Chapter 2

A worrying mother! - (பட்டு உடுக்கும்)

ஒரு வருத்தப்படும் தாய்
Introduction & Details
Recitation
Translation

TNT 2.11

2062 பட்டுடுக்கும் அயர்த்திரங்கும்பாவைபேணாள்

பனிநெடுங்கண்ணீர்ததும்பப்பள்ளிகொள்ளாள் *

எள்துணைப்போது என்குடங்காலிருக்ககில்லாள்

எம்பெருமான்திருவரங்கம்எங்கே? என்னும் *

மட்டுவிக்கிமணிவண்டுமுரலும்கூந்தல்

மடமானைஇதுசெய்தார் தம்மை * மெய்யே

கட்டுவிச்சிசொல்லென்னச்சொன்னாள் நங்காய்!

கடல்வண்ணர்இதுசெய்தார்காப்பாராரே?

TNT 2.12

2063 நெஞ்சுருகிக்கண்பனிப்பநிற்கும்சோரும்

நெடிதுயிர்க்கும்உண்டறியாள்உறக்கம்பேணாள் *

நஞ்சரவில்துயிலமர்ந்தநம்பீ! என்றும்

வம்பார்பூம்வயலாலிமைந்தா! என்றும் *

அஞ்சிறையபுட்கொடியேஆடும்பாடும்

அணியரங்கமாடுதுமோ? தோழீ! என்றும் *

எஞ்சிறகின்கீழடங்காப்பெண்ணைப்பெற்றேன்

இருநிலத்துஓர்பழிபடைத்தேன் ஏ! பாவமே.

TNT 2.13

2064 கல்லெடுத்துக்கல்மாரிகாத்தாய்! என்றும்

காமருபூங்கச்சியூரகத்தாய் என்றும் *

வில்லிறுத்துமெல்லியல்தோள்தோய்ந்தாய்! என்றும்

வெஃகாவில்துயிலமர்ந்தவேந்தே! என்றும் *

மல்லடர்த்துமல்லரைஅன்றுஅட்டாய்! என்றும் *

மாகீண்டகைத்தலத்துஎன்மைந்தா! என்றும் *

சொல்லெடுத்துத்தன்கிளியைச்சொல்லேயென்று

துணைமுலைமேல்துளிசோரச்சோர்கின்றாளே.

TNT 2.15

2066 கல்லுயர்ந்தநெடுமதிள்சூழ்கச்சிமேய

களிறு! என்றும் கடல்கிடந்தகனியே! என்றும் *

அல்லியம்பூமலர்ப்பொய்கைப்பழனவேலி

அணியழுந்தூர்நின்றுகந்தஅம்மான்! என்றும் *

சொல்லுயர்ந்தநெடுவீணைமுலைமேல்தாங்கித்

தூமுறுவல்நகைஇறையேதோன்றநக்கு *

மெல்விரல்கள்சிவப்பெய்தத்தடவிஆங்கே

மென்கிளிபோல்மிகமிழற்றும்என்பேதையே. (2)

TNT 2.16

2067 கன்றுமேய்த்துஇனிதுகந்தகாளாய்! என்றும் *

கடிபொழில்சூழ்கணபுரத்துஎன்கனியே! என்றும் *

மன்றமரக்கூத்தாடிமகிழ்ந்தாய்! என்றும் *

வடதிருவேங்கடம்மேயமைந்தா! என்றும் *

வென்றசுரர்குலங்களைந்தவேந்தே! என்றும் *

விரிபொழில்சூழ்திருநறையூர்நின்றாய்! என்றும் *

துன்றுகுழல்கருநிறத்தென்துணையே! என்றும்

துணைமுலைமேல்துளிசோரச்சோர்கின்றாளே. (2)

TNT 2.17

2068 பொங்கார்மெல்லிளங்கொங்கைபொன்னேபூப்பப்

பொருகயல்கண்ணீரரும்பப்போந்துநின்று *

செங்காலமடப்புறவம்பெடைக்குப்பேசும்

சிறுகுரலுக்குஉடலுருகிச்சிந்தித்து * ஆங்கே

தண்காலும்தண்குடந்தைநகரும்பாடித்

தண்கோவலூர்பாடியாடக்கேட்டு *

நங்காய்! நங்குடிக்குஇதுவோநன்மை? என்ன

நறையூரும்பாடுவாள்நவில்கின்றாளே.