Your browser does not support the audio element.
audio
3145 கோவைவாயாள்பொருட்டு ஏற்றினெருத்தமிறுத்தாய் * மதிளிலங்கைக்
கோவைவீயச்சிலைகுனித்தாய்! குலநல்யானைமருப்பொசித்தாய்! *
பூவைவீயாநீர்தூவிப் போதால்வணங்கேனேலும் * நின்
பூவைவீயாமேனிக்குப் பூசுஞ்சாந்து என்னெஞ்சமே. (2)
3146 பூசுஞ்சாந்துஎன்னெஞ்சமே புனையுங்கண்ணிஎனதுடைய *
வாசகம்செய்மாலையே வான்பட்டாடையும்அஃதே *
தேசமானவணிகலனும் என்கைகூப்புச்செய்கையே *
ஈசன்ஞாலமுண்டுமிழ்ந்த எந்தையேகமூர்த்திக்கே.
3147 ஏகமூர்த்தியிருமூர்த்தி மூன்றுமூர்த்திபலமூர்த்தி
யாகி * ஐந்துபூதமாய் இரண்டுசுடராயருவாகி *
நாகமேறிநடுக்கடலுள்துயின்ற நாராயணனே! * உன்
ஆகமுற்றுமகத்தடக்கி ஆவியல்லல்மாய்த்ததே.
3148 மாய்த்தலெண்ணிவாய்முலைதந்த மாயப்பேயுயிர்
மாய்த்த * ஆயமாயனே! வாமனனே மாதவா! *
பூத்தண்மாலைகொண்டுஉன்னைப் போதால் வணங்கேனேலும் * நின்
பூத்தண்மாலைநெடுமுடிக்குப் புனையுங்கண்ணிஎனதுயிரே.
3149 கண்ணிஎனதுயிர் காதல்கனகச்சோதிமுடிமுதலா *
எண்ணில்பல்கலன்களும் ஏலுமாடையும்அஃதே *
நண்ணிமூவுலகும் நவிற்றும்கீர்த்தியும்அஃதே *
கண்ணனெம்பிரானெம்மான் காலசக்கரத்தானுக்கே.
3150 காலசக்கரத்தொடு வெண்சங்கம்கையேந்தினாய்! *
ஞாலமுற்றுமுண்டுமிழ்ந்த நாராயணனே! என்றென்று *
ஓலமிட்டு நானழைத்தால் ஒன்றும்வாராயாகிலும் *
கோலமாமென்சென்னிக்கு உன்கமலமன்னகுரைகழலே.
3151 குரைகழல்கள்நீட்டி மண்கொண்டகோலவாமனா! *
குரைகழல்கைகூப்புவார்கள் கூடநின்றமாயனே! *
விரைகொள்பூவும்நீரும்கொண்டு ஏத்தமாட்டேனேலும் * உன்
உரைகொள்சோதித்திருவுருவம் என்னதாவிமேலதே.
3152 என்னதாவிமேலையாய் ஏர்கொளேழுலகமும் *
துன்னிமுற்றுமாகிநின்ற சோதிஞானமூர்த்தியாய் *
உன்னதென்னதாவியும் என்னதுன்னதாவியும் *
இன்னவண்ணமேநின்றாய் என்றுரைக்கவல்லேனே?
3153 உரைக்கவல்லேன்அல்லேன்உன்னுலப்பில்கீர்த்தி வெள்ளத்தின் *
கரைக்கணென்றுசெல்வன்நான்? காதல்மையலேறினேன் *
புரைப்பிலாதபரம்பரனே! பொய்யிலாதபரஞ்சுடரே! *
இரைத்துநல்லமேன்மக்களேத்த யானுமேத்தினேன்.
3154 யானுமேத்தி ஏழுலகும்முற்றுமேத்தி * பின்னையும்
தானுமேத்திலும் தன்னையேத்தவேத்தவெங்கெய்தும்? *
தேனும்பாலும்கன்னலும் அமுதுமாகித்தித்திப்ப *
யானுமெம்பிரானையேயேத்தினேன் யானுய்வானே.
3155 உய்வுபாயம்மற்றின்மைதேறிக் கண்ணனொண்கழல்கள் மேல் *
செய்யதாமரைப்பழனத் தென்னன்குருகூர்ச்சடகோபன் *
பொய்யில்பாடலாயிரத்துள் இவையும்பத்தும்வல்லார்கள் *
வையம்மன்னிவீற்றிருந்து விண்ணுமாள்வர் மண்ணூடே. (2)