland; enadhu uyirĕ my prāṇa (vital air, life)!; kālam to control the time

TVM 4.3.5

3149 கண்ணிஎனதுயிர் காதல்கனகச்சோதிமுடிமுதலா *
எண்ணில்பல்கலன்களும் ஏலுமாடையும்அஃதே *
நண்ணிமூவுலகும் நவிற்றும்கீர்த்தியும்அஃதே *
கண்ணனெம்பிரானெம்மான் காலசக்கரத்தானுக்கே.
3149 கண்ணி எனது உயிர் *
காதல் கனகச் சோதி முடி முதலா *
எண் இல் பல் கலன்களும் *
ஏலும் ஆடையும் அஃதே **
நண்ணி மூவுலகும் *
நவிற்றும் கீர்த்தியும் அஃதே *
கண்ணன் எம் பிரான் எம்மான் *
கால சக்கரத்தானுக்கே (5)
3149 kaṇṇi ĕṉatu uyir *
kātal kaṉakac coti muṭi mutalā *
ĕṇ il pal kalaṉkal̤um *
elum āṭaiyum aḵte **
naṇṇi mūvulakum *
naviṟṟum kīrttiyum aḵte *
kaṇṇaṉ ĕm pirāṉ ĕmmāṉ *
kāla cakkarattāṉukke (5)

Ragam

Ārabi / ஆரபி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

My soul finds exquisite delight in the divine presence of Lord Kaṇṇaṉ, the gracious bestower of blessings, who wields the mighty discus governing the cycles of time. Just as a fragrant garland adorns His divine form, my love for Him is like a precious jewel, cherished and valued. He perceives my affection as His radiant golden crown, embellished with countless jewels that symbolize the praises showered upon Him by the entire universe.

Explanatory Notes

(i) The Āzhvār speaks of the Lord’s adoration, strong and steadfast, of his soul and inordinate love for him. Having made the Āzhvār subsist in the real sense, the Godbound, rejuvenated life of the Āzhvār is as dear to Him as His famous garland ‘Vaijayanti’. And what more? The Lord sees the Āzhvār’s God-love as manifesting itself in His dazzling crown and the numerous + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கால காலத்தை நடத்தும்; சக்கரத்தானுக்கே சக்கரத்தையுடைய; எம்பிரான் எம்மான் எம்பிரான் எம்மான்; கண்ணன் கண்ணனுக்கு; எனது உயிர் என் உயிரானது; கண்ணி அவன் அணியும் மாலையாகும்; காதல் என் அன்பானது; கனகச் சோதி ஒளி பொருந்திய பொன்மயமான; முடி முதலா கிரீடம் முதலிய; எண் இல் பல் கணக்கற்ற பல; கலன்களும் ஆபரணங்களும் ஆகும்; ஏலும் ஆடையும் பொருந்திய பீதாம்பரமும்; அஃதே அந்த அன்பே ஆகும்; நண்ணி மூவுலகும் மூவுலகங்களும் பொருந்தி; நவிற்றும் வாழ்த்தி வணங்கும்; கீர்த்தியும் அஃதே புகழும் அந்த அன்பே
chakkaraththān having the thiruvāzhi (divine chakra [disc]); emmān (by showing such beauty) being the lord who enslaved me; empirān my great benefactor (one who lets me enjoy such beauty eternally); kaṇṇanukku krishṇa (who incarnated with simplicity synchronous with the time); enadhu my dear; uyir āthmā; kaṇṇi became the garland (which is placed on his head);; kādhal prĕma [love] (which is the natural expression of this āthmā); kanagam golden; sŏdhi radiance (which reveals his supremacy over all); mudi mudhalā crown etc; eṇ il pal innumerable; kalangal̤um became ornaments;; ĕlum matching (revealing his supremacy over all); ādaiyum his divine pīthāmbaram (garment); ahdhĕ the same;; mū ulagum three types of āthmās [nithya (eternally free), muktha (liberated), badhdha (bound) souls]; naṇṇi approach; naviṝum continuously recite; kīrththiyum eulogies; ahdhĕ the same; kālan having the nature of becoming kāla (the destroyer) (to destroy the enemies)

TVM 4.3.6

3150 காலசக்கரத்தொடு வெண்சங்கம்கையேந்தினாய்! *
ஞாலமுற்றுமுண்டுமிழ்ந்த நாராயணனே! என்றென்று *
ஓலமிட்டு நானழைத்தால் ஒன்றும்வாராயாகிலும் *
கோலமாமென்சென்னிக்கு உன்கமலமன்னகுரைகழலே.
3150 கால சக்கரத்தொடு *
வெண் சங்கம் கை ஏந்தினாய் *
ஞாலம் முற்றும் உண்டு உமிழ்ந்த *
நாராயணனே! என்று என்று **
ஓலம் இட்டு நான் அழைத்தால் *
ஒன்றும் வாராயாகிலும் *
கோலம் ஆம் என் சென்னிக்கு *
உன் கமலம் அன்ன குரைகழலே (6)
3150 kāla cakkarattŏṭu *
vĕṇ caṅkam kai entiṉāy *
ñālam muṟṟum uṇṭu umizhnta *
nārāyaṇaṉe! ĕṉṟu ĕṉṟu **
olam iṭṭu nāṉ azhaittāl *
ŏṉṟum vārāyākilum *
kolam ām ĕṉ cĕṉṉikku *
uṉ kamalam aṉṉa kuraikazhale (6)

Ragam

Ārabi / ஆரபி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Reference Scriptures

BG. 9-29, SR.AY.K-17-15

Simple Translation

Oh, Lord, with Your hands adorned by the deadly discus and the white conch, Your divine presence encompasses all. Even if my calls to You remain unanswered, I shall still adorn my head with devotion for Your lotus feet, adorned with victorious anklets. Your magnificence transcends words, as You once consumed and then recreated all the worlds. Your divine name echoes in my heart, a constant reminder of your omnipresence.

Explanatory Notes

In the pieceding songs of this decad, the Lord’s love for the Āzhvār was expatiated on, and now, the Āzhvār’s reciprocal love for the Lord is being talked about. The Āzhvār avers that, even if the Lord studiously kept Himself away without responding to the repeated calls from him, His feet shall always adorn his head. It might be asked how the Lord’s feet could adorn the + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கால பகைவரை அழிக்கும்; சக்கரத்தோடு சக்கரத்தோடு; வெண் சங்கம் வெண் சங்கையும்; கை ஏந்தினாய்! கையில் தரித்திருப்பவனே!; ஞாலம் முற்றும் உலகம் முழுதும்; உண்டு உமிழ்ந்த உண்டு உமிழ்ந்த; நாராயணனே! நாராயணனே!; என்று என்று என்று பலகாலும் சொல்லி; ஓல மிட்டு நான் நான் கூக்குரலிட்டு; அழைத்தால் அழைத்தும் நீ; ஒன்றும் வாராயாகிலும் வராமலிருந்தாலும்; உன் கமலம் அன்ன உன் தாமரை மலர் போன்ற; குரைகழலே ஒலிக்கின்ற கழலையணிந்த திருவடிகள்; என் சென்னிக்கு எனது தலைக்கு; கோலம் ஆம் அலங்காரமாக நின்றது
chakkaraththodu with thiruvāzhi (divine chakra, disc); vel̤ sangu ṣrī pānchajanya conch which has (contrasting) white colour; am beautiful (adding grace to them); kai in the divine hand; ĕndhināy one who held; gyālam for the world (which is protected); muṝum without a trace; uṇdu placing it in his stomach and protecting it; umizhndha (after the deluge) spitting it out to let it see the outside; nārāyaṇanĕ ŏh nārāyaṇa (who has natural relationship)!; enṛu enṛu saying these aspects repeatedly; ŏlamittu crying out; nān ī (who is not worthy of your arrival); azhaiththāl even if ī called; onṛum without any indication (of your arrival, as said in periya thiruvanthādhi 8 -arugum suvadum therivuṇarŏm- (we don-t have the ability to approach you or know the means to approach you)); vārāy āgilum even if you don-t arrive; en sennikku for my head (for me who cannot sustain without you); un your (the master); kamalam anna infinitely enjoyable like a lotus flower; kurai making sounds of bravery (which highlight the protection for your devotees); kazhal divine feet; kŏlam ām shining radiantly as decoration.; kurai having brave ornaments (which were added for his activities which make others exist exclusively for him)

TVM 4.3.7

3151 குரைகழல்கள்நீட்டி மண்கொண்டகோலவாமனா! *
குரைகழல்கைகூப்புவார்கள் கூடநின்றமாயனே! *
விரைகொள்பூவும்நீரும்கொண்டு ஏத்தமாட்டேனேலும் * உன்
உரைகொள்சோதித்திருவுருவம் என்னதாவிமேலதே.
3151 குரை கழல்கள் நீட்டி *
மண் கொண்ட கோல வாமனா *
குரை கழல் கைகூப்புவார்கள் *
கூட நின்ற மாயனே **
விரை கொள் பூவும் நீரும் கொண்டு *
ஏத்தமாட்டேனேலும் * உன்
உரை கொள் சோதித் திரு உருவம் *
என்னது ஆவி மேலதே (7)
3151 kurai kazhalkal̤ nīṭṭi *
maṇ kŏṇṭa kola vāmaṉā *
kurai kazhal kaikūppuvārkal̤ *
kūṭa niṉṟa māyaṉe **
virai kŏl̤ pūvum nīrum kŏṇṭu *
ettamāṭṭeṉelum * uṉ
urai kŏl̤ cotit tiru uruvam *
ĕṉṉatu āvi melate (7)

Ragam

Ārabi / ஆரபி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

Oh, Vāmaṉā, the handsome - Your resounding feet measured the worlds. They who but once salute those feet shall attain You, wondrous Sire. Even if I worship You not with fragrant flowers and pure water, Your resplendent form, has made my soul subsist. What a wonder!

Explanatory Notes

(i) Despite the failure of the Āzhvār to worship, with flowers and water, the Lord, who is attainable by a single salutation with joined palms, the Āzhvār’s soul has become the sole object of redemption by the Lord! The Aḷver simply thaws down at this boundless love and magnanimity of the Lord.

(ii) It was Vāmaṉa, transformed into Trivikrama, that measured the worlds, + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
குரை ஒலிக்கின்ற; கழல்கள் நீட்டி திருவடிகளை நீட்டி; மண் கொண்ட பூமி அளந்த; கோல வாமனா! வடிவழகையுடைய வாமனனே!; குரை கழல் அத்திருவடிகளைக் குறித்து; கைகூப்புவார்கள் அஞ்ஜலி பண்ணுபவர்கள்; கூட நின்ற தன்னை வந்து அடையும் படி நின்ற; மாயனே! மாயனே!; விரை கொள் மணம் கமழும்; பூவும் மலர்களையும்; நீரும் கொண்டு நீரும் கொண்டு; ஏத்த உன்னை; மாட்டேனேலும் வணங்கவில்லையாகிலும்; உன் உரை கொள் ஒளிமயமான உன்; சோதித் திரு உருவம் சோதிஸ்வரூபத்தை; என்னது ஆவி மேலதே என் உயிர் பற்றி நின்றது
kazhalgal̤ divine feet; nītti lifted; maṇ universe; koṇda measured and accepted; kŏlam having beauty; vāmanā being vāmana; kurai kazhal towards those divine feet; kai kūppuvārgal̤ those who perform anjali; kūda to attain (only him); ninṛa stood (as upāyam (means) and upĕyam (goal)); māyanĕ ŏh amaśing lord!; virai kol̤ abundantly fragrant; pūvum flower; nīrum and water; koṇdu having; ĕththa māttĕnĕlum even if ī am incapable of praising you (to worship you); urai through words of vĕdhāntha; kol̤ unlimited; sŏdhi having thĕjas (radiance); un your; thiru uruvam divine form; ennadhu āvi mĕladhu intent on my āthmā; ennadhu āvi mĕlaiyāy intent on my āthmā

TVM 4.3.8

3152 என்னதாவிமேலையாய் ஏர்கொளேழுலகமும் *
துன்னிமுற்றுமாகிநின்ற சோதிஞானமூர்த்தியாய் *
உன்னதென்னதாவியும் என்னதுன்னதாவியும் *
இன்னவண்ணமேநின்றாய் என்றுரைக்கவல்லேனே?
3152 என்னது ஆவி மேலையாய் *
ஏர் கொள் ஏழ் உலகமும் *
துன்னி முற்றும் ஆகி நின்ற *
சோதி ஞான மூர்த்தியாய் **
உன்னது என்னது ஆவியும் *
என்னது உன்னது ஆவியும் *
இன்ன வண்ணமே நின்றாய் *
என்று உரைக்க வல்லேனே? (8)
3152 ĕṉṉatu āvi melaiyāy *
er kŏl̤ ezh ulakamum *
tuṉṉi muṟṟum āki niṉṟa *
coti ñāṉa mūrttiyāy **
uṉṉatu ĕṉṉatu āviyum *
ĕṉṉatu uṉṉatu āviyum *
iṉṉa vaṇṇame niṉṟāy *
ĕṉṟu uraikka valleṉe? (8)

Ragam

Ārabi / ஆரபி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

My soul, infused with intense love for You, finds You permeating the seven beautiful worlds, for all things are but manifestations of your divine presence. As radiant knowledge personified, You have seamlessly blended with my soul, and mine with Yours. The depth of this unique blending is beyond expression, for it transcends words and comprehension.

Explanatory Notes

(i) The original text lends itself to a two-fold interpretation, namely:

(a) Having secured my soul and thus made it subsist in the real sense, You are mighty pleased and are even inclined to feel that the purpose of Your immanence was achieved only when you got at me. This is like a whole town being besieged, for capturing just one person.

(b) Very keen on getting + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
என்னது ஆவி என் உயிரின் மேல்; மேலையாய்! காதல் கொண்டு; ஏர் கொள் அழகியதான; ஏழ் உலகமும் ஏழு உலகங்களையும்; துன்னி பூர்ணமாக; முற்றும் ஆகி அனைத்துப் பொருள்களும்; நின்ற சோதி தானேயாய் நின்ற சோதியே!; ஞான மூர்த்தியாய்! ஞான மூர்த்தியே!; என்னது ஆவியும் என் ஆத்மா; உன்னது உனக்கு போக்யமாகவும்; உன்னது ஆவியும் உன் ஆத்ம ஸ்வரூபம்; என்னது எனக்கு போக்யமாகவும்; இன்ன வண்ணமே இன்ன வண்ணம்; நின்றாய் நின்றாய்; என்று உரைக்க என்று என்னால் உரைக்க; வல்லேனே முடியவில்லை
ĕrkol̤ having natural radiance; ĕzh ulagamum all worlds which are classified into seven categories; thunni completely pervading; muṝum all objects; āgi having them as [your] prakāra (attributes/modes); ninṛa stood; sŏdhi naturally lustrous; gyānam knowledge; mūrththiyāy oh one who is having as true nature!; ennadhu āvi my āthmā-s nature; unnadhum enjoyable for you; unnadhu āvi your divine āthmā-s nature; ennadhum enjoyable for me; inna vaṇṇamĕ in this manner; ninṛāy you stood; enṛu uraikka vallĕnĕ how will ī sing/praise this?; uraikka vallĕn allĕn not capable (to sing your loving attitude towards your devotees);

TVM 4.3.9

3153 உரைக்கவல்லேன்அல்லேன்உன்னுலப்பில்கீர்த்தி வெள்ளத்தின் *
கரைக்கணென்றுசெல்வன்நான்? காதல்மையலேறினேன் *
புரைப்பிலாதபரம்பரனே! பொய்யிலாதபரஞ்சுடரே! *
இரைத்துநல்லமேன்மக்களேத்த யானுமேத்தினேன்.
3153 உரைக்க வல்லேன் அல்லேன் *
உன் உலப்பு இல் கீர்த்தி வெள்ளத்தின் *
கரைக்கண் என்று செல்வன் நான்? *
காதல் மையல் ஏறினேன் **
புரைப்பு இலாத பரம்பரனே *
பொய் இலாத பரஞ்சுடரே *
இரைத்து நல்ல மேன்மக்கள் ஏத்த *
யானும் ஏத்தினேன் (9)
3153 uraikka valleṉ alleṉ *
uṉ ulappu il kīrtti vĕl̤l̤attiṉ *
karaikkaṇ ĕṉṟu cĕlvaṉ nāṉ? *
kātal maiyal eṟiṉeṉ **
puraippu ilāta paramparaṉe *
pŏy ilāta parañcuṭare *
iraittu nalla meṉmakkal̤ etta *
yāṉum ettiṉeṉ (9)

Ragam

Ārabi / ஆரபி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

Oh, Lord, complete and certain are Your sovereignty and splendor, like Your mingling with me. I can hardly express whether at all I can find the shore of the endless ocean of your love. Steeped in love, I do praise you a little, in the footsteps of the good and great Nithyasuris who chant your glory in reverberating tones.

Explanatory Notes

The Āzhvār is well aware of his incompetence to sing the praise of the Lord of limitless glory; for the matter of that, the Celestials (Nitya Sūrīs) also fall far short, in this regard, their eminence notwithstanding. Even the Lord does not know the full extent of His glory. That being the case, the Āzhvār praises the Lord, in a state of ecstatic imbalance, lured by the + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
உரைக்க பாசுரமிட்டு உரைக்க; வல்லேன் ஆற்றலுள்ளவன்; அல்லேன் அல்லேன் நான்; புரைப்பு இலாத குறைவற்ற; பரம்பரனே! பரம் சோதியே!; பொய் இலாத பரஞ்சுடரே! பொய் இலாத பரஞ்சுடரே!; உன் உலப்பு இல் எல்லையில்லாத உன்; கீர்த்தி வெள்ளத்தின் கீர்த்தி வெள்ளத்தின்; கரைக்கண் என்று கரையை என்று; செல்வன் நான்? நான் சென்று அடைவேனோ?; காதல் மையல் உன்னிடத்தின் காதலால் மயக்கம்; ஏறினேன் அடைந்தேன்; நல்ல மேன்மக்கள் நித்யஸூரிகள்; ஏத்த இரைத்து ஆரவாரம் செய்து துதிக்க; யானும் ஏத்தினேன் நானும் உன்னைத் துதித்தேன்
ulappu il endless; un your; kīrththi overwhelming love; vel̤l̤aththin ocean-s; karaikkaṇ shore; nān ī; enṛu when; selvan will reach?; kādhal out of love; maiyalĕṛinĕn became bewildered;; puraippu ilādha without any falsehood; param paranĕ having supremacy over all; poy ilādha without any falsehood; param sudarĕ oh one who is having infinite radiance!; nalla having distinguished knowledge; mĕl having supremacy over all; makkal̤ nithyasūris; iraiththu making noise (like rising tides in the ocean); ĕththa praising saying -hā-hū hā-hū-; yānum ī too; ĕththinĕn praised.; yānum ī (who was fully blessed by him with faultless knowledge and devotion)

TVM 4.3.10

3154 யானுமேத்தி ஏழுலகும்முற்றுமேத்தி * பின்னையும்
தானுமேத்திலும் தன்னையேத்தவேத்தவெங்கெய்தும்? *
தேனும்பாலும்கன்னலும் அமுதுமாகித்தித்திப்ப *
யானுமெம்பிரானையேயேத்தினேன் யானுய்வானே.
3154 யானும் ஏத்தி * ஏழ் உலகும் முற்றும் ஏத்தி * பின்னையும்
தானும் ஏத்திலும் * தன்னை ஏத்த ஏத்த எங்கு எய்தும்? **
தேனும் பாலும் கன்னலும் * அமுதும் ஆகித் தித்திப்ப *
யானும் எம் பிரானையே ஏத்தினேன் * யான் உய்வானே (10)
3154 yāṉum etti * ezh ulakum muṟṟum etti * piṉṉaiyum
tāṉum ettilum * taṉṉai etta etta ĕṅku ĕytum? **
teṉum pālum kaṉṉalum * amutum ākit tittippa *
yāṉum ĕm pirāṉaiye ettiṉeṉ * yāṉ uyvāṉe (10)

Ragam

Ārabi / ஆரபி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

How can His great glory ever be exhausted if I sing His praise, followed by all the worlds and the Lord Himself? Sweet unto me like honey, milk, and candy, I subsist by lauding my nectarean Lord.

Explanatory Notes

The Āzhvār, blest by the Lord with divine knowledge, full and complete, sings His praise, all the worlds without distinction of high and low, knowledgeable or otherwise, extol Him and then, the Omniscient, Omnipotent Lord Himself follows suit. And yet, all of them, put together cannot exhaust His glory, even if they sang His praise for ages, notwithstanding the involvement + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
யானும் எம்பெருமானருளால் அறிவுபெற்ற நானும்; ஏத்தி துதித்து; ஏழ் உலகும் எல்லாவுலகங்களும் ஒன்று கூடி; முற்றும் ஏத்தி எல்லோரும் துதித்தும்; பின்னையும் மேலும்; தானும் எம்பெருமானான; ஏத்திலும் தானுங்கூடி ஏத்தினாலும்; தன்னை ஏத்த ஏத்த தன்னைத் துதிக்கத் துதிக்க; எங்கு எய்தும்? அந்த புகழ் எங்கு போய் முடியும்?; யான் உய்வானே நான் உய்வதற்காக; தேனும் பாலும் தேனும் பாலும்; கன்னலும் அமுதும் ஆகி கன்னலும் அமுதும் ஆகி; தித்திப்ப எனக்கு தித்திக்கும்படி அநுபவம் தந்த; யானும் எம்பிரானையே அடியேன் எம்பிரானையே; ஏத்தினேன் வாழ்த்தி வணங்கினேன்
ĕththi glorify; muṝum without distinction between ignorant and wise; ĕzhulagum all the worlds; ĕththi glorify; pinnaiyum further more; thānum he himself (who is sarvagya (omniscient) and bestows knowledge to everyone); ĕththilum even if glorifies; thannai him (who is incomprehensible); ĕththa ĕththa repeatedly glorify (without repeating the same aspect); engu where (ḥow); eydhum can we complete?; thĕnum honey; pālum milk; kannalum sugar; amudhumāgi like nectar; thiththippa relishable/sweet (in all manners); em one who bestowed me such enjoyment [of him]; pirānaiyĕ great benefactor only; yān ī; uyvān for my uplifting; yānum ī too; ĕththinĕn glorified; uyvu upāyam means for uplifting

TVM 4.3.11

3155 உய்வுபாயம்மற்றின்மைதேறிக் கண்ணனொண்கழல்கள் மேல் *
செய்யதாமரைப்பழனத் தென்னன்குருகூர்ச்சடகோபன் *
பொய்யில்பாடலாயிரத்துள் இவையும்பத்தும்வல்லார்கள் *
வையம்மன்னிவீற்றிருந்து விண்ணுமாள்வர் மண்ணூடே. (2)
3155 ## உய்வு உபாயம் மற்று இன்மை தேறிக் *
கண்ணன் ஒண் கழல்கள் மேல் *
செய்ய தாமரைப் பழனத் *
தென்னன் குருகூர்ச் சடகோபன் **
பொய் இல் பாடல் ஆயிரத்துள் *
இவையும் பத்தும் வல்லார்கள் *
வையம் மன்னி வீற்றிருந்து *
விண்ணும் ஆள்வர் மண்ணூடே (11)
3155 ## uyvu upāyam maṟṟu iṉmai teṟik *
kaṇṇaṉ ŏṇ kazhalkal̤ mel *
cĕyya tāmaraip pazhaṉat *
tĕṉṉaṉ kurukūrc caṭakopaṉ **
pŏy il pāṭal āyirattul̤ *
ivaiyum pattum vallārkal̤ *
vaiyam maṉṉi vīṟṟiruntu *
viṇṇum āl̤var maṇṇūṭe (11)

Ragam

Ārabi / ஆரபி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

Those well-versed in these ten songs, out of the thousand composed by Caṭakōpaṉ of lovely Teṉkurukūr, with lotus ponds and fertile fields, adoring the comely feet of Kaṇṇaṉ, for sheer survival, will flourish for long in this abode and rule as well, right from here and the SriVaikuntam abode.

Explanatory Notes

(i) The Āzhvār spoke about the love that subsists between him and his beloved, the Supreme Lord, in this decad, not because he could talk about it, in any appreciable measure, but for his mere survival.

(ii) Even as Brahma assured Sage Vālmiki, that not a word in the great Kāvya (Rāmāyaṇa) would be untrue, the Dramiḍa Veda (Tiruvāymoḻi) is of unquestionable veracity. + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
உய்வு உபாயம் உய்யும் உபாயம்; மற்று இன்மை வேறு இல்லாமையை; தேறி கண்ணன் அறுதியிட்டு கண்ணனின்; ஒண் கழல்கள்மேல் அழகிய திருவடிகளைக் குறித்து; செய்ய தாமரை செந்தாமரைகள் நிறைந்த; பழனம் நீர் நிலங்களையுடைய; தென்னன் குருகூர் திருக்குருகூரில் அவதரித்த; சடகோபன் நம்மாழ்வார்; பொய்யில் பாடல் பொய்யில்லாதபடி பாடின; ஆயிரத்துள் ஆயிரம் பாசுரங்களுள்; இவையும் பத்தும் இந்தப் பத்துப் பாசுரங்களையும்; வல்லார்கள் ஓத வல்லார்கள்; வையம் மன்னி இப்பூமண்டலத்தில்; வீற்றிருந்து பல காலம் தங்கியிருந்து; மண் ஊடே இவ்வுலகத்தில் இருந்துகொண்டே; விண்ணும் ஆள்வர் பரமபதத்தையும் ஆள்வர்
maṝu inmai nothing else existing; thĕṛi established; kaṇṇan (the one who is so attached towards his devotees,) krishṇa-s; ol̤ most enjoyable; kazhalgal̤ mĕl on the divine feet; seyya reddish; thāmarai having lotus flower; pazhanam having water bodies; then in south direction; nal praiseworthy; kurugūr leader of āzhvārthirunagari; satakŏpan nammāzhvār-s; poy il without any falsehood (in his love towards emperumān); pādal sung; āyiraththul̤ in the thousand pāsurams; ivai paththum this decad; vallārgal̤ those who can recite (along with meditating upon their meanings); vaiyam in this world; manni firmly for a long time; vīṝirundhu remain (in a distinguished manner); maṇṇŏdĕ with this world (material realm); viṇṇum paramapadham also (spiritual realm); āl̤var will rule over (under their control).; maṇṇai earth