Your browser does not support the audio element.
audio
2956 வைகுந்தா! மணிவண்ணனே! என்பொல்லாத் திருக்குறளா! என்னுள்மன்னி *
வைகும்வைகல்தோறும் அமுதாயவானேறே! *
செய்குந்தாவருந்தீமையுன்னடியார்க்குத்தீர்த்து அசுரர்க்குத்தீமைகள்
செய்குந்தா! * உன்னைநான் பிடித்தேன்கொள் சிக்கெனவே. (2)
2957 சிக்கெனச்சிறிதோரிடமும் புறப்படாத்தன்னுள்ளே * உலகுகள்
ஒக்கவேவிழுங்கிப் புகுந்தான்புகுந்ததற்பின் *
மிக்கஞானவெள்ளச்சுடர்விளக்காய்த் துளக்கற்றமுதமாய் * எங்கும்
பக்கம்நோக்கறியான் என்பைந்தாமரைக்கண்ணனே.
2958 தாமரைக்கண்ணனை விண்ணோர்பரவுந்தலைமகனை * துழாய்விரைப்
பூமருவுகண்ணி எம்பிரானைப்பொன்மலையை *
நாமருவிநன்கேத்தியுள்ளிவணங்கி நாம்மகிழ்ந்தாட * நாவலர்
பாமருவிநிற்கத்தந்த பான்மையே! வள்ளலே!
2959 வள்ளலே! மதுசூதனா! என்மரதகமலையே! * உனைநினைந்
தெள்கல்தந்தவெந்தாய்! உன்னையெங்ஙனம்விடுகேன்! *
வெள்ளமேபுரைநின்புகழ்குடைந்தாடிப்பாடிக் களித்துகந்துகந்து *
உள்ளநோய்களெல்லாம் துரந்து உய்ந்துபோந்திருந்தே.
2960 உய்ந்துபோந்தென்னுலப்பிலாத வெந்தீவினைகளைநாசஞ்செய்து * உனது
அந்தமிலடிமைஅடைந்தேன்விடுவேனோ *
ஐந்துபைந்தலையாடரவணைமேவிப் பாற்கடல்யோக நித்திரை *
சிந்தைசெய்தவெந்தாய்? உன்னைச்சிந்தைசெய்துசெய்தே.
2961 உன்னைச்சிந்தைசெய்து உன்நெடுமாமொழியிசை பாடியாடி * என்
முன்னைத்தீவினைகள் முழுவேரரிந்தனன்யான் *
உன்னைச்சிந்தையினாலிகழ்ந்த இரணியனகல்மார்வம் கீண்ட * என்
முன்னைக்கோளரியே!முடியாததென்எனக்கே?
2962 முடியாததென்? எனக்கேலினி முழுவேழுலகுமுண்டான் * உகந்துவந்து
அடியேனுள்புகுந்தான் அகல்வானுமல்லனினி *
செடியார்நோய்களெல்லாம்துரந்து எமர்கீழ்மேலெழு பிறப்பும் *
விடியாவெந்நரகத்து என்றும்சேர்தல்மாறினரே.
2963 மாறிமாறிப்பலபிறப்பும்பிறந்து அடியையடைந்துள்ளந்தேறி *
ஈறிலின்பத்திருவெள்ளம் யான்மூழ்கினன் *
பாறிப்பாறியசுரர்தம் பல்குழாங்கள் நீறெழ * பாய்பறவையொன்று
ஏறிவீற்றிருந்தாய்! உன்னையென்னுள்நீக்கேலெந்தாய்!
2964 எந்தாய்! தண்திருவேங்கடத்துள்நின்றாய்! இலங்கை செற்றாய்! * மராமரம்
பைந்தாளேழுருவ ஒருவாளிகோத்தவில்லா! *
கொந்தார்தண்ணந்துழாயினாய்! அமுதே! உன்னையென்னுள்ளேகுழைத்தவெம்
மைந்தா! * வானேறே! இனியெங்குப்போகின்றதே?
2965 போகின்றகாலங்கள்போயகாலங்கள் போகுகாலங்கள் * தாய்தந்தையுயி
ராகின்றாய்! உன்னைநானடைந்தேன்விடுவேனோ? *
பாகின்றதொல்புகழ்மூவுலகுக்கும் நாதனே! பரமா! * தண்வேங்கடம்
மேகின்றாய்! தண்துழாய்விரைநாறுகண்ணியனே!
2966 கண்ணித்தண்ணந்துழாய்முடிக் கமலத்தடம்பெருங் கண்ணனை * புகழ்
நண்ணித்தென்குருகூர்ச் சடகோபன்மாறன்சொன்ன *
எண்ணில்சோர்விலந்தாதி ஆயிரத்துள்ளிவையுமோர் பத்திசையொடும் *
பண்ணில்பாடவல்லாரவர் கேசவன்தமரே. (2)