TVM 4.3.1

O Our Minds! Be the Sandalwood Paste to Anoint Kaṇṇaṉ

எம் மனமே! கண்ணனுக்குப் பூசும் சந்தனம்

3145 கோவைவாயாள்பொருட்டு ஏற்றினெருத்தமிறுத்தாய் * மதிளிலங்கைக்

கோவைவீயச்சிலைகுனித்தாய்! குலநல்யானைமருப்பொசித்தாய்! *

பூவைவீயாநீர்தூவிப் போதால்வணங்கேனேலும் * நின்

பூவைவீயாமேனிக்குப் பூசுஞ்சாந்து என்னெஞ்சமே. (2)

Text size