O Munificent One! How Can I Let You Go?
வள்ளலே! உன்னை எங்ஙனம் விடுவேன்?
2959 வள்ளலே! மதுசூதனா! என்மரதகமலையே! * உனைநினைந்
தெள்கல்தந்தவெந்தாய்! உன்னையெங்ஙனம்விடுகேன்! *
வெள்ளமேபுரைநின்புகழ்குடைந்தாடிப்பாடிக் களித்துகந்துகந்து *
உள்ளநோய்களெல்லாம் துரந்து உய்ந்துபோந்திருந்தே.